பாகிஸ்தான் ராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஜம்முவைச் சேர்ந்த 11 வயதான இரட்டையர்கள் உயிரிழந்தனர். பிறக்கும்போது இரட்டையர்களாக பிறந்த இவர்கள், சாவிலும் இணை பிரியாமல் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் பகுதியில் வசித்து வருபவர் ரமீஸ். இவரது மனைவி உர்ஷா. இவர்களுக்கு உர்பா பாத்திமா, ஜைன் அலி என்ற இரட்டைக் குழந்தைகள் இருந்தன. இவர்கள் இருவரும் 5 நிமிட இடைவெளியில் கடந்த 2014-ம் ஆண்டு ஏப்ரல்...
கடந்த 8 ஆண்டுகளாக எடுத்த கடும் நடவடிக்கையால் உத்தர பிரதேசத்தில் 142 ஸ்லீப்பர் செல்கள் ஒழிப்பு
admin - 0
தீவிரவாதிகளுக்கு உதவ உளவாளிகளாக செயல்படுபவர்களை ‘ஸ்லீப்பர் செல்கள்’ என்கின்றனர். இவர்கள் கிராமம், நகரங்களில் சாதாரண பொதுமக்கள் போல் ஊடுருவி வாழ்கின்றனர். இவர்களில் படிப்பறிவு இல்லாதவர்கள் முதல் அனைத்து வகைப் பிரிவினரும் உள்ளனர்.
இந்த ஸ்லீப்பர் செல்கள் மூலம் தீவிரவாதிகள் பல்வேறு உதவிகளை பெறுகின்றனர். இந்நிலையில், கடந்த 8 ஆண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மாநிலம் முழுவதும் ஊடுருவி இருந்த 142 ஸ்லீப்பர் செல்களை கண்டுபிடித்து மாநில அரசு ஒழித்துள்ளது.
இவர்கள் உருவாக்கிய போலி...
ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஆந்திர சட்ட மேலவை துணைத் தலைவர் ஜகியா கசம் நேற்று பாஜகவில் இணைந்தார். விஜயவாடாவில் பாஜக மாநில தலைவர் புரந்தேஸ்வரி முன்னிலையில் இவர் அக்கட்சியில் இணைந்தார்.
நிகழ்ச்சியில் புரந்தேஸ்வரி பேசுகையில், “பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் ஜகியா இணைந்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்றார்.
ஜகியா கசம் பேசுகையில், “ஒவ்வொருவருக்கும் சம உரிமையை பிரதமர் மோடி நடைமுறைப்படுத்தியுள்ளார். முஸ்லிம் பெண்களுக்கு நம்பிக்கை அளித்த ஒரே...
ஆழ்கடலுக்குள் மனிதனை அனுப்பும் சமுத்ரயான் திட்டம் அடுத்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என என்ஐஓடி இயக்குநர் பாலாஜி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மையத்தில், ‘நீலப் பொருளாதாரத்தில் மீன்வளத் துறையின் பங்கு’ என்ற தேசிய அளவிலான 5 நாள் பயிற்சி திட்டம் நடைபெறுகிறது. இதை நேற்று முன்தினம் தொடங்கி வைத்த தேசிய கடல் தொழில்நுட்ப மையத்தின் (என்ஐஓடி) இயக்குநர் பாலாஜி...
இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ தாக்குதலில் பாக். விமான படையின் 20% உள்கட்டமைப்புகள் நாசம்
admin - 0
பாகிஸ்தான் மீது நடத்திய ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலில் அந்நாட்டு விமானப் படையின் 20 சதவீத உள்கட்டமைப்புகள், போர் விமானங்கள் நாசமடைந்துள்ளன. அத்துடன் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் உட்பட 50 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கடந்த மாதம் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். அதற்கு பதிலடி கொடுக்க இந்தியா ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் தாக்குதல் நடத்தியது. இதில் கடந்த...
தஹாவூர் ராணா, சோட்டா ராஜன் உள்ளிட்ட முக்கிய குற்றவாளிகள் அடைக்கப்பட்டுள்ள டெல்லி திஹார் சிறைக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் உள்ள திஹார் சிறை 1958-ம் ஆண்டு திறக்கப்பட்டது. சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இதில் 9 சிறை வளாகங்கள் உள்ளன. இது நாட்டின் மிகப்பெரிய சிறை வளாகங்களில் ஒன்றாக விளங்குகிறது. இதில், மும்பை தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தஹாவூர் ராணா, மும்பை தாதா சோட்டா ராஜன் மற்றும்...
பாகிஸ்தான் மீதான தாக்குதலின் போது அந்நாட்டு அணு ஆயுத கிடங்கை இந்திய ஆயுதப் படைகள் குறி வைக்கவில்லை என விமானப் படை அதிகாரி ஏ.கே.பார்தி கூறினார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள தீவிரவாத முகாம்களை குறிவைத்து 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற பெயரில் இந்தியாவின் முப்படைகளும் கடந்த மே 7-ம் தேதி இரவு தாக்குதல் நடத்தின. பாகிஸ்தானில் 4 இடங்களிலும் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 5...
போர் நிறுத்தத்துக்கு அமெரிக்காவிடம் கெஞ்சிய பாகிஸ்தான்: முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் தகவல்
admin - 0
இந்தியாவுடனான போர் சூழலை நிறுத்துவதற்காக பாகிஸ்தான் அமெரிக்காவிடம் கெஞ்சும் நிலையை, இந்திய முப்படைகள் ஏற்படுத்தியதாக முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமார் தெரிவித்துள்ளார். ஒரு வழியாக இந்தியா -பாகிஸ்தான் இடையே நிலவி வந்த போர் பதற்றம் தற்போது தணிந்துள்ளது. இவ்வளவு சீக்கிரம் பாகிஸ்தான் பணிந்திருப்பது இந்திய மக்களுக்கு பெரும் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முன்னாள் ராணுவ அதிகாரி மேஜர் மதன்குமாரிடம் பேசியதில் இருந்து கிடைத்த தகவல்கள் விவரம்:
பாகிஸ்தான்...
ராணுவ அதிகாரியாக இருந்த எனது தந்தையை தீவிரவாதிகள் கடத்திக் கொலை செய்தனர் என்று பாலிவுட் நடிகை நிம்ரத் கவுர் நினைவுகூர்ந்தார். ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் தீவீரவாதிகள் தாக்குதல் நடத்தியதை அடுத்து ராணுவத்தின் முப்படைகள் நடத்திய ஆபரேஷன் சிந்தூரை பாராட்டி இன்ஸ்டாகிராமில் நடிகையான நிம்ரத் கவுர் கருத்து பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் தன் தந்தையான ராணுவ மேஜர் புபேந்தர் சிங் தீவிரவாதிகளால் கடத்தி கொலை செய்யப்பட்டது குறித்து நிம்ரத் கவுர் முன்பு அளித்த பேட்டி...
ஹைதராபாத்தில் உள்ள கராச்சி பேக்கரி கடையின் பெயரை மாற்றக்கோரி சிலர் இந்திய கொடிகளை ஏந்தி அக்கடையின் பெயர் பலகையை அடித்து துவம்சம் செய்தனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூண்டு தற்போது பதற்றம் தணிந்துள்ள நிலையில், முஸ்லிம்கள் அதிகம் வாழும் ஹைதராபாத்தில் திடீரென கராச்சி பேக்கரிக்குள் புகுந்து பொருட்களை சூறையாடினர். மேலும், கடையின் பெயர் பலகை மீது கற்கள் எரிந்தும் நாசம்...










