உ.பி.யின் பிரயாக்ராஜ் நகரின் திரிவேணி சங்கமத்தில் ஆண்டுதோறும் கும்பமேளா நடைபெறுகிறது. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த விழா, மகா கும்பமேளாவாக நடத்தப்படுகிறது.
ஜனவரி 13-ல் தொடங்கும் மகா கும்பமேளாவுக்கு பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடுகளை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். இதற்கு முன்பு கடந்த2019 கும்பமேளா விழாவில் பிரதமர் மோடி பங்கேற்றார்.
தற்போது உ.பி. அரசு நடத்தும் மகா கும்பமேளா ஏற்பாடுகளை முதல் முறையாக பிரதமரே தொடங்கி...
மத வழிபாட்டுத் தலங்கள் தொடர்பாக புதிய வழக்குகளை பதிவு செய்யக்கூடாது, விசாரணை நடத்தக்கூடாது என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
முன்னாள் பிரதமர் நரசிம்ம ராவ் ஆட்சிக் காலத்தில் 1991-ம் ஆண்டு மத வழிபாட்டு தலங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதன்படி நாடு சுதந்திரம் அடைந்த 1947-ம் ஆண்டுக்கு முந்தைய வழிபாட்டுத் தலங்கள் மீது யாரும் உரிமை கோர முடியாது என்று அறிவிக்கப்பட்டது.
இந்த சட்டம் அரசியல் சாசனத்துக்கு எதிரானது. இதை ரத்து...
ராஜஸ்தானில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த 5 வயது சிறுவன், 57 மணி நேர போராட்டத்துக்கு பிறகு மீட்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தான்.
ராஜஸ்தானின் தவுசா மாவட்டம் காளிகாத் என்ற கிராமத்தில் ஆர்யன் என்ற 5 வயது சிறுவன் கடந்த திங்கட்கிழமை மாலை வயலில் விளையாடிக் கொண்டிருந்தான். அப்போது 150 அடி ஆழமுள்ள ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்தான். தகவலின் பேரில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்பு...
நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்கு அதிகரித்துள்ளது என்றும், 2031-ம் ஆண்டுக்குள் மும்மடங்கு அதிகரிக்கும் என அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்துள்ளார்.
அணு மின்சக்தி உற்பத்தி தொடர்பாக மக்களவையில் அணுசக்தி துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியதாவது: நாட்டின் அணு மின்சக்தி உற்பத்தி கடந்த 2014-ம் ஆண்டு 4,780 மெகா வாட்டாக இருந்தது. இது 2024-ம் ஆண்டில் 8,081 மெகா...
சாலை விபத்தில் ஆண்டுக்கு 1.78 லட்சம் பேர் உயிரிழப்பு: 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள்
admin - 0
சாலை விபத்தில் உயிரிழப்பவர்களில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்டவர்கள் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, சாலை விபத்து குறித்து மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நேற்று பேசியதாவது: இந்தியாவில் ஆண்டுதோறும் சாலை விபத்துகளில் சிக்கி 1.78 லட்சம் பேர் உயிரிழக்கின்றனர். இதில் 60% பேர் 18 முதல் 34 வயதுக்குட்பட்ட இளைஞர்கள்...
நாட்டில் செல்வ வளத்தை உருவாக்கும் தொழில்முனைவோர்களை அரசியல் சர்ச்சைகளுக்குள் சிக்க வைக்க கூடாது என பிரபல ஆன்மீக குருவான சத்குரு ஜக்கி வாசுதேவ் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் " உலக ஜனநாயகத்தின் கலங்களை விளக்கமாக நாம் இருக்க விரும்பும்போது, இந்திய நாடாளுமன்றத்தில் ஏற்படும் இடையூறுகளை பார்க்கையில் மிகவும் வருத்தமாக உள்ளது. இந்தியாவின் செல்வத்தை உருவாக்குபவர்கள் மற்றும் வேலைவாய்ப்பை வழங்குபவர்கள் அரசியல் சர்ச்சைகளுக்கு அப்பாற்பட்டவர்களாக இருக்க வேண்டும்....
டெல்லி தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் பெண்களுக்கு மாதம் ரூ.2,100 வழங்க கேஜ்ரிவால் வாக்குறுதி
admin - 0
டெல்லியில் கடந்த 2015-ம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 70 தொகுதிகளில் 67 இடங்களைக் கைப்பற்றி ஆம் ஆத்மி முதல் முறையாக ஆட்சியைக் கைப்பற்றியது. அதன்பின் 2020-ம் ஆண்டு தேர்தலில் 62 இடங்களில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது.
இந்நிலையில், அடுத்த ஆண்டு தொடக்கத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலிலும் வெற்றி பெற்று தொடர்ந்து 3-வது முறையாக ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி கட்சி வியூகம் வகுத்துள்ளது.
இதற்கிடையில்,...
‘இந்து தமிழ் திசை’ செய்தியின் தாக்கம்: தமிழ் கல்வெட்டுப் படிகளை பதிப்பிக்க மத்திய அமைச்சர் ஷெகாவாத்திடம் வலியுறுத்தல்
admin - 0
தமிழ் கல்வெட்டுப் படிகளை பதிப்பிக்க மத்திய அரசிடம் திமுக சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநிலங்களவை திமுக எம்.பி. என்.ஆர்.இளங்கோ, மத்திய சுற்றுலா மற்றும் கலாச்சாரத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் நேரில் அளித்த மனுவில் கூயிருப்பதாவது:
இந்திய தொல்லியல் துறை (ஏஎஸ்ஐ) கல்வெட்டுப் பிரிவின் மைசூர் கிளையில் இருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகள் தற்போது சென்னை கிளையில் உள்ளன. பல்லாண்டுகளாக டிஜிட்டல் முறையில் ஆவணமாக்கப்படாமல் உள்ளன. இவற்றை டிஜிட்டலாக்கி, ஆய்வு...
இடஒதுக்கீடு கோரி பஞ்சமசாலி லிங்காயத்து பிரிவினர் போராட்டம்: கர்நாடகாவில் போலீஸார் தடியடி நடத்தியதால் பரபரப்பு
admin - 0
கர்நாடக மாநிலம் பெலகாவியில் உள்ள சட்டப்பேரவையில் (சுவர்ண சவுதா) குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தங்களுக்கு பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் 2ஏ பிரிவில் இடஒதுக்கீடு வழங்கக்கோரி பஞ்சமசாலி லிங்காயத்து பிரிவினர் சட்டப்பேரவை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கூடலசங்கம பஞ்சமசாலி மடத்தின் மடாதிபதி பசவ ஜெயமிருதஞ்ஜெய சுவாமி தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது கர்நாடக முதல்வர் சித்தராமையாவுக்கு எதிராகவும், காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும் முழக்கங்களை எழுப்பினர். மேலும்...
'ஒரே நாடு, ஒரே தேர்தல்' மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இந்த மசோதா அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மக்களவையின் 543 தொகுதிகள், மாநிலங்களின் 4,120 சட்டப்பேரவைத் தொகுதிகள், 30 லட்சத்துக்கும் மேற்பட்ட உள்ளாட்சிப் பதவிகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்தை ஆய்வு செய்ய முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் கடந்த ஆண்டு செப்டம்பரில்...










