Google search engine
பெண் மருத்துவர் கொலை தொடர்பாக முன்னாள் கிரிக்கெட் வீரரும் ஆம் ஆத்மி எம்.பி.யுமான ஹர்பஜன் சிங் மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த போஸ் மற்றும் முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோருக்கு திறந்த மடல் எழுதிய நிலையில் மேற்கு வங்க ஆளுநர் அவசர ஆலோசனைக் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதனை ஆளுநர் மாளிகை ஊடகப் பிரிவு உறுதி செய்துள்ளது. இது தொடர்பாக எக்ஸ் சமூக வலைதளத்தில் ஆளுநர் மாளிகை ஊடகப் பிரிவு...
ரக்‌ஷா பந்தன் பண்டிகையையொட்டி ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் வாழ்த்துகளை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளனர். வடமாநிலங்களில் மிகவும் பிரபலமான ரக்‌ஷா பந்தன் பண்டிகை இன்று (ஆக.19) கொண்டாடப்படுகிறது. இது அண்ணன் - தங்கைகளுக்கு இடையிலான பாசப் பிணைப்பை பறைசாற்றும் வகையில் ஒவ்வோர் ஆண்டும் கொண்டாடப்பட்டு வருகிறது.இந்த பண்டிகையை முன்னிட்டு காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி இருவரும் தங்கள் எக்ஸ் தள பக்கத்தில் தங்களுடைய புகைப்படத்தை...
“மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. மேலும், அரசு நிர்வாகத்தை ஆர்எஸ்எஸ். மயமாக்கும் பாஜக அரசின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும்” என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மோடி தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு, சமூக நீதியை குழி தோண்டி புதைக்கும் அடாத செயலில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது....
அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம் என்ற பெயரில் 100 நாள்போராட்டத்தை டெல்லியில் காங்கிரஸ் கட்சி தொடங்கியுள்ளது. இந்த போராட்டத்தை காங்கிரஸ் எம்.பி. அஜய் மாக்கன் டெல்லியில் நேற்று தொடங்கி வைத்துகூறியதாவது: சம்விதான் ரக் ஷா (அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்போம்) என்ற பெயரில் டெல்லி முழுவதும் இந்த 100 நாள் போராட்டம் நடத்தப்படும். வரும் நவம்பர் 27-ம்தேதி வரை டெல்லியின் 70 சட்டப் பேரவைத் தொகுதிகளிலும் இந்தப் போராட்டம் நடைபெறும். படிப்படியாக நாடு...
கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்துக்கு நீதி கேட்டு, நாடு முழுவதும் மருத்துவர்கள் இன்று (ஆக.17, சனிக்கிழமை) காலை முதல் 24 மணிநேர வேலை நிறுத்தத்தைத் தொடங்கியுள்ளனர். அத்தியாவசியமான மருத்துவ சேவைகள் மற்றும் அவசர சிகிச்சைகள் தவிர மற்ற மருத்துவ சிகிச்சைகள் சனிக்கிழமை காலை 6 மணி முதல் ஞாயிறு காலை 6 மணி வரை மேற்கொள்ளப்படாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டின் பல பகுதிகளிலும்...
உத்தரப் பிரதேசத்தில் தண்டவாளத்தில் வைக்கப்பட்ட மர்மப் பொருளால் வாரணாசி - சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலின் (19168) 22 பெட்டிகள் தடம்புரண்டன. இந்த விபத்தில் உயிரிழப்பு ஏதும் ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. இருப்பினும் இந்தச் சம்பவம் குறித்து தீவிர விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார். உத்தரப் பிரதேசத்தின் கான்பூர் அருகே இன்று (சனிக்கிழமை) அதிகாலை 2.30 மணியளவில் வாரணாசி - சபர்மதி இடையேயான சபர்மதி எக்ஸ்பிரஸ்...
மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார். க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் உள்ள விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட‌து. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட,...
பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தம் இறுதிப் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்ட இந்திய வீராங்கனை வினேஷ் போகத், இன்று (சனிக்கிழமை) டெல்லி திரும்பினார். விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பாரிஸ் ஒலிம்பிக் மல்யுத்தத்தில் மகளிருக்கான 50 கிலோ எடை பிரிவின் இறுதிப்போட்டியில் 100 கிராம் எடை அதிகரித்திருப்பதாக கூறி வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் வினேஷ் போகத்தின் பதக்க கனவு நொறுங்கியது. அவர், இறுதிப் போட்டிக்கு...
ஹரியாணா, ஜார்க்கண்ட், மகாராஷ்டிரா ஆகிய 3 மாநில சட்டப்பேரவை தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிடுகிறது. இன்று மாலை 3 மணிக்கு இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நீண்ட எதிர்பார்ப்பை பூர்த்தியாக்கும் வகையில் ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைத் தேர்தல் தேதியும் இன்று அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது. ஏனெனில் ஊடக சந்திப்புக்கான தேர்தல் ஆணைய அழைப்பில் எந்தெந்த மாநிலங்களின் சட்டப்பேரவைத்...
‘உத்தர பிரதேசத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் செல்வாக்கு சமீபத்தில் அதிகரித்தது, இங்குள்ள குற்றவாளிகளின் பலத்தை அதிகரித்துள்ளது’’ என மாநிலங்களவை பாஜக எம்.பி சுதன்ஷு திரிவேதி குற்றம் சாட்டியுள்ளார். பாஜக தேசிய செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சுதன்ஷு திரிவேதி அளித்த பேட்டியில் கூறியதாவது: பாலியல் வன்கொடுமை மற்றும்பாலியல் வன்கொடுமை முயற்சி வழக்கில் சிக்கிய 2 பேர் சமாஜ்வாதி கட்சியைச் சேர்ந்தவர்கள். குற்றவாளிகளை...