ஆந்திர மாநிலம் அனகாபல்லி மாவட்டத்தில் இன்று அதிகாலை டாடாநகர் - எர்ணாகுளம் அதிவிரைவு பயணிகள் ரயிலில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் அந்த ரயிலின் இரண்டு பேட்டிகள் தீயில் எரிந்து சேதமடைந்தன. ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
அனகாபல்லி மாவட்டத்தில் உள்ள எலமஞ்சிலி ரயில் நிலையம் அருகே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. வண்டி எண் 18189-ன் பி-1 மற்றும் எம்-2 ஆகிய இரண்டு பெட்டிகளில் தீ பரவியது....
டெல்லியின் துவாரகா பகுதியில் விசா இல்லாமல் வெளிநாட்டினர் சிலர் தங்கியிருப்பதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
கடந்த 24-ம் தேதி அங்கு போலீஸார் சோதனை நடத்திய போது, நைஜீரியாவைச் சேர்ந்த 7 பேர் விசா காலம் முடிந்த பின்னரும் தங்கி இருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, அவர்களை வெளிநாட்டினர் மண்டல பதிவு அலுவலகத்தில் ஆஜர்படுத்தி உள்ளனர். அவர்களை நாடு கடத்துமாறு பதிவு அலுவலக அதிகாரி உத்தரவிட்டார். இதையடுத்து, நாடுகடத்தும் நடைமுறைகளை முடிக்கும் வரையில்...
பிஹார் மாநிலத்தின் ஜாமுயி மாவட்டத்தில் லகாபான் மற்றும் சிமுல்தாலா ரயில் நிலையங்களுக்கு இடையே சரக்கு ரயிலின் 8 பெட்டிகள் நேற்று முன்தினம் இரவு 11.25 மணிக்கு தடம்புரண்டன.
இதனால் 20-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டன. தடம்புரண்ட பெட்டிகளை அகற்றும் பணி, போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.
இந்த விபத்து காரணமாக இந்த வழித்தடத்தில் செல்லும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டன. பல ரயில்கள் தன்பாத் - கயா வழித்தடத்தில்...
ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய விவகாரம்: காங். மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் ஆதரவு
admin - 0
ஆர்எஸ்எஸ் அமைப்பை பாராட்டிய விவகாரத்தில் காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங்குக்கு சசி தரூர் எம்.பி. ஆதரவு தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த காங்கிரஸ் மூத்த தலைவர் திக்விஜய் சிங் சமூக வலைதளத்தில் பிரதமர் மோடியின் பழைய புகைப்படத்தை பதிவிட்டு ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஒழுக்கம், கட்டுப்பாட்டை புகழ்ந்தார். அதோடு காங்கிரஸின் கட்டமைப்புகளை வலுப்படுத்த ராகுல் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இந்த சூழலில் காங்கிரஸ் கட்சியின் 140-வது...
“ஸ்டாலினிடம் ஆங்கிலம், உருது மொழியில் பேச கோருவீர்களா?” – நிருபர்களிடம் மெகபூபா முப்தி கேள்வி
admin - 0
காஷ்மீர் முன்னாள் முதல்வரும் மக்கள் ஜனநாயக கட்சியின் (பிடிபி) தலைவருமான மெகபூபா முப்தி, ஸ்ரீநகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் காஷ்மீரி மொழியில் பேசினார். சில நிருபர்கள் குறுக்கிட்டு, உருது மொழியில் பேசுமாறு வற்புறுத்தினர்.
அப்போது மெகபூபா முப்தி கூறும்போது, “காஷ்மீரி மொழிக்கு மதிப்பு அளியுங்கள். நமது மொழியைக் காப்பாற்ற வேண்டியது நமது கடமை. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் ஆங்கிலம் அல்லது உருது மொழியில் பேச கோருவீர்களா?”...
