இமாச்சலில் மழைநீர், சகதி, குப்பையால் மூழ்கிய வங்கி கிளை: கோடிக்கணக்கான நகைகள், ரொக்கத்தின் நிலை என்ன?
admin - 0
இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 19 முறை மேகவெடிப்பு மழை அங்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில் மண்டி மாவட்டம் துனாக் கிராமத்திலுள்ள இமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கிக் கிளையானது மழை நீரில் மூழ்கியுள்ளது. மேலும் சகதி, குப்பை ஆகியவை வங்கிக் கிளை முழுவதும் தேங்கிக் கிடக்கிறது.
இதனால் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள...
திபெத் புத்த மதத் தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இதுதொடர்பாக, அனைத்துக் கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசுக்கு கடிதம் எழுத உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாஜக, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய திபெத்துக்கான அனைத்துக் கட்சி இந்திய நாடாளுமன்ற அமைப்பு இந்த மாதம் நடைபெற்ற அதன் இரண்டாவது கூட்டத்தின்போது இதற்கான...
மத்திய அரசின் ஒருங்கிணைந்த வக்பு விதிகள் அறிவிப்பு: புதிய இணையத்தில் வக்பு சொத்துகள் பதிவு செய்வது கட்டாயம்
admin - 0
கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் வக்பு திருத்த சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகள் மற்றும் முஸ்லிம் அமைப்புகள் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தன. விசாரணையின்போது, புதிய வக்பு சட்டத்தில் முஸ்லிம் அல்லாதவர்களையும் குழுக்களில் சேர்ப்பது உள்ளிட்ட சில அம்சங்கள் மீது நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
இதையடுத்து, மத்திய அரசு தாமாகவே முன்வந்து சர்ச்சைக்குரிய அம்சங்களை வழக்கு முடியும் வரை அமல்படுத்தமாட்டோம் என உத்தரவாதம் அளித்திருந்தது. இதனால்,...
பாஜக மூத்த தலைவர் அமித் மாளவியா சமூக வலைதளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: சீன ராணுவ தொழில்நுட்பத்தின் புகழ் பாடுவதை மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் வாடிக்கையாக வைத்துள்ளார்.
நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சீன ராணுவ தொழில்நுட்பம், ஆயுதங்களுக்கு ஆதரவாக அவர் தொடர்ந்து குரல் எழுப்பி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு மக்களவை கூட்டத்தின்போது, லடாக்கில் சீனாவின் மோதல் போக்கை ஆதரிக்கும் வகையில் ராகுல் பேசினார். சீன மாடல்...
பிஹார் வாக்காளர் பட்டியல் திருத்த பணிக்கு இடைக்கால தடை இல்லை: வழக்கை விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்
admin - 0
பிஹாரில் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ள வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கு இடைக்கால தடை விதிக்க உச்ச நீதிமன்றம் நேற்று மறுத்துவிட்டது. அதேநேரம், அவசர வழக்காக விசாரிக்க நீதிமன்றம் ஒப்புக்கொண்டது. தகுதியான குடிமக்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்ப்பதையும், தகுதியற்ற வாக்காளர்களை நீக்குவதையும் முக்கிய நோக்கமாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கியது.
அதன்படி, பிஹாரில் 2003-ம் ஆண்டுக்கு பிறகு வாக்காளராக...
2027-ம் ஆண்டில் இந்தியாவின் 16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான அறிவிப்பை மத்திய அரசு கடந்த மாதம் 16-ம் தேதி வெளியிட்டது. அந்த அறிவிப்பில், லடாக் போன்ற பனிப்பொழிவு நிறைந்த பகுதிகளில் அக். 1, 2026 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும், நாட்டின் பிற பகுதிகளில் மார்ச் 1, 2027 என்ற தேதியை அடிப்படையாகக் கொண்டும் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் மக்கள்தொகை கணக்கெடுப்பில், பொதுமக்கள்...
பிஹார் மாநிலத்தில் உள்ள கோட்டக் மஹிந்திரா வங்கியின் ஒரு கிளை மேலாளர் சூதாட்டம் மற்றும் பந்தய செயலிக்கு அடிமையாகி உள்ளார். இதையடுத்து, கடந்த 2 ஆண்டுகளாக பிஹார் அரசின் வங்கிக் கணக்கிலிருந்து கோடிக்கணக்கான பணத்தை திருடி சூதாடி அல்லது பந்தயம் கட்டி உள்ளார். குறிப்பாக, பிஹார் அரசின் மாவட்ட நிலம் கையகப்படுத்தல் அதிகாரிக்கான காசோலைகளில் போலி கையெழுத்தை இட்டும் காசோலை குளோனிங் மூலமும் மொத்தம் ரூ.31.93 கோடியை மோசடி...
புரி ஜெகந்நாதருக்கு நேற்று 208 கிலோ தங்க நகைகளால் அலங்காரம் செய்யப்பட்டது.
கடந்த 1460-ம் ஆண்டில் அப்போதைய கலிங்க மன்னர் கபிலேந்திர தேவா, தக்காணத்து போர்களில் வெற்றி பெற்று தங்க நகைகள், வைரங்களுடன் ஒடிசா திரும்பினார். இந்த தங்க நகைகள், வைரங்களை புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு அவர் காணிக்கையாக வழங்கினார்.
அப்போது முதல் புரி ஜெகந்நாதர் கோயிலில் சுனா பேஷா என்ற சிறப்பு நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆரம்ப காலத்தில் சுமார் 138...
நக்சல் ஒழிப்பு நடவடிக்கையில் மத்திய அரசு கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் நக்சலைட்கள் கண்காணிப்பு பணிக்காக ட்ரோன்களை பயன்படுத்துவது கண்டறியப்பட்டது.
இது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) தீவிர விசாரணை நடத்தியதில் உத்தர பிரதேசம் மதுராவைச் சேர்ந்த விஷால் சிங் என்பவர் நக்சலைட்களுக்கு ட்ரோன்களை விநியோகம் செய்தது கண்டறியப்பட்டது. அவர் கடந்த மாதம் 29-ம் தேதி டெல்லியில் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய...
மகாராஷ்டிர மாநிலம் மராத்வாடா பகுதி லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஹடோல்டி கிராமத்தைச் சேர்ந்தவர் அம்பதாஸ் பவார் (75). இவருக்கு 2.5 ஏக்கர் நிலம் உள்ளது.
ஆனால், இந்த நிலத்தை உழுது பயிர் செய்வதற்கு தேவையான எருதுகள் அல்லது டிராக்டரை வாங்க அவருக்கு வசதி இல்லை. அவற்றுக்கு ஒரு நாளைக்கு ரூ.2,500 வாடகை கேட்பதால், தானே எருதாக மாறி அம்பதாஸ் பவாரும் அவரது மனைவி முக்தாபாயும் பல ஆண்டுகளாக நிலத்தை ஒரு...








