மறைந்த விஜயகாந்தின் மகன், சண்முக பாண்டியன் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘படைத் தலைவன்’. இதை அன்பு இயக்கி உள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். விஜே கம்பைன்ஸ், தாஸ் பிக்சர்ஸுடன் இணைந்து வழங்கும் இந்தப் படத்தை ஜகநாதன் பரமசிவம் தயாரித்துள்ளார். வரும் 23-ம் தேதி வெளியாகும் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.
இதில் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், அவரின் மூத்த மகனும் தேமுதிக இளைஞர் அணி செயலாளருமான...
’டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த்ம் சசிகுமாரை போனில் அழைத்து வெகுவாக பாராட்டியுள்ளார்.
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில், இப்படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், சசிகுமாரை போனில் அழைத்து பாராட்டியுள்ளார்.
இது குறித்து சசிகுமார் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்ட பதிவு: “படம் சூப்பர்...
நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் போன்ற ஸ்ட்ரீமிங் தளங்கள் குறித்த தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் அனுராக் காஷ்யப்.
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது, “நாங்கள் 'சேக்ரட் கேம்ஸ்' மற்றும் 'லஸ்ட் ஸ்டோரீஸ்' உள்ளிட்ட தொடர்களை நெட்ஃபிளிக்ஸுக்காக எடுக்கும்போது அதை ஒரு வாய்ப்பு என்று நினைத்தோம். அவர்களுடன் சேர்ந்து சில நல்ல படைப்புகளை உருவாக்கினோம். பின்னர், மெதுவாக, கோவிட் காலத்தில், எல்லாம் தலைகீழாக மாறியது.
இப்போது அவர்கள் செய்து கொண்டிருப்பது தொலைக்காட்சியை...
கமல்ஹாசன், சிம்பு நடித்துள்ள ‘தக் லைஃப்’ படத்தின் கதைக்களம் என்ன என்பது குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
மணிரத்னம் இயக்கத்தில் கமல், சிம்பு, அசோக் செல்வன், த்ரிஷா, அபிராமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘தக் லைஃப்’. மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயண்ட் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் மற்றும் கன்னடம் மொழிகளில் ஜூன் 5-ம் தேதி...
‘படை தலைவன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் ‘ரமணா 2’ படம் எடுப்பது குறித்த தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார்.
சகாப்தம், மதுரை வீரன் படங்களைத் தொடர்ந்து விஜயகாந்த் மகன் சண்முக பாண்டியன் நடிக்கும் படத்துக்கு ‘படை தலைவன்’ என தலைப்பு வைத்துள்ளனர். இதை, வால்டர், ரேக்ளா படங்களை இயக்கிய யு.அன்பு இயக்கியுள்ளார். விஜே கம்பைன்ஸ் சார்பில் ஜகநாதன் பரமசிவம் வழங்கும் இந்தப் படத்துக்கு எஸ்.ஆர்.சதீஷ்குமார் ஒளிப்பதிவு...
கடந்த 2021ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற படம் ‘நோபடி’. பாப் ஓடன்கிர்க் பிரதான கதாபாத்திரத்தில் நடித்த இப்படத்தை இல்யா நைஷல்லர் இயக்கி இருந்தார். யுனிவர்ஸல் பிக்சர்ஸ் தயாரித்திருந்தது. 2021ஆம் ஆண்டுக்கு பிறகு வெளியான பல்வேறு ஆக்ஷன், த்ரில்லர் படங்களில் இப்படத்தின் தாக்கம் இருப்பதை பார்க்க முடியும். தற்போது இப்படத்தின் 2ஆம் பாகம் உருவாகியுள்ளது. இதன் ட்ரெய்லரை படக்குழு வெளியிட்டுள்ளது.
ட்ரெய்லர் எப்படி? - ஆக்ஷன், த்ரில்லர், டார்க் காமெடி...
“எல்லா தோல்விப் படங்களும் எனக்கு முதல் நாள் ஷூட்டிங்கின்போதே தெரிந்துவிடும். ஆனால், நம்மை மீறி செய்யும்போது நம்மால் எதுவும் செய்ய முடியாது” என்று நடிகர் சந்தானம் தெரிவித்துள்ளார்.
சமீபத்திய பேட்டி ஒன்றில் சந்தானம் கூறியது: “ஒரு படத்தின் கதையை படித்துவிட்டு முதல் நாள் ஷூட்டிங் போகும்போதே சொல்லிவிடுவேன், இந்த படம் தோல்வி அடையும் என்று. அதே போலத்தான் ‘ஆல் இன் ஆல் அழகுராஜா’ படத்தின் கதையை படித்துவிட்டு ராஜேஷிடம் சொன்னேன்....
கீர்த்தி சுரேஷ், தமிழில் வெற்றி பெற்ற ‘தெறி’ படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார்.
அதில் ராஜ்குமார் ராவ், ஹீரோவாக நடிக்கிறார். ‘செக்டார் 36’ படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இயக்குகிறார். “இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை நையாண்டியாகப் பேசும் படமாக இது உருவாகிறது. இரண்டு கல்வியாளர்களின் பார்வையில் அறிவை...
சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, கீதா கைலாசம், பானுப்பிரியா என பலர் நடித்துள்ள படம், ‘மெட்ராஸ் மேட்னி’. ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் மணி இயக்கியுள்ளார்.
மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது.
படம் பற்றி கார்த்திகேயன் மணி கூறும்போது, “ஐடி படித்துவிட்டு அது...
நடிகர் பிரதீப் ரங்கநாதன், ‘டிராகன்' பட வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டியூட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டைட்டில் தோற்றம் வெளியிடப்பட்டது.
இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று தெலுங்கு நடிகரும்...










