Google search engine
சனாதன தர்மம் இருப்பதால் நெரு க்கடிகளால் இந்திய தேசத்தை அழிக்க முடியாது என ராஷ்டிரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) தலைவர் மோகன் பாகவத் தெரிவித்துள்ளார். ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பால்நாத் ஆசிரமத்துக்கு நேற்று முன்தினம் சென்ற அவர் அங்கு நடத்தப்பட்ட மகாமிருத்யுஞ்சய் மகாயாகத்தில் பங்கேற்றார். அப்போது அவர் கூறியதாவது: நெருக்கடிகளுக்கு இந்தியாவை அழிக்கும் சக்தி இல்லை. ஏனெனில் இந்தியா சனாதன தர்மத்துடன் உள்ளது. இந்தியா வெறும் நிலம் அல்ல. சமூகத்தில்...
தெலங்கானா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சி, ‘ஹைட்ரா’ எனும்அமைப்பை உருவாக்கி அதன் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை அகற்றி வருகிறது. இந்நிலையில், நல்கொண்டா மாவட்ட பாரத் ராஷ்டிர சமிதி(பிஆர்எஸ்) கட்டிடம் கடந்த சந்திரசேகர ராவ் ஆட்சியின்போது, சட்டவிரோதமாகக் கட்டப்பட்டது என தற்போதைய சாலை மற்றும்கட்டிட துறை அமைச்சர் கோமிட்டிரெட்டி வெங்கட்ரெட்டி அரசின் கவனத்துக்கு கொண்டு சென்றார். இதுகுறித்து பிஆர் எஸ் கட்சியினர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம்...
கிரிக்கெட் விளையாட இந்தியாவந்துள்ள வங்கதேச ஆண்கள்அணிக்கு எதிர்ப்பு வலுக்கிறது. வட மாநிலங்களில் இவர்கள்விளையாட இந்து மகாசபாவினரும், உத்தர பிரதேசத்தின் சர்ச்சை சாது யத்தி நரசிம்மானந்தாவும் எச்சரித்துள்ளார். கடந்த மாதம் வங்கதேசத்தில் மாணவர்கள் நடத்திய போராட்டத்தால் ஷேக் ஹசீனாவின் அரசு ஆகஸ்ட் 5 -ல் ஆட்சியை இழந்தது. இந்த கிளர்ச்சியில் வங்கதேசத்தின் சிறுபான்மையினரான இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. மாணவர்களின் கிளர்ச்சியில் உயிர்தப்பிய அந்நாட்டின் பிரதமர்ஷேக் ஹசீனா தன் குடும்பத்துடன் இந்தியாவில்...
குழந்தைகளுக்கான புதிய ஓய்வூதியத் திட்டத்தை மத்திய நிதிஅமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தொடங்கி வைத்தார். 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்காக ‘என்பிஎஸ் வாத்சல்யா' திட்டத்தை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த ஜூலை மாதம்அறிமுகப்படுத்தினார். இந்தத் திட்டத்தின்படி, 18 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்டிருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் எதிர்கால பாதுகாப்புக்காக ஓய்வூதியக் கணக்கில் பணத்தை சேமித்து வரலாம். குழந்தைகளுக்கு 18 வயது நிரம்பியதும், அவர்கள்அந்தப் பணத்தை...
மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி தலைமையிலான அரசு, கொல்கத்தாவின் போலீஸ் கமிஷனராக மனோஜ் குமார் வர்மாவை நியமித்துள்ளது. 1998-ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த இந்திய காவல் பணி அதிகாரியான வர்மா, மேற்கு வங்க சட்டம் - ஒழுங்கு கூடுதல் இயக்குநர் ஜெனரலாக பணியாற்றி வந்தார். கொல்கத்தா பயிற்சி மருத்துவர் படுகொலைக்கு நீதி வேண்டி போராட்டம் நடத்தி வரும் மருத்துவ மாணவர்களுடன் திங்கள்கிழமை இரவு சந்திப்பு நடத்தியதற்கு பின்பு கோயலை கொல்கத்தா...
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப் பதிவு 24 தொகுதிகளில் இன்று நடைபெறுகிறது. ஜம்மு காஷ்மீரில் மொத்தம் உள்ள 90 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு3 கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. இதில், அனந்த்நாக், சோபியான், தோடா, ராம்பன் உட்பட 7 மாவட்டங்களில் உள்ள24 தொகுதிகளில் இன்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இத்தொகுதிகளில் 219 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 5.66 லட்சம் இளைஞர்கள் உட்பட சுமார் 23.27 லட்சம் பேர் வாக்களிக்க தகுதி...
ஒடிசா அரசின் சுபத்ரா திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தில் 25 லட்சம்பெண்களுக்கான நிதியுதவியை அவர் வழங்கினார். சமீபத்தில் நடந்த ஒடிசா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக ஆட்சியை பிடித்தது. மோகன் சரண் மாஜி முதல்வராக பதவியேற்றார். ஒடிசா தேர்தலின்போது, பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 வீதம் 5 ஆண்டுக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்கப்படும் என்று பாஜக தரப்பில் வாக்குறுதி அளிக்கப்பட்டது. சுபத்ரா என்று பெயரிடப்பட்ட இந்த...
020-ம் ஆண்டு டெல்லி கல்காஜி தொகுதியில் ஆம் ஆத்மி சார்பில் முதல் முறையாக போட்டியிட்டு எம்எல்ஏ-வாக தேர்வு செய்யப்பட்டஆதிஷி தற்போது டெல்லி முதல்வராகி உள்ளார். ஆம் ஆத்மி கட்சியில் அர்விந்த் கேஜ்ரிவால், மணீஷ் சிசோடியா போன்ற முக்கிய தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது கட்சியை கட்டுக்கோப்பாக வழி நடத்தியதில் ஆதிஷிக்கு முக்கிய பங்கு உண்டு. நெருக்கடியான அந்த காலகட்டங்களில் அவரின் செயல்பாடு பலரின் பாராட்டை பெற்றது. பல முக்கிய துறைகளை வைத்துக்கொண்டு...
 நாடாளுமன்ற மக்களவை, சட்டப்பேரவை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் விதமாக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்தை பாஜக தனது மூன்றாவது ஆட்சிக் காலத்தில் அமல்படுத்தும் என தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தது. பிரதமர் நரேந்திர மோடி கடந்த மாதம் தனது சுதந்திர தின உரையில் இந்த திட்டத்தை வலியுறுத்தி இருந்தார். அடிக்கடி தேர்தல் நடத்துவது நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். இந்நிலையில் ஒரே...
காஷ்மீர் முன்னாள் முதல்வர்களான உமர் அப்துல்லாவும் மெகபூபா முப்தியும் பொம்மைகள் என அவாமி இட்டிஹாட் கட்சி (ஏஐபி) எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் விமர்சித்துள்ளார். ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவைக்கு 3 கட்டமாக தேர்தல்நடைபெற உள்ளது. இதற்கான தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில், தீவிரவாத செயலுக்கு நிதியுதவி வழங்கிய வழக்கில் கைது செய்யப்பட்டு திகார் சிறையிலிருந்த இட்டிஹாட் கட்சி (ஏஐபி) எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத், தேர்தல் பிரச்சாரத்துக்காக ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதையடுத்து, எதிர்க்கட்சிகளின்...