சந்திரயான்-5 திட்டத்துக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாக இஸ்ரோ தலைவர் வி. நாராயணன் தெரிவித்துள்ளார்.
கன்னியாகுமரியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற அவர் இதுகுறித்து மேலும் கூறியதாவது: சந்திரயான்-5 திட்டத்துக்கான அனுமதியை மத்திய அரசிடமிருந்து மூன்று நாட்களுக்கு முன்னர்தான் பெற்றுள்ளோம். இந்த திட்டத்தில் ஜப்பானுடன் இணைந்து நாங்கள் செயல்பட உள்ளோம். இது, சந்திரயான்-5 திட்டத்தின் அறிவியல் திறன்களை மேலும் அதிகரிக்கும் என்று நம்பப்படுகிறது.
2023 ஆகஸ்ட் 23-ல் சந்திரயான்-3 வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில்...
காலனித்துவ அடையாளங்களை மாற்றும் மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு ஆம் ஆத்மி கட்சியின் மாநிலங்களவை எம்பி அசோக் குமார் மிட்டல் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேரமில்லா நேரத்தில் (ஜீரோ அவர்) நடைபெற்ற விவாதத்தின்போது கூறியதாவது: பிரிட்டிஷ் மேலாதிக்கத்தின்போது இருந்த இடங்களுக்கு மறுபெயர் சூட்டும் மத்திய அரசின் முயற்சி பாராட்டுக்கு உரியது. பிரிட்டிஷாரின் பெருமையை பேசும் இதுபோன்ற பல இடங்களுக்கு பெயர்மாற்றம் செய்யும் நடவடிக்கையை மத்திய அரசு இன்னும் வேகமாக முன்னெடுக்க...
பிஹார் மாணவி ஒருவர் தனது வீட்டில் நிலவும் பாலின பாகுபாடு குறித்து மனம் உடைந்து பேசும் வீடியோ வைரலாகி, மத்திய அரசின் கவனத்தை ஈர்த்தது. இதையடுத்து மருத்துவராக வேண்டும் என்ற அவரது கனவு உயிர் பெற்றுள்ளது.
பிஹாரின் தானாபூரை சேர்ந்த 11-ம் வகுப்பு குஷ்பு குமாரி. இவர் 10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 500-க்கு 399 மதிப்பெண்கள் பெற்றார். மருத்துவராக வேண்டும் என்ற லட்சியம் கொண்ட இவர் 11-ம் வகுப்பில்...
மொழி என்பது ஒருவருக்கொருவர் தகவல்களை பறிமாறிகொள்ள பயன்படுவது மட்டுமே. தாய்மொழியே சிறந்தது. ஹிந்தி தேசிய மொழி, ஆங்கிலம் சர்வதேச மொழி. தேவைப்பட்டால் பல மொழிகளை கற்கலாம். ஆதலால் மொழி அரசியல் தேவையற்றது என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்தி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் அமராவதியில் நடைபெற்று வருகிறது. இதில் முதல்வர் சந்திரபாபு நாயுடு நேற்று பேசியதாவது: தற்போதைய சூழலில் ஆங்கிலம் கற்றால்தான் நல்ல வேலை கிடைக்கும்...
டிஜிட்டல் சுகாதார திட்டங்களில் கலங்கரை விளக்கமாக வழிகாட்டுகிறது இந்தியா: மத்திய இணையமைச்சர் பெருமிதம்
admin - 0
டிஜிட்டல் சுகாதார திட்டங்களில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் கலங்கரை விளக்கமாக இந்தியா வழிகாட்டுகிறது என்று மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் தெரிவித்துள்ளார்.
குவாட் கூட்டமைப்பில் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜப்பான், இந்தியா ஆகிய 4 நாடுகள் அங்கம் வகிக்கின்றன. இந்த கூட்டமைப்பின் சார்பில் இந்தோ-பசிபிக் பிராந்திய பெருந்தொற்று தடுப்பு தயார் நிலை குறித்த 3 நாட்கள் கருத்தரங்கை மத்திய சுகாதாரத் துறை இணையமைச்சர் அனுபிரியா படேல் டெல்லியில் நேற்று தொடங்கி...
ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை பல்வேறு ஆர்ஜித சேவைகள் மற்றும் சிறப்பு தரிசனம், அங்கபிரதட்சனம் உள்ளிட்டவைகளில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் டிக்கெட் விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ளது.
வரும் ஜூன் மாதம் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்கள், முன்கூட்டியே ஆன்லைன் மூலம் டிக்கெட்களை முன்பதிவு செய்து கொள்வது தொடர்பான விவரங்களை திருமலை திருப்பதி தேவஸ்தானம் நேற்று வெளியிட்டது. அதன்படி, ஆர்ஜித சேவை டிக்கெட்களை குலுக்கல் முறையில் பெற...
கர்நாடகாவில் உள்ள மங்களூருவில் ரூ.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியதாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மங்களூரு மாநகர காவல் ஆணையர் அனுபம் அகர்வால் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது: டெல்லியில் இருந்து பெங்களூருவுக்கு விமானம் மூலம் 2 பெண்கள் போதைப் பொருட்களை கடத்தி வருவதாக தகவல் கிடைத்தது. அதன்படி, அவர்களை பிடித்து சோதனையிட்டதில் ரூ.75 கோடி மதிப்புள்ள 37.870 கிலோ மெத்தபெட்டமைன் உள்ளிட்ட போதைப்...
இந்துத்துவா அமைப்புகளின் மிரட்டல் எதிரொலி: மகாராஷ்டிராவில் அவுரங்கசீப் சமாதிக்கு பலத்த பாதுகாப்பு
admin - 0
மகாராஷ்டிராவில் முகலாய மன்னர் அவுரங்கசீப் சமாதியை அகற்றப் போவதாக இந்துத்துவா அமைப்புகள் அறிவித்துள்ளதை தொடர்ந்து அதற்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சத்ரபதி சிவாஜியின் மகன் சம்பாஜியின் வரலாறு ‘சவ்வா’ எனும் பெயரில் திரைப்படமாகி உள்ளது. இது தொடர்பான விவாதம் மகாராஷ்டிர சட்டப்பேரவையில் தற்போதைய பட்ஜெட் கூட்டத்தொடரில் எழுந்தது. இதில், பேசிய சமாஜ்வாதி எம்எல்ஏ அபு ஹாஸ்மி, அவுரங்கசீப் நடவடிக்கையை பாராட்டியதுடன், அவரது புகழ் வாழ்க என கோஷமிட்டார். இதனால், மார்ச்...
பஞ்சாபில் கோயில் மீது கையெறிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளில் ஒருவர் நேற்று போலீஸ் என்கவுன்ட்டரில் உயிரிழந்தார். மற்றொருவர் தப்பி ஓடிவிட்டார்.
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் தாகுர்துவாரா பகுதியில் உள்ள இந்து கோயில் மீது கடந்த வெள்ளிக்கிழமை இரவு மோட்டார் பைக்கில் வந்த இருவர் கையெறிகுண்டை வீசிவிட்டு தப்பிச் சென்றனர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்த போலீஸார், குற்றவாளிகளை குர்சிதக், விஷால் என அடையாளம் கண்டனர். அவர்களை தேடி வந்தனர்.
இந்நிலையில்...
அமெரிக்காவில் நடைபெற்ற சாலை விபத்தில் தெலங்கானா மாநிலத்தை சேர்ந்த 8 வயது சிறுவன் உட்பட மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
தெலங்கானா மாநிலம், ரங்காரெட்டி மாவட்டம், டேகுலபல்லி பகுதியை சேர்ந்த முன்னாள் மண்டல தலைவர் மோகன்ரெட்டி. இவரது மனைவி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவி பவித்ரா தேவி. இவர்களுக்கு 2 மகள்கள். இதில் 2-வது மகளான பிரகதிக்கும், சித்திபேட்டையை சேர்ந்த ரோஹித் என்பவருக்கும் திருமணம் நடந்தது.
இவர்களுக்கு 2 மகன்கள். ரோஹித், அவரது...