சூப்பர் ஹீரோக்களை விட அனுமன், அர்ஜுனன், கர்ணன் போன்றோர் சக்தி வாய்ந்தவர்கள்: சந்திரபாபு நாயுடு அறிவுரை
admin - 0
திருப்பதியில் உள்ள மத்திய சம்ஸ்கிருத பல்கலைக்கழக வளாகத்தில் 29-ம் தேதி வரை நடைபெற உள்ள பாரதிய அறிவியல் சம்மேளனத்தை நேற்று ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அமைச்சர் ஜிதேந்தர் சிங் மற்றும் ஆர் எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் ஆகியோர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தனர்.
அப்போது சந்திரபாபு நாயுடு பேசியதாவது: நம்முடைய புராணங்கள், இதிகாசங்கள் குறித்து நம் பிள்ளைகளுக்கு சிறு வயது முதலே நாம் சொல்லி கொடுக்க...
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் முதல் நினைவு தினம் நேற்று கடைபிடிக்கப்பட்டதையொட்டி காங்கிரஸ் தலைவர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறியதாவது: பணிவு, நேர்மை, புத்திகூர்மைக்கு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்கியவர் மன்மோகன் சிங். நாட்டின் பொருளாதாரப் பாதையை மறுவடிவமைத்து பொருளாதார சீர்திருத்தங்கள் மூலம் லட்சக்கணக்கான மக்களுக்கு வேலைவாய்ப்புகளை விரிவுபடுத்தியவர். கோடிக்கணக்கான மக்களை வறுமையிலிருந்து மீட்டவர்.
மன்மோகன் சிங்கின் தொலைநோக்கு பார்வையின் கீ்ழ் நாங்கள் ஒரு வலிமையான இந்தியாவை...
அசாம் மாநிலத்தின் பழங்குடியினத்தவர் பகுதியில் சட்டவிரோதமாக குடியேறியுள்ள பிஹார் மற்றும் நேபாளத்தை சேர்ந்தவர்களை வெளியேற்ற வேண்டும் என்று பழங்குடியினத்தவர்கள் கோரி வருகின்றனர்.
இந்த விவகாரத்தில் சில நாட்களுக்கு முன்னர் கலவரம் ஏற்பட்டது. இந்நிலையில், ரபா, மைசிங், திவா ஆகிய 3 பழங்குடியினத்தவர்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த மத்தியஸ்தர் ஒருவரை நியமிப்பதாக அமித் ஷா உறுதி அளித்தார். இதற்கு அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா நன்றி தெரிவித்துள்ளார்.
கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரம் மேயராக பாஜக.வைச் சேர்ந்த வி.வி.ராஜேஷ் நேற்று பதவியேற்றார்.
கேரளாவில் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் பாஜக கணிசமான இடங்களில் வெற்றி பெற்றது. தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியில் மொத்தம் உள்ள 101 வார்டுகளில் பாஜக 50 இடங்களை கைப்பற்றியது. மார்க்சிஸ்ட் கூட்டணிக்கு 29, காங்கிரஸ் கூட்டணிக்கு 19 வார்டுகள் கிடைத்தன. 2 வார்டுகளில் சுயேச்சைகள் வெற்றி பெற்று உள்ளனர்.
கடந்த 45 ஆண்டுகளாக திருவனந்தபுரம் மாநகராட்சி மார்க்சிஸ்ட் கூட்டணியின்...
முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் 101-வது பிறந்த நாளை முன்னிட்டு டெல்லியில் 100 அடல் உணவகங்களை முதல்வர் ரேகா குப்தா நேற்று திறந்து வைத்தார்.
பின்னர் அவர் கூறியதாவது: தினமும் இரண்டு வேளை உணவு கிடைக்க போராடும் மக்களுக்கு திருப்தியான உணவு பத்தில் ஒரு பங்கு விலையில் கிடைத்தால் எப்படி சந்தோஷப்படுவார்கள் என்பதை கற்பனை செய்து பாருங்கள். டெல்லி அரசு தற்போது அந்த கனவை நனவாக்கியுள்ளது.
அடல் உணவகங்கள் ஒரு நாளைக்கு 2...
