ஆந்திராவில் அடுத்த 5 ஆண்டுகளில் அனைத்து குடும்பங்களுக்கும் வீட்டுமனை: சந்திரபாபு நாயுடு உறுதி
admin - 0
ஆந்திராவில் வீட்டுமனை இல்லாத அனைத்து குடும்பங்களுக்கும் அடுத்த 5 ஆண்டுகளில் வீட்டுமனை வழங்கப்படும் என சந்திரபாபு நாயுடு உறுதி கூறினார்.
ஆந்திராவில் தெலுங்கு தேசம் கூட்டணி ஆட்சி அமைத்து நேற்றுடன் 150 நாட்கள் ஆகிறது. இதையொட்டி நேற்றைய சட்டப்பேரவை கூட்டத்தில் முதல்வர் சந்திரபாபு நாயுடு பேசியதாவது: சுமார் 40 ஆண்டுகளாக மக்கள் என்னை ஆதரித்து வருகின்றனர். இதற்காக மக்களுக்கு பணியாற்றநான் கடமைப்பட்டுள்ளேன். இத்தனை வருடங்களில் பல இன்னல்கள் கடந்து வந்துள்ளேன்.
செய்யாத...
வளர்ச்சி பணிகளுக்கு மக்கள் வாக்களிப்பர் என்பதால், மகாயுதி கூட்டணி அமோக வெற்றி பெறும் என மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
மகாராஷ்டிராவில் சட்டப் பேரவை தேர்தல் நேற்று நடைபெற்றது. முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தானேவில் உள்ள கோப்ரி - பச்பகாடி தொகுதியில் உள்ள வாக்குச் சாவடியில் தனது குடும்பத்தினருடன் வாக்களித்தார். இத்தொகுதியில் அவர் மீண்டும் போட்டியிடுகிறார். தனது வாக்கை பதிவு செய்தபின் ஏக்நாத் ஷிண்டே அளித்த பேட்டியில்...
சத்தீஸ்கர் மசூதிகளில் சொற்பொழிவுக்கு அனுமதி அவசியம்: வக்பு வாரிய உத்தரவுக்கு முஸ்லிம்கள் எதிர்ப்பு
admin - 0
சத்தீஸ்கர் உள்ளிட்ட நாடு முழுவதிலும் உள்ள மசூதிகளில் வெள்ளிக்கிழமை சிறப்பு தொழுகைகள் நடக்கும். அப்போது இமாம் அல்லது அப்பகுதி முத்தவல்லிகள் இஸ்லாமிய சொற்பொழிவு ஆற்றுவார்கள். அதற்கு அனுமதி அவசியம் என்று சத்தீஸ்கர் வக்பு வாரியம் கூறியுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சத்தீஸ்கர் வக்பு வாரிய தலைவர் டாக்டர் சலீம் ராஜ் வெளியிட்ட உத்தரவில், “மசூதிகளில் தொழுகைக்கு பின் சொற்பொழிவாற்ற இனி வக்பு வாரியத்தின் அனுமதி அவசியம். மீறுபவர்கள் மீது...
மகாராஷ்டிரா, ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல்களில் பாஜக தலைமையிலான அணி வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாக தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மகாராஷ்டிராவின் புதன்கிழமை நடந்து முடிந்த தேர்தலைப் பொறுத்தவையில், மகாயுதி கூட்டணியில் பாஜக 149, சிவசேனா (முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணி) 81, தேசியவாத காங்கிரஸ் (துணை முதல்வர் அஜித் பவார் அணி) 59 தொகுதிகளில் போட்டியிட்டன. மகா விகாஸ் அகாடியில் காங்கிரஸ் 101, சிவசேனா (உத்தவ்...
அருணாச்சல பிரதேச மாநிலத்தில் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள் இணைந்து கூட்டுப் பயிற்சியை நடத்தின.
இதுதொடர்பாக பாதுகாப்புத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் லெப்டினன்ட் கர்னல் அதுல் ஸ்ரீதரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்திய ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகள் இணைந்து அருணாச்சல பிரதேசத்தின் ஷி-யோமி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி முதல் 17-ம் தேதி வரை 4 நாள் கூட்டுப் பயிற்சியை வெகு சிறப்பான முறையில் நடத்தின.
