டோவினோ தாமஸ், த்ரிஷா, வினய் ராய் நடிப்பில் வெளியான மலையாள படம், ‘ஐடென்டிட்டி’. அகில் பால் மற்றும் அனஸ் கான் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இந்தப் படம் தமிழிலும் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்தப் படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
நடிகை த்ரிஷா பேசும்போது, “மலையாளப் படங்கள் நல்ல கதையம்சம் கொண்டதாக இருக்கின்றன. எனக்கு மலையாளப் படங்கள் ரொம்பப் பிடிக்கும். அங்கு வருடத்துக்கு ஒரு படத்தில் நடிக்க வேண்டும்...
விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ். அவினாஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் படம், ‘நாகபந்தம்’. இந்தப் படம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களைச் சுற்றியுள்ள மர்மத்தை ஆராய்கிறது. இந்த புனித தலங்களைப் பாதுகாக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாகக் கொண்டு, இந்தப் படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. அவினாஷ், அகோரியாக நடிக்கிறார்.
அதிநவீன தொழில்நுட்பத்துடனும் விஎஃப்எக்ஸ் மற்றும் அதிரடி ஆக்ஷனுடன்...
வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியில் பெரும் பின்னடவைச் சந்தித்த சூர்யாவின் ‘கங்குவா’ திரைப்படம், ஆஸ்கர் விருது ரேஸில் இடம்பெற்றிருப்பது ரசிகர்களுக்கும் பெரும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த ரேஸில் ‘கங்குவா’ நுழைந்தது குறித்து பார்ப்போம்.
ஆஸ்கர் விருது விழா மார்ச் 2-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விருதுக்கான பரிந்துரைப் பட்டியலின் தெரிவுக்காக போட்டியிட தகுதியானதாக 323 திரைப்படங்களின் பட்டியலை ஆஸ்கர் அகாடமி அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது. இதில் சிறந்த படத்துக்காகப்...
இந்திய பாரம்பரிய இசையில் சாதனை படைத்தவர்களைக் கவுரவிக்க இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தனது ‘கேஎம் மியூசிக் கன்சர்வட்டரி’ நிறுவனத்துடன் இணைந்து ‘பாரத் மேஸ்ட்ரோ' விருதுகளை வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார்.
இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் கடந்த திங்கள்கிழமை தனது பிறந்த நாளை கொண்டாடினர். அவருக்கு அரசியல் மற்றும் திரையுலகினர் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், இந்திய பாரம்பரிய இசை மற்றும் அதன் பயிற்சியாளர்களைக் கொண்டாடும் வகையில் விருதுகளை வழங்க இருப்பதாகத்...
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் படம், ‘கூலி’. இதில் சத்யராஜ், அமீர் கான், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பு சமீபத்தில் ஜெய்ப்பூரில் நடைபெற்றது. அங்கு ஆமீர் கான் பங்குபெற்ற காட்சிகள் படமாக்கப்பட்டன. அடுத்து இதன் படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெறுகிறது.
இந்நிலையில் சென்னை விமான நிலையத்துக்கு வந்த நடிகர் ரஜினிகாந்த், செய்தியாளர்களிடம் பேசும்போது, “கூலி படத்தின் படப்பிடிப்பு 70 சதவிகிதம் முடிவடைந்துவிட்டது. அடுத்த...
விஜய் ஆண்டனியின் ‘கொலை’, ஆர்ஜே பாலாஜியின் ‘சிங்கப்பூர் சலூன்’, விஜய்யின் ‘த கோட்’ படங்களில் நாயகியாக நடித்திருப்பவர் மீனாட்சி சவுத்ரி. தெலுங்கிலும் நடித்து வருகிறார்.
வெங்கடேஷுடன் அவர் நடித்துள்ள ‘சங்கராந்தி வஸ்துன்னம்’ என்ற தெலுங்கு படம் பொங்கலுக்கு வர இருக்கிறது. இந்தப் படத்தின் புரமோஷனில் கலந்துகொண்ட அவர், ‘த கோட்’ படம் வெளியான பிறகு மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டதாகத் தெரிவித்துள்ளார்.
“அந்த படம் வெளியான பிறகு சமூக வலைதளங்களில் அதிகம் ட்ரோல்...
ஜி.வி.பிரகாஷ் குமார், கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘கிங்ஸ்டன்’. அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கும் இதில் திவ்ய பாரதி, ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபு மோகன் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்யும் இந்தப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார்.
இதை ஜீ ஸ்டுடியோஸ் நிறுவனத்துடன் இணைந்து பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்டுள்ளார்.
தமிழ், தெலுங்கு, இந்தி...
‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அனிருத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
கிருத்திகா உதயநிதி இயக்கியுள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் இசை மற்றும் ட்ரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினருடன் அனிருத், இயக்குநர் மிஷ்கின் உள்ளிட்ட திரையுலக பிரபலங்களும் கலந்துக் கொண்டார்கள்.
இதில் இப்படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் பேசும்போது, “இப்போது அனிருத் நன்றாக இசையமைக்கிறார். இவ்வளவு பெரிய படத்துக்கு ஹிட் கொடுக்கிறார். 10000 இசையமைப்பாளர்கள் இருக்கிறார்கள், அதில்...
கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட் நடிப்பில் உருவாகியுள்ள ‘தருணம்’ படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது.
2022ஆம் ஆண்டு அருள்நிதி நடிப்பில் வெளியான ‘தேஜாவு’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த அரவிந்த் சீனிவாசனின் இரண்டாவது படம். இதில் கிஷன் தாஸ், ஸ்மிருதி வெங்கட், ராஜ் ஐயப்பா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தர்புகா சிவா இசையமைத்துள்ள இப்படத்துக்கு ராஜா பட்டாச்சர்ஜீ ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் ஜன.14 திரையரங்குகளில் வெளியாகிறது.
ட்ரெய்லர் எப்படி? - 2.39...
ஜெயம் ரவி, நித்யா மேனன் நடித்துள்ள ‘காதலிக்க நேரமில்லை’ படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் ‘காதலிக்க நேரமில்லை’. இந்தப் படத்தில் யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இந்தப் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்தின் ட்ரெய்லரை படக்குழு இன்று (ஜன.07)...










