முன்னாள் மத்திய அமைச்சரும் திருவனந்தபுரம் மக்களவை தொகுதி காங்கிரஸ் எம்.பி.யுமான சசி தரூர் சமீப காலமாக பிரதமர் நரேந்திர மோடியை புகழ்ந்து பேசி வருகிறார். இது காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. காங்கிரஸ் கட்சிக்கும் அவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ள நிலையில், சசி தரூர் எக்ஸ் தளத்தில் நேற்று கூறியதாவது:
டெல்லியில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில், அழைப்பின் பேரில் நான் பங்கேற்றேன். அதில் பேசிய பிரதமர்...
மாவோயிஸ்ட்களை ஒழிக்கும் நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக உள்ளது. தேடுல் வேட்டைகள் நடத்தப்படும் அதே நேரத்தில், சரணடையும் மாவோயிஸ்ட்களுக்கு மறுவாழ்வுக்கு தேவையான உதவிகளும் அளிக்கப்படுகின்றன. இதனால் சரணடையும் மாவோயிஸ்ட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
ஜார்க்கண்ட் மாநிலத்தின் லதேகர் மாவட்டத்தில் போலீஸார் முன்னிலையில், 2 மாவோயிஸ்ட்கள் சரணடைந்தனர். அவர்களில் ஒருவர் கும்லா மாவட்டத்தைச் சேர்ந்த ராகேஷ் ஜி என்ற பிரஜேஷ் யாதவ். இவர் மாவோயிஸ்ட் அமைப்பில் துணை மண்டல கமாண்டராக இருந்தார்....
டெல்லி செங்கோட்டையில் கடந்த ஜனவரி 26ம் தேதியே தாக்குதல் நடத்த திட்டமிட்டதாகவும் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
டெல்லி குண்டுவெடிப்பு வழக்கு தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து காவல் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: ”கைது செய்யப்பட்டுள்ள மருத்துவர் முஜம்மிலிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட செல்போனை ஆய்வு செய்து வருகிறோம். குறிப்பாக, அவர் தாக்குதலுக்கு முன்பு யாருடன் தொடர்பு கொண்டார் என்பதை ஆய்வு...
டெல்லி குண்டு வெடிப்பு சம்பவத்தில், புல்வாமாவைச் சேர்ந்த முஜம்மில், லக்னோவைச் சேர்ந்த ஷாகின், காஷ்மீரின் குல்காமை சேர்ந்த ஆதில், புல்வாமாவைச் சேர்ந்த உமர் நபி, ஹைதராபாதைச் சேர்ந்த அகமது மொஹியுதீன், நகர் மகாராஜா ஹரிசிங் மருத்துவமனை டாக்டர் தஜமுல் ஆகிய 6 மருத்துவர்கள் சம்பந்தப்பட்டுள்ளனர். இதில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுகுறித்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் இந்த சம்பவத்தில் ஹரியானாவில் உள்ள அல் பலா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த...
புல்வாமா தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவரின் மனைவி சில வாரம் முன்பு ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பில் சேர்ந்தது தெரியவந்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீரின் புல்வாமா நகரில் பாதுகாப்புப் படையினரின் வாகனங்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 41 வீரர்கள் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட உமர் பாருக்கின் (என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டார்) மனைவி அபிரா பிபி, ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பின் மகளிர் பிரிவான ஜமாத்-உல்-மொமினட்டில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு...
டெல்லியில் குண்டு வெடித்த காருடன் சுற்றிவந்ததாக கருதப்படும் மற்றொரு கார் பரிதாபாத் அருகே பறிமுதல் செய்யப்பட்டது.
டெல்லியில் கடந்த திங்கட்கிழமை மாலை ஒரு கார் வெடித்துச் சிதறியது. ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதியின் தற்கொலை தாக்குதலாக இது கருதப்படுகிறது. இது தொடர்பாக சுமார் 200 சிசிடிவி கேமராக்களின் பதிவுகள் ஆராயப்பட்டு வருகின்றன. இதில் குண்டு வெடித்த ஹுண்டாய் ஐ20 காருடன் சிவப்பு நிற 'ஈகோ ஸ்பாட்’ காரும் சுற்றி வந்தது...
டெல்லியில் தாக்குதல் நடத்துவதற்கு முன்னர் டாக்டர் உமர் முகமது 3 மணி நேரம் காரை விட்டு இறங்காதது ஏன் என்பது குறித்து பல்வேறு சந்தேகங்கள் எழுந்துள்ளன.
டெல்லி செங்கோட்டை அருகே கடந்த திங்கட்கிழமை கார் வெடிகுண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர். இதில் டாக்டர் உமர் முகமது கார் வெடி குண்டை வெடிக்க செய்ததில் உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தி வருகிறது.
குறிப்பாக, பரிதாபாத்தில்...
டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்தனர். அவர்களுடைய உடல்கள் எல்என்ஜேபி மருத்துவமனையில் பிரேதப் பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் உயிரிழந்தோரின் குடும்பத்தார் நேற்று காலை முதல் மருத்துவமனை வாயிலில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருந்தனர். மருத்துவமனையிலுள்ள சவக்கிடங்குக்கு அதிக போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஏராளமான போலீஸாரும் மருத்துவமனையில் குவிக்கப்பட்டிருந்தனர். உயிரிழந்தோரின் உடல்கள் எப்போது தங்களுக்குக் கிடைக்கும் என்ற தகவலுக்காக மருத்துவமனையில் அவர்கள் அங்குமிங்கும் ஓடிக் கொண்டிருந்தனர்.
சவக்கிடங்கில் பணியாற்றும் மருத்துவமனை...
டெல்லியில் கார் வெடிப்பு சம்பவத்தின்போது நிலநடுக்கம் ஏற்பட்டது போன்ற பயங்கர அதிர்வை உணர்ந்ததாக அங்கிருந்த பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து சாந்தினி சவுக் பகுதியில் பேக் விற்பனை செய்யும் கரம்ஜோத் கூறுகையில், “செங்கோட்டை பகுதியிலிருந்து பலர் என்னை நோக்கி வேகமாக ஓடிவந்தனர். ஒவ்வொருவரின் முகத்திலும் பீதி தெரிந்தது. நானும் பாதுகாப்புக்காக குருத்வாராவை நோக்கி ஓடி உயிர்தப்பினேன்’’ என்றார்.இந்த சம்பவத்தை கண்ணால் பார்த்த ஜெயின் மந்திர் அருகே வசிக்கும் 45 வயதான கர்மயதா...
டெல்லி செங்கோட்டை அருகே நேற்று முன்தினம் நடந்த கார் வெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கார் வெடித்ததில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 13-ஆக உயர்ந்துள்ளது. மேலும் படுகாயமடைந்த 20-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் இறந்த 5 ஆண்களைச் சேர்ந்த 5 குடும்பங்களின் எதிர்காலக் கனவுகள் கலைந்து போய்விட்டது. இறந்தவர்களில் பிஹாரை சேர்ந்த கார் டிரைவர் பங்கஜ் சைனியும்(22) ஒருவர். இவர்...










