மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் அமைந்துள்ளது ராமகிருஷ்ணா மிஷன் ஆசிரமம். இதன் செயலாளராக இருப்பவர் சுவாமி சுப்ரதீப்தானந்தா. இவருக்கு கடந்த மார்ச் 17-ம் தேதி ஒரு வீடியோ கால் வந்துள்ளது. மறுமுனையில் பேசியவர் மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கை சேர்ந்த காவல் துறை அதிகாரி என தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார்.
அப்போது அவர், தொழிலதிபர் நரேஷ் கோயல் தொடர்பான வழக்கில் சுவாமி சுப்ரதீப்தானந்தா பண மோசடியில் ஈடுபட்டதாக கூறி அவர் மீதான...
‘‘மீண்டும் வேலை வாய்ப்பு அளிப்பதில் முன்னாள் ராணுவத்தினர் நிராகரிக்கப்பட்டால், பாதுகாப்பு படையில் சேர இளைஞர்கள் முன்வரமாட்டார்கள்’’ என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
பஞ்சாப் சிவில் சர்வீஸ் பிரிவில் உதவி ஆணையர் பணியிடங்களை நிரப்ப கடந்த 2021-ம் ஆண்டு விளம்பரம் செய்யப்பட்டது. இதற்கு ராணுவத்தின் மருத்துவ பிரிவில் பணியாற்றிய கேப்டன் தேர்வு செய்யப்பட்டு கடந்த 2022-ம் ஆண்டு பணி நியமனம் செய்யப்ப்டடார்.
இதே பதவிக்கு ராணுவத்தின் நர்ஸிங் சேவை பிரிவில் பணியாற்றி...
உ.பி-யில் பொதுமக்களுக்கு ஏராளமான உதவிகளை செய்ததால் நூற்றுக்கணக்கானோர் திரண்டு காவல் அதிகாரிக்கு பிரியாவிடை
admin - 0
உத்தர பிரதேச மாநிலத்தில் மக்களின் மனங்களை வென்ற காவல் துறை அதிகாரியின் பணியிட மாற்றத்துக்கு நூற்றுகணக்கானோர் திரண்டு பிரியாவிடை கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் தியோரியா மாவட்டத்தில் உள்ள மதன்பூர் காவல்நிலைய பொறுப்பாளராக பணியாற்றி வந்தவர் வினோத் குமார் சிங். இவர், காவல் துறையில் பணியாற்றும் பாணி உள்ளூர் மக்களை வெகுவாக ஈர்த்தது. இந்த நிலையில், ஆறு...
இந்தியாவில் தயாரிக்கப்பட்ட டேப்லெட் கீழே விழுந்தாலும் உடையாது என்று மத்திய மின்னணு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
ஹரியானாவின் குருகிராமை தலைமையிடமாக கொண்டு விவிடிஎன் டெக்னாலஜிஸ் நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனம் மென்பொருள், வன்பொருள், தொலைத்தொடர்பு ஆகிய துறைகளில் கோலோச்சி வருகிறது. அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய நாடுகள், வியட்நாம், கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. விவிடிஎன் நிறுவனம் சார்பில் லேப்டாப், டேப்லெட் தயாரிக்கப்பட்டு வருகின்றன.
இந்த சூழலில்...
சத்தீஸ்கரின் சுக்மா மாவட்டத்தில் 22 மாவோயிஸ்ட்கள் பாதுகாப்பு படையினரிடம் நேற்று சரணடைந்தனர்.
இதுகுறித்து சுக்மாவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கிரண் சவான் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: சுக்மா மாவட்டத்தில் காவல்துறை மற்றும் சிஆர்பிஎப் மூத்த அதிகாரிகள் முன்னிலையில் 9 பெண்கள் உட்பட 22 மாவோயிஸ்ட்கள் சரண் அடைந்துள்ளனர்.
இவர்கள் சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாவோயிஸ்ட் பிரிவுகளில் செயல்பட்டு வந்தவர்கள். பாதுகாப்பு படையினர் மீதான பல தாக்குதல்களில் தொடர்புடையவர்கள். இவர்கள் 22 பேருக்கும்...
மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டுமென ஆந்திர மாநில துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ண ராஜு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலம், குண்டூரில் நேற்று பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் நடைபெற்ற விழாவில் ஆந்திர மாநில துணை சபாநாயகர் ரகுராம கிருஷ்ண ராஜு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அங்கு வைக்கப்பட்டிருந்த மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாட்டாவின் முழு உருவ சிலையை திறந்து வைத்த...
நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து பேட்டியளித்த முன்னாள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர், ‘‘ ஊழலில் காங்கிரஸ் கட்சி மீண்டும் கையும், களவுமாக சிக்கியுள்ளது’’ என கூறினார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில், ரூ.5,000 கோடி அளவுக்கு சொத்துக்களை, யங் இந்தியன் நிறுவனத்துக்கு மாற்றப்பட்டதில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஆகியோர் நிதி முறைகேட்டில் ஈடுபட்டதாக அமலாக்கத்துறை கடந்த 9-ம் தேதி குற்றப்பத்திரிக்கை தாக்கல்...
மகாராஷ்டிராவில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு இந்தி கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவசேனா (உத்தவ்), எம்என்எஸ் ஆகிய கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மகாராஷ்டிராவில் சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) ஆகிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜக ஆட்சி நிலவுகிறது.
இந்நிலையில் இம்மாநில அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5 வகுப்புகளுக்கு மூன்றாவது மொழியாக, இந்தி கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய கல்விக் கொள்கை 2020-ன்படி வெளியான இந்த...
டிசிஎஸ் நிறுவனத்துக்கு ஏக்கர் 99 காசு விகிதத்தில் 21 ஏக்கர் நிலத்தை ஒதுக்கீடு செய்ய ஆந்திர அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்வர் சந்திரபாபு நாயுடு தலைமையிலான அரசு , ஆந்திராவில் புதிய தொழில்களை தொடங்க நிறுவனங்களை ஊக்குவித்து வருகிறது. இந்த சூழலில் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டிசிஎஸ், ஆந்திராவில் தனது நிறுவனத்தை தொடங்க அனுமதி கோரியது. அந்த நிறுவனத்துக்கு விசாகப்பட்டினத்தில் 21.16 ஏக்கர் நிலத்தை வழங்க ஆந்திர அமைச்சரவை கூட்டத்தில்...
வக்பு (திருத்த) சட்டத்துக்கு எதிரான மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்து மத அறக்கட்டளையில் முஸ்லிம்கள் உறுப்பினராக அனுமதிப்பீர்களா என மத்திய அரசுக்கு கேள்வி எழுப்பி உள்ளது.
வக்பு (திருத்த) சட்டம் (ஒருங்கிணைந்த வக்பு மேலாண்மை, அதிகாரமளித்தல், திறன் மற்றும் மேம்பாடு) கடந்த 8-ம் தேதி அமலுக்கு வந்தது. இந்த சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ், திமுக, ஆம் ஆத்மி, ஏஐஎம்ஐஎம், சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள்...










