உ.பி.யில் தவணை முறையில் லஞ்சம் வாங்கிய மாநில சிறு பான்மையினர் நலத்துறை அதிகாரி கைது செய்யப்பட்டார்.
உ.பி.யில் பரேலி மாவட்டம் தானா பஹேடி கிராமத்தை சேர்ந் தவர் ஆரிஷ். இவர் ராஜ்புரா என்ற இடத்தில் இருந்து வசுந்தரா கிராமத்திற்கு மதரசாவை மாற்றுவது தொடர்பாக பரேலியில் உள்ள மாநில சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். இது தொடர்பான கோப்பு 6 மாதங்களாக நிறுத்திவைக்கப்பட்டதை தொடர்ந்து, பரேலி சிறுபான்மையினர் நலஅலுவலகத்தில் சீனியர்...
ஹரியானாவில் அரசியலமைப்பு அருங்காட்சியகம்: பார்வையாளர்களுக்கு உதவ ஐஐடி தயாரித்த வழிகாட்டி ரோபோ
admin - 0
ஹரியானா மாநிலத்தில் உள்ள ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகத்தில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்தியாவின் முதல் அரசியலமைப்பு அருங்காட்சியகத்தை மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா வரும் 26-ம் தேதி திறந்துவைக்கிறார். இந்த அருங்காட்சியகத்துக்கு வருகை தரும் பார்வையாளர்களுக்கு உதவுவதற்காக சென்னை ஐஐடி உருவாக்கியுள்ள அதிநவீன வழிகாட்டி ரோபா சென்னையில் நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
ஓ.பி.ஜிண்டால் சர்வதேச பல்கலைக்கழகம் ஹரியானா மாநிலத்தில் உள்ள சோனிபட் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 10 ஆயிரம் சதுர...
வீடுகளை இடிப்பது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது: உ.பி. புல்டோசர் இடிப்பு வழக்கில் உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு
admin - 0
உத்தரப்பிரதேசத்தில் கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடிக்கப்படும் சம்பவங்கள் தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதில், குற்றம்சாட்டப்பட்ட நபர்களின் வீடுகளை இடிப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என கருத்து தெரிவித்துள்ளது. மேலும் ஆக்கிரமிப்புக் கட்டிடங்களை இடிக்கும்போது, 15 நாட்களுக்கு முன்பாகவே நோட்டீஸ் வழங்கியிருக்க வேண்டும் என்பது உள்ளிட்ட வழிகாட்டு நெறிமுறைகளையும் வெளியிட்டுள்ளது.
பாஜக ஆளும் உத்தரப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் அல்லது குற்றவாளிகளின் வீடுகள் புல்டோசர் மூலம் இடிக்கப்பட்டு...
ஜார்க்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான முதல் கட்ட தேர்தலில் 64.86 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள 81 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நவம்பர் 13, 20-ம் தேதிகளில் 2 கட்டமாக தேர்தலை நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. அதன்படி முதல்கட்டமாக 43 தொகுதிகளுக்கு நேற்று வாக்குப்பதிவு நடைபெற்றது. 43 தொகுதிகளில் மொத்தம் 683 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் மற்றும் முன்னாள் எம்.பி. கீதா...
அல்-காய்தா தீவிரவாத அமைப்புக்கு நிதியுதவி வழங்கிய விவகாரம் தொடர்பாக கர்நாடகா உட்பட 6 மாநிலங்களில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) அதிகாரிகள் சோதனை நடத்தி உள்ளனர்.
அண்டை நாடான வங்கதேசத்தில் செயல்படும் அல்-காய்தா தீவிரவாதிகள் இந்தியாவில் கால் ஊன்ற முயற்சி மேற்கொள்வதாகவும், அல்-காய்தாவுக்காக இந்தியாவில் நிதி திரட்டி வருவதாகவும் உளவுத் துறை எச்சரிக்கை விடுத்து உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக கர்நாடகா, மேற்குவங்கம், பிஹார், திரிபுரா, அசாம், காஷ்மீர் ஆகிய 6...
மகாராஷ்டிராவின் யவத்மால் விமான நிலையத்தில் உத்தவ் தாக்கரே பைகளை சோதனையிட்டது வழக்கமான நடைமுறை என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறுகையில், “தேர்தல் பிரச்சாரத்திற்கு செல்லும் உத்தவ் தாக்கரேவின் பைகள் கடந்த 2 நாட்களில்...
மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தலில் காங்.சார்பில் 9 முஸ்லிம் வேட்பாளர்கள் போட்டி: அஜித் பவாரின் என்சிபி 5 பேருக்கு வாய்ப்பு
admin - 0
சட்டப்பேரவை தேர்தலுக்கு மகாராஷ்டிரா தயாராகி வரும் நிலையில் முஸ்லிம் வேட்பாளர்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது. இங்கு மொத்தப் போட்டியாளர்களில் 10% மட்டுமே முஸ்லிம்கள்.
மொத்தம் 288 உறுப்பினர்களை கொண்ட மகாராஷ்டிர சட்டப்பேரவைக்கு வரும் 20-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இங்கு போட்டியிடும் 4,136 வேட்பாளர்களில் 420 பேர் மட்டுமே முஸ்லிம்கள். இவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் (218 பேர்) சுயேச்சைகளாக போட்டியிடுகின்றனர்.
பிரதான கட்சிகள் முஸ்லிம்கள் சிலரையே களமிறக்கியுள்ளன. காங்கிரஸ் 9...
தேர்தல் நடத்தை விதி மீறல் புகார்: ராகுல், கார்கே மீது வழக்கு பதிவு செய்ய பாஜக வலியுறுத்தல்
admin - 0
மகாராஷ்டிராவில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் பிரச்சார பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி மற்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறி வருவதாக தேர்தல் ஆணையத்தில் பாஜக புகார் அளித்துள்ளது. மேலும், அவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்யவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக புகாரில் கூறப்பட்டுள்ளதாவது: பாஜகவுக்கு எதிராக தீங்கிழைக்கும் உள்நோக்கத்துடன் அவதூறான பிரச்சாரங்களை காங்கிரஸ் கட்சி மேற்கொண்டு...
திருமலையில் வரும் 17-ம் தேதி கார்த்திகை வனபோஜன உற்சவம் நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வனபோஜன உற்சவத்தை திருப்பதி தேவஸ்தானம் நடத்தி வருகிறது. இந்த ஆண்டு வரும் 17-ம் தேதி இந்த உற்சவம் நடைபெற உள்ளது. இதையொட்டி அன்று காலை சிறிய கஜவாகனத்தில் மலையப்பர் பார்வேட்டை மண்டபத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்படுவார். இதுபோல் ஒரு பல்லக்கில் ஸ்ரீதேவி, பூதேவியும் ஊர்வலமாக வருவர். அந்த...
முஸ்லிம்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு திட்டம் இல்லை: கர்நாடக முதல்வர் சித்தராமையா விளக்கம்
admin - 0
கர்நாடகாவில் வேலை வாய்ப்பில் முஸ்லீம்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் இல்லை என அம்மாநில முதல்வர் சித்தராமையா விளக்கம் அளித்துள்ளார்.
கர்நாடகாவில் முஸ்லீம்களுக்கு அரசு வேலை வாய்ப்பு மற்றும் ஒப்பந்தங்கள் ஒதுக்கீடு செய்வதில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட இருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரத்தில் இந்த நடவடிக்கையை விமர்சித்தார்.
அப்போது அவர் பேசுகையில், "காங்கிரஸ்...









