குஜராத் மாநிலம் பாவ்நகரில் தமிழக யாத்ரீகர்களுடன் சொகுசுப் பேருந்து ஒன்று வெள்ளத்தில் சிக்கியது. சொகுசுப் பேருந்து வெள்ளத்தில் சிக்கிய நிலையில் பயணிகளை மீட்க ட்ரக் ஒன்று மீட்புக் குழுவினருடன் அனுப்பப்பட்டது. ஆனால் அந்த ட்ரக்கும் வெள்ளத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மாநில, தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் இணைந்து பேருந்தின் முன்பக்கக் கண்ணாடியை உடைத்து பயணிகளை வெளியேற்றி ட்ரக்கில் ஏற்றினர். மீட்புப் பணியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில்...
மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் ஆண்டுதோறும் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். மாநகரின் பல்வேறு பகுதிகளில் பிரம்மாண்டமான பந்தல் அமைக்கப்பட்டு துர்கை சிலை வைத்து வழிபடுவர். 10 நாட்களுக்கு நடைபெறும் இவ்விழாவில், சமூக பிரச்சினைகள் மற்றும் சமீபத்திய நிகழ்வுகள் கருப்பொருளாக இருக்கும். இவற்றை பிரதிபலிக்கும் வகையில் பந்தல், சிலைகள் மற்றும் அலங்கார விளக்குகள் அமைக்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில் வரும் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள துர்கா பூஜை விழாவுக்கான...
ராகுல் காந்தியின் குடியுரிமையை பறிப்பது தொடர்பாக அலாகாபாத் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு என்ன நிலையில் உள்ளது என்பதை தெளிவுபடுத்த வேண்டும் என மத்திய அரசை டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் குடியுரிமையை ரத்து செய்யக் கோரி பாஜக தலைவர் சுப்பிரமணியன் சுவாமி டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
அதில், மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிரிட்டிஷ் பாஸ்போர்ட் விசாரணையின்போது...
மனித தவறுகளால் நிகழும் விமான விபத்துகள் 10 சதவீதம் அதிகரிப்பு: மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு தகவல்
admin - 0
மனித தவறுகளால் நிகழும் விமானவிபத்துகள் 10 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் கே.ராம் மோகன் நாயுடு தெரிவித்துள்ளார்.
விமான விபத்துகளில் மனித காரணிகள் என்ற தலைப்பில் முதல் தேசிய பாதுகாப்பு கருத்தரங்கம் டெல்லியில் நேற்றுமுன்தினம் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட அமைச்சர் மோகன் நாயுடு இதுகுறித்து மேலும் கூறியதாவது: உலகளவில் விமான விபத்துகளின் எண்ணிக்கை குறைந்துள்ளபோதிலும் 80 சதவீத விபத்துகளுக்கு மனித தவறுகளே முக்கியகாரணமாக உள்ளது...
லட்டு விவகாரத்தில் கிண்டல் செய்தால் சும்மா இருக்க மாட்டேன்: பிரகாஷ் ராஜுக்கு பவன் கல்யாண் எச்சரிக்கை
admin - 0
திருப்பதி லட்டு பிரசாதத்துக்காக கடந்த ஜெகன்மோகன் ரெட்டி ஆட்சியின்போது வாங்கப்பட்ட கலப்பட நெய்யில், விலங்குகளின் கொழுப்பும், மீன் எண்ணெயும் கலந்திருப்பது பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்த ஆந்திர அரசு உத்தரவிட்டுள்ளது. இதனிடையே, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் இரு தினங்களுக்கு முன் தனது எக்ஸ் பக்கத்தில், “திருப்பதி லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு சேர்க்கப் பட்டதைப் பற்றி கேள்விப்பட்டு மிகவும் கவலை அடைந்தோம். ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ்...
உமிழ்நீர், சிறுநீர் கலந்த பழரசம் விற்றதாக புகார்: உ.பி.யில் உணவகங்களை முறைப்படுத்த முதல்வர் ஆதித்யநாத் உத்தரவு
admin - 0
மேற்கு உ.பி.யின் ஷாம்லி மாவட்டம், சாலையோரக் கடை ஒன்றில் எடுக்கப்பட்ட காட்சிப்பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியது. இதில் பழரசம் விற்பனை செய்பவர் அதில் எச்சிலை துப்பி வழங்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பாக கடை உரிமையாளர் ஆசீப்பை ஷாம்பி காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்குமுன், காஜியாபாத் பழரசக் கடை ஒன்றில் 15 வயது சிறுவன் பழரசத்தில் சிறுநீர் கலந்து விற்றதாகப் புகார் எழுந்தது....
நில முறைகேடு வழக்கை விசாரிக்க ஆளுநர் அனுமதித்தது சரியே: நீதிமன்ற உத்தரவால் சித்தராமையாவுக்கு பின்னடைவு
admin - 0
கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான நில முறைகேடு வழக்கை விசாரிக்க ஆளுநர் அனுமதி அளித்தது சட்டப்படி சரியானது என்று கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கர்நாடக முதல்வர் சித்தராமை யாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கையகப்படுத்தியது. இதற்கு மாற்றாக அவருக்கு 14 வீட்டு மனைகள் ஒதுக்கப்பட்டன. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் முறைகேடு...
ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தலின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 26 தொகுதிகளுக்கு இன்று (செப்.25) காலை 7 மணி தொடங்கி நடைபெற்று வருகிறது. பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாஜகவின் மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீது கர்ரா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உட்பட 239 வேட்பாளர்கள் இந்த தேர்தலில்...
நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது ஆட்சேபனைக்குரிய கருத்து தெரிவித்ததாக கூறப்படுவது தொடர்பாக கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா வருத்தம் தெரிவித்துள்ளார்.
நிலத்தின் உரிமையாளர் - குத்தகைதாரர் தொடர்பான வழக்கு விசாரணையின் போது உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீஷானந்தா பெங்களூருவில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியை பாகிஸ்தான் என்று அழைத்திருந்தார். மேலும் பெண் வழக்கறிஞர் ஒருவருக்கு எதிராக பெண் வெறுப்பு கருத்து ஒன்றை தெரிவித்திருந்தார் .இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில்...
‘‘என்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்தார்’’: அரவிந்த் கேஜ்ரிவால் குற்றச்சாட்டு
admin - 0
தன்னை ஊழல்வாதி என்று நிரூபிக்க பிரதமர் மோடி சதி செய்ததாக டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கேஜ்ரிவால் இன்று (ஞாயிற்றுக்கிழமை) குற்றம்சாட்டினார்.
டெல்லியின் ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 'மக்கள் நீதிமன்றம்' (‘ஜன்தா கி அதலாட்’) நிகழ்ச்சியில் பேசிய அரவிந்த் கேஜ்ரிவால், "கடந்த பத்து ஆண்டுகளாக நாங்கள் நேர்மையாக ஆட்சி நடத்தி வருகிறோம். மின்சாரம் மற்றும் தண்ணீரை நாங்கள் இலவசமாக்கினோம். மக்களுக்கான...










