தமிழகம், ஆந்திரா, ஒடிசா, ஜம்மு-காஷ்மீர், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் சூரிய ஒளி மின்சார விநியோக ஒப்பந்தங்களை பெறுவதற்காக இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2,100 கோடி லஞ்சம் கொடுத்ததாக தொடரப்பட்ட வழக்கில் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்காவின் நியூயார்க் நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டுள்ளது. அதானி குழும நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி (62), உலக பணக்காரர் பட்டியலில் 17-வது இடத்திலும், இந்திய அளவில் 2-வது இடத்திலும் உள்ளார். இந்த...
கடந்த 2006-ம் ஆண்டு மத்திய நிதியமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, ஏர்செல் நிறுவனத்தில் மலேசியாவின் மேக்சிஸ் நிறுவனம் ரூ.3,500 கோடி முதலீடு செய்ய அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் அனுமதி கோரியது. இதில் ப.சிதம்பரம் விதிகளுக்கு புறம்பாக அனுமதி வழங்கியதாகவும் இதன் மூலம் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் பலன் அடைந்ததாகவும் புகார் எழுந்தது. இது தொடர்பாக ப.சிதம்பரம், கார்த்தி சிதம்பரம் உள்ளிடோருக்கு எதிராக சிபிஐயும் அமலாக்கத் துறையும் தனித்தனியே...
உத்தர பிரதேசத்தில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்ற கர்ஹல் தொகுதியில், இளம் பெண் ஒருவரின் உடல் சாக்கு பையில் கிடந்தது. பாஜக.வுக்கு ஆதரவு தெரிவித்ததால் சமாஜ் வாடி கட்சியைச் சேர்ந்த உள்ளூர் நபர் இந்த கொலையை செய்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். உத்தர பிரதேசத்தில் கதேஹரி, கர்ஹல், மிராபூர், காஜியாபாத் உட்பட 9 சட்டப்பேரவை தொகுதிகளில் நேற்று இடைத் தேர்தல் நடைபெற்றது. இந்நிலையில் கர்ஹல் தொகுதியில் இளம் பெண்...
மணிப்பூரில் அமலில் இருக்கும் 'இன்னர் லைன் பெர்மிட்' (ஐஎல்பி) முறைக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் அம்மாநில அரசு பதில் அளிக்க உச்ச நீதிமன்றம் 8 வார கால அவகாசம் அளித்துள்ளது. அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து, மிசோரம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து ஐஎல்பி அமலில் இருக்கும் நான்காவது மாநிலம் மணிப்பூர் ஆகும். இந்த மாநிலங்களுக்கு செல்ல நாட்டின் பிற மாநிலங்களை சேர்ந்தவர்கள் உட்பட வெளியாட்கள் அனுமதி பெற வேண்டும். இந்நிலையில் ஐஎல்பி முறைக்கு...
உத்தர பிரதேசத்தில் 9 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தல் நடைபெற்றது. ஒரு வாக்குச் சாவடியில் வாக்காளர்களின் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ஆதார் அட்டையை பரிசோதிக்கும் பணியில் போலீஸார் ஈடுபட்டிருந்தனர். இவர்கள் சிலரை வாக்களிக்க விடாமல் திருப்பி அனுப்பியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் சமூக வலைதளத்தில் புகார் செய்திருந்தார். இந்தப் புகாரை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்களும் பரிசீலித்தனர். புகார் உண்மை...
காற்று மாசின் அளவு அபாய கட்டத்தை தாண்டியுள்ளதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அலுவலகங்களில் பணியாற்றும் அரசு ஊழியர்களில் 50 சதவீதம் பேர் வீட்டில் இருந்தே பணிபுரியும்படி டெல்லி அரசு உத்தரவிட்டுள்ளது. வாகன போக்குவரத்து, கட்டுமான நடவடிக்கை, பயிர்கழிவுகளை எரிப்பது போன்றவற்றின் காரணமாக கடந்த சில மாதங்களாக தலைநகர் டெல்லியில் காற்று மாசின் அளவு அபாய நிலையில் காணப்படுகிறது. இதனால், அங்குள்ள மக்கள் மூச்சுவிடுவதற்கே சிரமப்படும் நிலை காணப்படுகிறது. இந்த நிலையில், மாசை...
வன்முறை பாதித்த பெல்தங்கா பகுதிக்கு செல்ல முயன்றதாக மேற்கு வங்க பாஜக தலைவர் சுகந்தா மஜும்தார் போலீஸாரால் கைது செய்யப்பட்டார். மேற்கு வங்க மாநிலம் முர்ஷிதாபாத்தை ஒட்டி அமைந்துள்ள பெல்தங்கா பகுதியில் கடந்த சனிக்கிழமை இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலால் வன்முறை வெடித்தது. இந்த சம்பவத்தில் 17 பேர் காயமடைந்தனர். இதையடுத்து அங்கு போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் வன்முறைச் சம்பவங்கள் நிகழாமல் இருப்பதற்காக அப்பகுதியில் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று...
எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவு தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் மீது நடவடிக்கை எடுக்குமாறு கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிடம் மணிப்பூர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ப.சிதம்பரம் 'எக்ஸ்' வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் பிராந்திய சுயாட்சிக்கு ஆதரவான கருத்தை கூறியிருந்தார். பிறகு அப்பதிவை நீக்கிவிட்டார். இந்நிலையில் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு மணிப்பூர் காங்கிரஸ் தலைவர்கள் எழுதிய கடிதத்தில், “மணிப்பூர் விவகாரம் தொடர்பான...
தன்னுடைய புகைப்படங்களை மனைவியும், காங்கிரஸ் எம்எல்ஏவுமான அனுபா முஞ்சாரே பயன்படுத்துவதற்கு மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த பகுஜன்சமாஜ் கட்சித் தலைவர் கங்கர் முஞ்சாரே ஆட்சேபம் தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் பாலகாட் பகுதியைச் சேர்ந்தவர் கங்கர் முஞ்சாரே. இவரது மனைவி அனுபா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர். பாலகாட் தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். இந்நிலையில் கணவன், மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இதனிடையே நேற்று தனது பிறந்தநாளை...
பாரத ஸ்டேட் வங்கிக் கிளையின் லாக்கரை உடைத்து அதில் இருந்த ரூ.15 கோடி மதிப்புள்ள நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளன. ஆந்திர மாநிலம் வாரங்கல் ராயபர்த்தி பகுதியில் பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கிளை உள்ளது. இக்கிளைக்கு பாதுகாவலர் இல்லாததால், இங்கு கடந்த திங்கட்கிழமை நள்ளிரவு கொள்ளை கும்பலைச் சேர்ந்தவர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர். முன்னதாக அந்த வங்கியின் அலாரத்துக்கான வயரை துண்டித்துள்ளனர். அதன் பின்னர், வங்கியில் இருந்த ஜன்னலின்...