மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் உள்ள அரசு மருத்துவமனையில் நேற்று திடீரென தீவிபத்து ஏற்பட்டது. இதில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 190-க்கும் மேற்பட்ட நோயாளிகள் பத்திரமாக மீட்கப்பட்டனர். இதுகுறித்து அம்மாநில மக்கள் தொடர்பு துறை வெளியிட்ட அறிக்கை: குவாலியர் கம்ல ராஜா அரசு மருத்துவமனையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 1 மணியளவில் மகப்பேறு துறையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியு) உள்ள ஏசி பகுதியில் திடீரென தீப்பிடித்தது. இதையடுத்து புகைமூட்டம் அதிகமானதையடுத்து,...
இந்தியாவின் கருத்து மீது ஆளும் பாஜக தாக்குதல் நடத்துகிறது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றம்சாட்டி உள்ளார். காங்கிரஸ் கட்சியின் எக்ஸ் சமூக வலைதளத்தில் நேற்று ஒரு வீடியோ வெளியிடப்பட்டது. அதில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பேசும்போது, “இந்தியாவின் கருத்து இன்று தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது. அது பாஜகவின் சித்தாந்தத்தால் தாக்கப்படுகிறது. இந்தியாவின் செல்வம் கோடிக்கணக்கான இந்தியர்களிடமிருந்து பறிக்கப்பட்டு, பிரதமருக்கும் பாஜகவுக்கும் நெருக்கமான ஒரு...
கர்​நாடக போலீஸ் டிஜிபி ராமசந்​திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகை​யு​மான‌ ரன்யா ராவ் (32) துபா​யில் இருந்து 14.8 கிலோ தங்​கம் கடத்தி வந்​த​தால் கடந்த 3ம் தேதி பெங்​களூரு சர்​வ​தேச விமான நிலை​யத்​தில் கைது செய்​யப்​பட்​டார். அவர் மீது வழக்​குப்​ப​திவு செய்​துள்ள வரு​வாய் புல​னாய்வு இயக்​குநரக அதி​காரி​கள் அவ‌ரது வீட்​டில் நடத்​திய சோதனை​யில் ரூ.2.67 கோடி ரொக்​கப்​பண​மும், ரூ.2.06 கோடி மதிப்​பிலான தங்க நகைகளும் சிக்​கின. ரன்யா ராவை...
உத்தர பிரதேச காவலர் பணிக்கான தேர்வில் ஒரு குடும்பத்தை சேர்ந்த 3 சகோதரிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தர பிரதேச காவல் துறையில் காவலர் பணியிடங்களை நிரப்ப கடந்த ஆண்டு ஆகஸ்டில் எழுத்துத் தேர்வு, உடற்தகுதி தேர்வு நடத்தப்பட்டது. மொத்தம் 48 லட்சம் பேர் தேர்வில் பங்கேற்றனர். கடந்த 13-ம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில் 60,000 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். உத்தர பிரதேசத்தின் ஜான்பூர் பகுதியை சேர்ந்த குஷ்பூ, கவிதா,...
இந்​தி​யா​வில் புதிய குடி​யுரிமை சட்​டத்தை கொண்டு வரும் வகை​யில், மக்​களவை​யில் குடி​யுரிமை மற்​றும் வெளி​நாட்​டினர் மசோதா தாக்​கல் செய்​யப்​பட்​டுள்​ளது. இந்​தி​யா​வில் போலி பாஸ்​போர்ட், போலி விசா பயன்​படுத்தி நுழைந்​தாலோ, தங்​கி​யிருந்​தாலோ, இந்​தி​யாவை விட்டு வெளி​யேறியது கண்​டு​பிடிக்​கப்​பட்​டாலோ, அதி​கபட்​சம் 7 ஆண்டு சிறை தண்​டனை, ரூ.10 லட்​சம் அபராதம் விதிக்​கப்​படும் என்று அதில் தெரிவிக்​கப்​பட்​டுள்​ளது. கடந்த 2023-24-ம் நிதி ஆண்​டில் இந்​தி​யா​வுக்கு மொத்​தம் 98.40 லட்​சம் வெளி​நாட்​டினர் வந்​துள்​ளனர். இந்​தி​யா​வுக்​குள் நுழை​யும்...
ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஒரு குடும்பத்துக்கான மருத்துவக் காப்பீட்டை ரூ.10 லட்சமாக உயர்த்த சுகாதாரத்துக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை செய்துள்ளது. மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் நாட்டில் மிகவும் ஏழ்மையான 40% குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் மருத்துவக் காப்பீட்டு அளிக்கப்படுகிறது. இத்திட்டம் கடந்த ஆண்டு, பொருளாதார நிலையை கணக்கில் கொள்ளாமல் 70 வயதுக்கு மேற்பட்ட அனைவரையும் உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டது. தற்போது இந்த...
டெல்லியில் தர்ஷனா ஜெயின் என்கிற 80 வயது மூதாட்டி தனது 59 வயது மகனுக்கு சிறுநீரக தானம் அளித்து மறு வாழ்வு அளித்துள்ளார். வடமேற்கு டெல்லி ரோஹிணி பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் ராஜேஷ். இவருக்கு 2 ஆண்டுகளுக்கு முன் கடும் சிறுநீரக நோய் ஏற்பட்டதில் அவரது 2 சிறுநீரகங்களும் செயலிழந்தன. இதையடுத்து அவரது தாயாரும் மகனும் சிறுநீரக தானம் அளிக்க முன்வந்தனர். மருத்துவப் பரிசோதனையில் அவரது தாயாரின் சிறுநீரகம் பொருத்தமாக...
கர்​நாட​கா​வில் கதக் அருகே ஹோலி கொண்​டாட்​டத்​தின்​போது பள்ளி மாணவி​கள் 7 பேர் மீது மர்ம கும்​பல் ரசாயனம் கலந்த வண்​ணப்​பொடியை வீசினர். இதனால் மூச்​சுத் திணறல் ஏற்​பட்​ட​தால் 7 பேரும் மருத்​து​வ​மனை​யில் அனு​ம​திக்​கப்​பட்​டனர். கர்​நாடக மாநிலம் கதக் மாவட்​டத்​தில் லக் ஷ்மேஷ்வர் நகரில் நேற்று ஹோலி பண்​டிகை​யின்​போது, பள்ளி மாணவி​கள் 7 பேர் பேருந்து நிலை​யத்​தில் காத்​திருந்​தனர். அப்​போது 3 பைக்​கு​களில் வந்த இளைஞர் கும்​பல் அந்த மாணவி​கள் மீது ரசாயனம்...
தங்கக் கடத்தல் வழக்கில் கைதான நடிகை ரன்யா ராவுக்கு ஜாமீன் வழங்க பெங்களூரு நீதிமன்றம் மறுத்துவிட்டது. கர்நாடக போலீஸ் டிஜிபி ராமசந்திர ராவின் வளர்ப்பு மகளும், நடிகையுமான‌ ரன்யா ராவ் (32) துபாயில் இருந்து 14.8 கிலோ தங்கம் கடத்தி வந்ததாக கடந்த 3-ம் தேதி பெங்களூரு விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். இதையடுத்து, வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகள் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில்,...
கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீதான போக்சோ வழக்கில் விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனுக்கு கர்நாடக உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. பெங்களூருவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கடந்த ஆண்டு கர்நாடக‌ முன்னாள் முதல்வர் எடியூரப்பா மீது போக்சோ வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் சிஐடி போலீஸார், அவரிடம் 2 நாட்கள் விசாரணை நடத்திய நிலையில், கடந்த ஜூனில் 750 பக்க குற்றப்...