இந்தப் பயிற்சிக்கு...
பஞ்சாப் மாநிலம் கிதர்பஹா சட்டப்பேரவைத் தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இரு தினங்களுக்கு முன்பு இந்த தொகுதியில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு ஆதரவாக முன்னாள் முதல்வரும் ஜலந்தர் மக்களவை தொகுதி எம்.பி.யுமான சரண்ஜித் சிங் சன்னி பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது, பெண்கள் மற்றும் இரு சமுதாயத்தினர் குறித்து இழிவாக கருத்து தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. இதையடுத்து, மகளிர் அமைப்பினரும் ஆம் ஆத்மி, பாஜக உள்ளிட்ட எதிர்க்கட்சியினரும்...
கேரள மாநிலம் பாலக்காடு சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தல் இன்று நடைபெறுகிறது.
இதுகுறித்து தேர்தல் அதிகாரி சித்ரா நேற்று கூறியதாவது: போலி வாக்காளர்கள் மற்றும் வாக்காளர் பட்டியலில் இரட்டை பதிவுகள் செய்ததாக எழுந்த புகார்களின் அடிப்படையில், விசாரணை நடத்தப்பட்டு, அத்தகைய நபர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இவர்களின் பட்டியலை வாக்குச் சாவடி தலைமை அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம். பட்டியலில் உள்ளவர்கள் வாக்களிக்க முன்வந்தால், அவர்களை வாக்களிக்க அனுமதிப்பதற்கு முன் அவர்களின் புகைப்படம் மற்றும் எழுத்துப்பூர்வ...
கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தர்மேந்திர குமார் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சித்ரதுர்காவில் உள்ள ஹொலேகெரே சாலையில் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் நேற்று அங்கு சோதனை நடத்தியதில் ஷேக் சைஃபர் ரோஹ்மான் (33), முகமது சுமன் ஹூசேன் அலி (34), அன்வர் மஜ்ருல் (24), அஜில் ஷேக் (25), முகமது சாகிப் (31), ஃபகத் சனோவர் (35)...
மகாராஷ்டிர தேர்தலில் தாராவி அரசியல்: ஆசியாவின் பெரிய குடிசைப் பகுதியின் பின்னணியில் தமிழர்கள்
admin - 0
ஆசியாவின் மிகப்பெரிய மற்றும் உலகின் மூன்றாவது பெரிய குடிசைப் பகுதியாக மும்பையின் தாராவி உள்ளது. ஆங்கிலேயர் காலத்தில் உருவான இதன் வரலாற்று பின்னணியில் இரண்டு காரணங்கள் கூறப்படுகின்றன. இதில் ஒன்றாக, 1896-ல் உலகம் முழுவதிலும் பல உயிர்களை பறித்த பிளேக் நோய் தமிழகத்திலும் பரவியது. இதில் ஏற்பட்ட உயிரிழப்புகளால் மக்கள் இடம்பெயரத் தொடங்கினர். தமிழகத்தின் வட மாவட்டங்களில் இருந்து புறப்பட்ட தமிழர் குடும்பங்கள் மும்பை புறநகரில் வந்து தங்கியுள்ளன....
தெலங்கானாவில் 4 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெற்றோர் மற்றும் உறவினர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் கம்மம் மாவட்டம், எம்.வி.பாளையம் கிராமத்தை சேர்ந்த வினோத்- லாவண்யா தம்பதியின் ஒரே மகள் பிரஹர்ஷிகா (4). இந்நிலையில் லாவண்யா நேற்று முன்தினம் க்ரூப்-3 அரசுப் பணிக்கான தேர்வு எழுதச் சென்றார். அப்போது, சிறுமி பிரஹர்ஷிகா தனது தாத்தா, பாட்டியுடன் வீட்டில் இருந்தார். லாவண்யா தேர்வு எழுதிவிட்டு மதியம் 1 மணிக்கு...









