ஜம்மு காஷ்மீரில் உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார்.
ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் செனாப் ஆற்றின் குறுக்கே 1,315 நீளத்துக்கு பிரம்மாண்ட ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது. செனாப் ஆற்றில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த பாலம் உலகின் மிக உயரமான ரயில்வே இரும்பு வளைவுப் பாலம் என்பது குறிப்பிடத்தக்கது. நில அதிர்வு மற்றும் பலத்த காற்று ஆகியவற்றை தாங்கும்...
பெங்களூரு கூட்ட நெரிசல் சம்பவம் அரசால் உருவாக்கப்பட்ட பேரழிவு சம்பவம் என்றும், இந்தத் துயரச் சம்பவத்துக்கு மாநில முதல்வரும், துணை முதல்வரும் நேரடியாக பொறுப்பேற்க வேண்டும் என்றும் பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெஹாசத் பூனவல்லா சாடியுள்ளார்.
செய்தி நிறுவனம் ஒன்றிடம் பேசிய பூனவல்லா, “பெங்களூருவில் நாம் பார்த்தது, அரசால், மனிதனால் உருவாக்கப்பட்ட பேரழிவே. அதற்கு முதல்வரும், துணை முதல்வருமே நேரடி பொறுப்பு. அவர்களே முதன்மை குற்றவாளிகள், சம்பவத்துக்கு பொறுப்பேற்றுக்...
நாடு முழுவதும் புதிதாக 564 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ள நிலையில் சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 4,866 ஆக உயர்ந்துள்ளது. நீண்ட நாட்களுக்கு பிறகு இந்தியாவில் தற்போது மீண்டும் கரோனா வைரஸ் பரவி வருகிறது. இதற்கு உருமாற்றம் பெற்ற எல்எப்.7, எக்ஸ்எப்ஜி, ஜேஎன்.1 ஆகிய புதிய வைரஸ்களும் சமீபத்தில் அடையாளம் காணப்பட்ட என்பி.1.8.1 என்ற துணை திரிபும் காரணமாக உள்ளது.
இந்நிலையில் மத்திய சுகாதார அமைச்சக புள்ளிவிவரப்படி நேற்று காலை...
குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே ‘சிந்தூர் வனம்’ என்ற பெயரில் நினைவு பூங்கா அமைக்க குஜராத் அரசு திட்டமிட்டுள்ளது.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை இந்தியா மேற்கொண்டது. இதற்காக இந்திய பாதுகாப்பு படைகளுக்கும், நாட்டு மக்கள் வெளிப்படுத்திய ஒற்றுமைக்கும் மரியாதை தெரிவிக்கும் வகையில் குஜராத்தின் கட்ச் பகுதியில் இந்தியா - பாகிஸ்தான் எல்லை அருகே நினைவுப் பூங்கா அமைக்க குஜராத்...
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரை கூட்டுமாறு பிரதமர் மோடியிடம் 16 எதிர்க்கட்சிகள் வலியுறுத்தல்
admin - 0
நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரை கூட்டுமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் அரிய நிகழ்வாக 16 எதிர்க்கட்சிகளும் ஒற்றுமையுடன் ஒன்றாக இணைந்து வலியுறுத்தி உள்ளன.
பஹல்காமில் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து இந்திய ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இதில், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இருந்த தீவிரவாத முகாம்கள் தாக்கி அழிக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து இந்தியா- பாகிஸ்தான் இடையே தற்காலிக போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இந்த நிலையில்,...
பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்ன நடக்கும்? – அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா விளக்கம்
admin - 0
பிரம்மபுத்திரா நதி நீரை சீனா நிறுத்தினால் என்னாகும் என்னும் பாகிஸ்தானின் அச்சுறுத்தலைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை என்று அசாம் மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் நடந்த பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானிலுள்ள தீவிரவாத முகாம்களை இந்திய ராணுவப் படைகள் அழித்தன. மேலும், பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்தது. போர் நிறுத்த ஒப்பந்தம் அமலில் உள்ளபோதும், சிந்து நதி...
லடாக்கில் அரசு வேலைவாய்ப்பில் உள்ளூர் மக்களுக்கு 85% இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. மேலும் மலைப்பகுதி மேம்பாட்டு கவுன்சில்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு, அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர், லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டது. அப்போது முதல் லடாக் மக்கள் தங்களின் மொழி, கலாச்சாரம் மற்றும் நிலத்துக்கு அரசியல்சாசன பாதுகாப்பு கோரி போராடி வந்தனர்.
இந்நிலையில் அவர்களின்...
ட்ரோன்கள் மூலம் ரயில் பெட்டி களை சுத்தம் செய்வது குறித்து ரயில்வே அமைச்சகம் கூறியுள்ளதாவது: ட்ரோன்கள் மூலம் ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யும் முயற்சி முதல் முறையாக சோதனை அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் அசாமின் காமக்யா ரயில் நிலையத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது.
அங்கு எளிதில் செல்ல முடியாத ரயில் மற்றும் நடைமேடைகளின் பகுதிகளை சுத்தம் செய்ய ட்ரோன்கள் பயன்படுத்தப்பட்டன. மிகவும் வலுவான செயல்திறன் மற்றும் துல்லியத்தன்மையுடன் அதன் பணிகள் அமைந்திருந்தன....
நாடு முழுவதும் ஓராண்டில் 24 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்கின்றனர். அடுத்த 5 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை இருமடங்காக உயரும். அதாவது 2030-ம் ஆண்டு முதல் ஓராண்டில் 50 கோடி பேர் விமான பயணம் மேற்கொள்வர் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
சர்வதேச விமானப் போக்குவரத்து சங்கத்தின் 81-வது வருடாந்திர பொதுக் குழு கூட்டம் மற்றும் உலக விமானப் போக்குவரத்து உச்சி மாநாடு டெல்லியில் நேற்று முன்தினம்...
சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன்: இந்தியாவை மிரட்டிய ஜெய்ஷ் தீவிரவாதி பாகிஸ்தானில் மர்ம மரணம்
admin - 0
இந்தியாவுக்கு மிரட்டல் விடுத்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாதி பாகிஸ்தானில் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
இந்தியாவை சிறு சிறு பகுதிகளாக உடைத்துவிடுவேன் என ஜெய்ஷ்-இ-முகமது (ஜெஇஎம்) தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த அப்துல் அஜிஸ் கடந்த மாதம் மிரட்டல் விடுத்திருந்தார். இந்த சூழ்நிலையில், பாகிஸ்தானின் பஹவல்பூரில் அப்துல் அஜிஸ் மர்மமான முறையில் இறந்து கிடந்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத அமைப்புடன் தொடர்புடைய சமூக ஊடகங்கள் இதை உறுதிப்படுத்தி இருப்பதுடன், பஹவல்பூரில் அஜிஸ் உடலுக்கு...










