Google search engine
போலீஸார் நடத்திய தேடுதல் வேட்டையில் கொல்லப்பட்ட பசவராஜுவின் நம்பிக்கைக்குரிய கூட்டாளி ஒருவர் போலீஸாரிடம் சரண் அடைந்துள்ளார். சிதறுண்டு வரும் நக்சலைட்டுகளின் இயக்கம் குறித்து அவர் வெளிப்படையான தகவல்களை போலீஸாரிடம் தெரிவித்துள்ளார். சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய தலைவராக இருந்தவர் நம்பல கேசவ் ராவ் என்கிற பசவராஜு. இவருடன் மொத்தம் 27 மாவோயிஸ்டுகள், பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம், இந்தியாவில் நக்சல் இயக்கத்துக்கு எதிரான போரில்...
குடியரசுத் தலை​வர் மாளி​கை​யில் நேற்று பத்ம விருதுகள் வழங்​கப்​பட்​டன. அப்​போது தமிழகத்தை சேர்ந்த நடிகை ஷோப​னா, தொழிலதிபர் நல்லி குப்​பு​சாமிக்கு பத்ம பூஷண் விருதுகள் வழங்​கப்​பட்​டன. தமிழகத்தை சேர்ந்த பறை இசைக் கலைஞர் வேலு ஆசான், மிருதங்க கலைஞர் குரு​வாயூர் துரை, புதுச்​சேரியை சேர்ந்த தவில் இசைக் கலைஞர் தட்​சிணா​மூர்த்​திக்கு பத்ம ஸ்ரீ விருது வழங்​கப்​பட்​டது. ஒட்​டுமொத்​த​மாக 68 பேருக்கு பத்ம விருதுகள் அளிக்​கப்​பட்​டன. கல்​வி, இலக்​கி​யம், அறி​வியல், விளை​யாட்​டு,...
‘‘சுதந்திர இந்தியாவுக்கு அடித்தளமிட்டவர் பண்டிட் ஜவஹர்லால் நேரு’’ என அவரது 61-வது நினைவு தினத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி புகழஞ்சலி செலுத்தியுள்ளார். நாட்டின் முதல் பிரதமர் பண்டிட் ஜவஹர்லால் நேரு கடந்த 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 1964-ம் ஆண்டு மே மாதம் 27-ம் தேதி அவர் இறக்கும் வரை 16 ஆண்டுகளுக்கு மேலாக பிரதமராக இருந்தார். அவரது 61-வது நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதை...
பெங்களூரு புறநகரில் பண்ணை வீட்டில் ரேவ் பார்ட்டியில் ஈடுபட்ட சீன பெண் உட்பட 31 பேர் கைது செய்யப்பட்டனர். பெங்களூரு தேவனஹள்ளியில் உள்ள ஒரு பண்ணை வீட்டில் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் ரேவ் பார்ட்டி நடப்பதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸார் அதிகாலை 3 மணியளவில் சோதனையிடச் சென்றனர். அப்போது 31 பேர் கஞ்சா, போதைப் பொருள், மது வகைகளை அருந்திவிட்டு, நடனமாடி கொண்டிருந்தனர். அதில் 28 வயதான சீனாவை...
ஹரியானாவில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் காரில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தராகண்ட் மாநிலம் டேராடூன் நகரை சேர்ந்தவர் பிரவீன் மிட்டல் (42). இவர் தனது பெற்றோர், மனைவி, 2 மகள்கள் மற்றும் ஒரு மகனுடன் நேற்று முன்தினம் ஹரியானா மாநிலம் பஞ்ச்குலாவில் உள்ள பாகேஸ்வர் கோயிலுக்கு வந்தார். இக்கோயிலில் நடைபெற்ற ஆன்மிக நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சிக்கு பிறகு இரவு பஞ்ச்குலா நகரின்...
இந்​தி​யா​வின் பொருளா​தா​ரத்தை வலுப்​படுத்த உள்​நாட்டு பொருட்​களை மட்​டுமே வாங்க வேண்​டும் என்று பிரதமர் நரேந்​திர மோடி அழைப்பு விடுத்​துள்​ளார். குஜ​ராத் தலைநகர் காந்தி நகரில் நேற்று நடை​பெற்ற விழா​வில் ரூ.5,536 கோடி மதிப்​பிலான அரசு நலத் திட்​டங்​களை அவர் தொடங்​கி​வைத்​தார். சில திட்​டங்​களுக்கு அடிக்​கல் நாட்​டி​னார். விழா​வில் அவர் பேசி​ய​தாவது: இந்​தி​யா, பாகிஸ்​தான் பிரி​வினை​யின்​போது ஜம்மு காஷ்மீரின் ஒரு பகுதி ஆக்​கிரமிக்​கப்​பட்​டது. அந்த பகு​தியை மீட்க சர்​தார் படேல் திட்​ட​மிட்​டார்....
கர்நாடகாவில் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதாக 2 பாஜக எம்எல்ஏக்களை கட்சி மேலிடம் 6 ஆண்டுகளுக்கு இடைநீக்கம் செய்துள்ளது. கர்நாடகாவின் உத்தர கன்னடா மாவட்டம் எல்லாபுரா சட்டப்பேரவை தொகுதியின் பாஜக எம்எல்ஏ சிவராம் ஹெப்பார் கட்சி மேலிடத்தையும், மாநில தலைவர் விஜயேந்திராவையும் கடந்த சில ஆண்டுகளாக கடுமையாக விமர்சித்தார். இதனால் அவர் தனது பழைய கட்சியான காங்கிரஸுக்கே திரும்ப போவதாகவும் தகவல் வெளியானது. இதேபோல பெங்களூருவில் உள்ள யஷ்வந்த்பூர் தொகுதியில் எம்எல்ஏ...
ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையின்போது 72 பாகிஸ்தான் ராணுவ நிலைகள் முழுமையாக அழிக்கப்பட்டன என்று எல்லை பாதுகாப்புப் படை (பிஎஸ்எப்) தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஜம்மு பிராந்திய பிஎஸ்எப் ஐஜி சுஷாங்க் ஆனந்த் ஜம்முவில் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: மே 7-ம் தேதி முதல் 10-ம் தேதி வரை ஜம்மு காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் இந்திய, பாகிஸ்தான் ராணுவங்களுக்கு இடையே மிகக் கடுமையான சண்டை நடைபெற்றது. ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில்...
தென்மேற்கு டெல்லி பகுதியில் சட்டவிரோதமாக வசித்து வந்த 92 வங்கதேச நாட்டவரை போலீஸார் கைது செய்துள்ளனர். டெல்லியின் பல்வேறு பகுதிகளில் வங்கதேச நாட்டைச் சேர்ந்த பலர் சட்டவிரோதமாக தங்கியிருப்பதாக புகார்கள் வந்தன. இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு டிசம்பர் முதல் போலீஸார் விசாரணை நடத்தி சட்டவிரோதமாக தங்கியிருக்கும் வங்கதேச நாட்டைச் சேர்ந்த நபர்களை கைது செய்து வருகின்றனர். இந்நிலையில் சட்டவிரோதமாத தங்கியிருக்கும் வங்கதேச மக்களை கைது செய்வதற்காக, போலீஸார் 10...
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது. மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது. குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, கோவா, டெல்லி, ஹரியானா, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக...