Google search engine
தமிழக முன்​னாள் முதல்வர் ஜெயலலி​தா​வின் 27 கிலோ நகைகள், 1,562 ஏக்கருக்கான சொத்​துக்​களின் ஆவணங்கள் தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை போலீ​ஸாரிடம் ஒப்படைக்​கப்​பட்டன. 1991-96 காலகட்​டத்​தில் வருமானத்​துக்கு அதிகமாக சொத்​துக்கு​வித்​ததாக தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மீது வழக்குதொடரப்​பட்​டது. இவ்வழக்​கின் விசா​ரணை​யின்​போது தமிழக லஞ்ச ஒழிப்புத்​துறை போலீ​ஸார் அவரது வீட்​டில் சோதனை நடத்தி தங்கம், வைரம், வெள்ளி உள்ளிட்ட நகைகள், புடவை​கள், காலணி​கள், கைக்​கடி​காரங்​கள், வீட்டு உபயோக பொருட்​கள், சொத்​துக்​களின் ஆவணங்கள்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி வாஷிங்டனில் நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது வரும் 2030-ம் ஆண்டுக்குள் அமெரிக்கா, இந்தியா இடையிலான வர்த்தகத்தை ரூ.43.43 லட்சம் கோடியாக அதிகரிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி அரசு முறை பயணமாக கடந்த 12-ம் தேதி அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் சென்றார். கடந்த 13-ம் தேதி அமெரிக்க உளவுத் துறை தலைவர் துளசி கப்பார்ட், அமெரிக்க தேசிய பாதுகாப்பு...
டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது வழக்கு தொடர குடியரசுத் தலைவரிடம் அனுமதி கோரி மத்திய உள்துறை அமைச்சகம் மனுவை அனுப்பியுள்ளது. 2017-ல் வருமானத்துக்கு பொருந்தாத வகையில் சொத்து சேர்த்ததாக டெல்லி முன்னாள் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் மீது அமலாக்கத்துறை முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்தது. மேலும், சத்யேந்தர் ஜெயின் அமைச்சராக இருந்தபோது ரூ. 11.78 கோடிக்கு செயல்படாத நிறுவனங்கள் மூலம் பண மோசடியில் ஈடுபட்டதாக சிபிஐ-யும்...
அதானி விவகாரத்தில் இந்தியாவில் மவுனம் காப்பதும், வெளிநாடுகளில் அது தனிப்பட்ட பிரச்சினை என நழுவிக் கொள்வதும் பிரதமர் நரேந்திர மோடியின் வாடிக்கையாக உள்ளது என்று மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில்: அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடியிடம் அதானி மீதான குற்றச்சாட்டு குறித்து அதிபர் ட்ரம்ப்புன் விவாதிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது, தனிப்பட்ட பிரச்சினைகளை...
காதலர் தினத்தையொட்டி இமாச்சல பிரதேச மாநிலத்தில் சுத்த சைவ உணவகத்தை இன்று திறக்கும் பாஜக எம்.பி. கங்கனா ரனாவத்துக்கு காங்கிரஸ் கட்சி வாழ்த்து தெரிவித்துள்ளது. நடிகையாக இருந்து அரசியலுக்கு வந்தவர் கங்கனா ரனாவத். இவர் பாஜக எம்.பி.யாக உள்ளார். கடந்த காலங்களில் இவர் கூறும் கருத்துகள் காங்கிரஸ் கட்சியினரின் முக்கிய தலைவர்களை உடனடியாக ஆத்திரமூட்டும் வகையில் அமையும். இதற்காக அவரை பலமுறை காங்கிரஸ் கடும் விமர்சனத்துக்கு உள்ளாக்கியுள்ளது. இந்த நிலையில் கங்கனா,...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். தலைநகர் வாஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் இந்திய...
மணிப்​பூரில் ஆளுநரின் பரிந்​துரையை ஏற்று குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்​படுத்தப்பட்டுள்​ளது. மாநிலம் முழுவதும் பாது​காப்பு பலப்​படுத்தப்பட்​டுள்​ளது. வடகிழக்கு மாநிலமான மணிப்​பூரில் பழங்​குடி அந்தஸ்து கோரும் மைதேயி சமுதாய மக்களுக்கு எதிராக குகி, நாகா உள்ளிட்ட பழங்​குடியின மக்கள் போர்க்​கொடி உயர்த்தினர். இதன்​காரணமாக கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மைதேயி, குகி சமுதா​யங்​களுக்கு இடையே மோதல் ஏற்பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து இதுவரை 250 பேர் உயிரிழந்துள்ளனர். 1,500-க்​கும்...
எதிர்க்கட்சிகளின் கடும் அமளிக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று மக்களவையில் தாக்கல் செய்தார். மக்களவையில் வக்பு சட்டத் திருத்த மசோதா தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழு அறிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால், அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோது, எதிர்க்கட்சிகளின் கூச்சல், குழப்பத்துக்கு இடையே புதிய வருமான வரி மசோதாவை...
க்ஃபு மசோதாவின் கூட்டுக் குழு அறிக்கை மாநிலங்களவையில் நேற்று கடும் அமளிக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டது. அதிருப்தி கருத்துக்கள் அறிக்கையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டின. நாடாளுமன்ற கூட்டுக் குழு மீதான அவதூறு கருத்துக்கள் மட்டுமே நீக்கப்பட்டதாக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. வக்ஃபு வாரிய சொத்துக்களை சிறப்பாக பயன்படுத்துவதற்காக வக்ஃபு வாரிய சட்டதிருத்த மசோதா கொண்டுவரப்பட்டு அது மக்களவையில் கடந்தாண்டு ஆகஸ்ட் 8-ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது....
தற்போதைய 18-வது மக்களவையின் 74 பெண் எம்.பி.க்களில் அதிகபட்சமாக மேற்கு வங்கத்தில் இருந்து 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். இதுகுறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போதைய 18-வது மக்களவையில் மொத்தமுள்ள 543 உறுப்பினர்களில் 74 பேர் பெண்கள். இவர்களில் மேற்கு வங்கத்தில் இருந்து அதிகபட்சமாக 11 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். ஆண் எம்.பி.க்கள் 469 பேரில் உ.பி.யில் இருந்து அதிகபட்சமாக 73 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர். தேர்தலில் பெண்களின்...