பெங்களூருவை சேர்ந்த பாஜக எம்எல்ஏ முனிரத்னா நாயுடு மீதான பாலியல் வன்கொடுமை வழக்கில் அவருக்கு உடந்தை யாக இருந்ததாக போலீஸ் இன்ஸ்பெக்டரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். பெங்களூருவில் உள்ள ராஜராஜேஷ்வரி நகர் பாஜக எம்எல்ஏவும் திரைப்பட தயாரிப் பாளருமான முனிரத்னா நாயுடு மீது 42 வயதான பெண் சமூக ஆர்வலர் பாலியல் புகார் தெரிவித்தார். முனிரத்னா நாயுடுவும் அவரது நண்பர்கள் கிரண் குமார், விஜய்குமார் உள்ளிட்ட 7 பேர் த‌ன்னை...
ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தலையொட்டி பொக்காரோ மாவட்டம் சந்திரபுரா என்ற இடத்தில் இண்டியா கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் மாநில காங்கிரஸ் பொறுப்பாளர் குலாம் அகமது மீர் பேசினார். அவர் பேசுகையில், “ஜார்க்கண்டில் எங்கள் கட்சி ஆட்சி அமைத்தால், டிசம்பர் 1-ம் தேதி முதல், காஸ் சிலிண்டரின் விலை, ரூ.450 ஆக குறைக்கப்படும். இந்துக்கள், முஸ்லிம்கள், எஸ்.சி., எஸ்.டி., ஊடுருவல்காரர்கள் என அனைவருக்கும் எந்தவித பாகுபாடுமின்றி வழங்கப்படும்’’ என்றார். குலாம்...
 திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு 11 டன் நகைகள் சொந்தமாக உள்ளன. இந்நிலையில் திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் அறங்காவலர் குழு தலைவரான மறைந்த ஆதிகேசவுலு நாயுடுவின் பேத்தியான சைதன்யா நேற்று 4 தங்க ஆரங்களை தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் பி.ஆர். நாயுடுவிடம் காணிக்கையாக வழங்கினர். 24 காரட் தங்கத்தில் செய்யப்பட்ட இந்த ஆரங்களில் வைரம், வைடூரியம், பச்சை, நீலக்கற்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ.2 கோடி.
கழுதைப் பண்ணை வைத்தால் பெரும்லாபம் அடையலாம் என ஏமாற்றி ஹைதராபாத்தில் சுமார் ரூ.100 கோடி வரை மோசடி செய்ததாக சென்னையை சேர்ந்த போலி கழுதைப் பண்ணை நிர்வாகிகள் மீது புகார் எழுந்துள்ளது. சமீப காலமாக கழுதைப் பால் உடல் நலத்துக்கு மிகவும் நல்லதுஎன மக்கள் நம்ப தொடங்கி உள்ளனர். இதனால் கழுதைப்பாலுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதை குடிப்பதின் மூலம் உடம்பில் நோய்எதிர்ப்பு சக்தி பெருகும் என மக்கள்நம்புகின்றனர். ஆனால், இதில்...
டெல்லி ரோகினி பகுதியில் 72 வயது முதியவர் வசிக்கிறார். தனியார் நிறுவனத்தில் இன்ஜினீயராக பணியாற்றிய அவர் சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்றார். அண்மையில் அவரது செல்போனில் ஓர் அழைப்பு வந்துள்ளது. வீடியோ காலில் பேசிய மர்மநபர், “தைவானில் இருந்து உங்களுக்கு பார்சல் வந்துள்ளது. அந்த பார்சலில் போதைப்பொருள் இருக்கிறது. மும்பை விமான நிலையத்தில் போதை பொருள் பார்சல் சிக்கி உள்ளது. போதைபொருள் கடத்தல்வழக்கில் உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம்"...
சாமானிய மக்களின் ஆவணங்களைக் கொண்டு வங்கிக் கணக்குத் தொடங்கி ரூ.100 கோடி பண மோசடியில் ஈடுபட்டதாக மாலேகானைச் சேர்ந்த சிராஜ் அகமது ஹாரூன் என்பவர் மீது கடந்த வாரம் காவல் துறை வழக்குப் பதிவு செய்தது. இந்நிலையில், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தில் அவர் தொடர்புடைய 23 இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனையில் ஈடுபட்டது. சிராஜ் அகமது டீ மற்றும் குளிர்பானம் விற்பனை உள்ளிட்ட வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர். இவர்...
டெல்லியில் கடந்த 2 நாட்களாக காற்று மாசு மிக அதிகமாக இருந்தது. நேற்று மிக மோசமான நிலைக்கு சென்று கடும் பனிமூட்டம் நிலவியது. டெல்லியில் 39 காற்று மாசு கண்காணிப்பு மையங்கள் உள்ளன. இவற்றில் 32 மையங்களில் காற்று மாசு தரக் குறியீடு 400-க்கு மேல் பதிவாகியது. இது மிக மோசமான காற்று மாசு நிலை. நேற்று முன்தினம் 334-ஆக இருந்த காற்று மாசு அளவு நேற்று காலை...
தலைநகர் டெல்லியில் உரிமம் இன்றி துப்பாக்கி வைத்திருத்தல், திருட்டு, சட்டவிரோத மதுபானம், போதைப் பொருள் பயன்பாடு உள்ளிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு எதிராக ‘ஆபரேஷன் கவச்’ என்ற பெயரில் டெல்லி போலீஸார் 24 மணி நேர சோதனை நடத்தினர். டெல்லியில் 874 இடங்களில் நவம்பர் 12 முதல் 13 வரை டெல்லி போலீஸார் இந்த நடவடிக்கையை மேற்கொண்டனர். இதில் 1,224 பேர் சிக்கினர். இவர்களில் 700-க்கும் மேற்பட்டோர் கைது...
கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள நர்சிபுராவில் ரூ.470 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களை முதல்வர் சித்தராமையா நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் சித்தராமையா பேசியதாவது: எனது தலைமையிலான கர்நாடக அரசை கவிழ்க்க பாஜக பல்வேறு வழிகளில் முயன்று வருகிறது. என் மீதும் எனது ஆதரவாளர்கள் மீதும் பொய் வழக்குகளை போட்டு அச்சுறுத்தி வருகிறது. பாஜகவை சேர்ந்த மூத்த தலைவர்கள் சிலர், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 50 பேரிடம்...
கொச்சி: கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் முனம்பம் புறநகர் பகுதியில் சுமார் 600 குடும்பத்தினருக்கு சொந்தமான 404 ஏக்கர் நிலத்துக்கு வக்பு வாரியம் உரிமை கோருவதாகக் கூறப்படுகிறது. இதைக்கண்டித்து அந்த நிலத்தின் உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில், மத்திய அமைச்சர் ஷோபா கரந்தலாஜே முனம்பம் நகரில் போராட்டத்தில் ஈடுபட்டிருப்பவர்களை சந்தித்தபின் கூறியதாவது: வக்பு நிலம் என்ற பெயரில் ஏழைகள் மற்றும் விவசாயிகளின் நிலத்தைப் பறிக்க நில மாபியாக்கள் முயற்சி...