Google search engine
கீர்த்தி சுரேஷ், தமிழில் வெற்றி பெற்ற ‘தெறி’ படத்தின் ரீமேக்கான ‘பேபி ஜான்’ மூலம் இந்தியில் அறிமுகமானார். இந்தப் படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் ஒரு இந்தி படத்தில் ஒப்பந்தமாகியுள்ளார். அதில் ராஜ்குமார் ராவ், ஹீரோவாக நடிக்கிறார். ‘செக்டார் 36’ படத்தை இயக்கிய ஆதித்யா நிம்பல்கர் இயக்குகிறார். “இந்தியாவின் தற்போதைய கல்வி முறையை நையாண்டியாகப் பேசும் படமாக இது உருவாகிறது. இரண்டு கல்வியாளர்களின் பார்வையில் அறிவை...
சத்யராஜ், காளி வெங்கட், ரோஷினி ஹரி பிரியன், ஷெல்லி, விஷ்வா, கீதா கைலாசம், பானுப்பிரியா என பலர் நடித்துள்ள படம், ‘மெட்ராஸ் மேட்னி’. ஆனந்த் ஜி. கே. ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப்படத்துக்கு கே.சி.பாலசாரங்கன் இசையமைத்துள்ளார். கார்த்திகேயன் மணி இயக்கியுள்ளார். மெட்ராஸ் மோஷன் பிக்சர்ஸ் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்துள்ளது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் வழங்கும் இந்தப் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. படம் பற்றி கார்த்திகேயன் மணி கூறும்போது, “ஐடி படித்துவிட்டு அது...
நடிகர் பிரதீப் ரங்கநாதன், ‘டிராகன்' பட வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டியூட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டைட்டில் தோற்றம் வெளியிடப்பட்டது. இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று தெலுங்கு நடிகரும்...
சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், 'டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்'. பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இதில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்தப் படம் வரும் 16-ம் தேதி வெளியாகிறது. இதில் ‘சீனிவாசா கோவிந்தா’ எனும் பாடல் இடம்பெற்றுள்ளது. இந்தப் பாடல் திருப்பதி ஏழுமலையான் பக்தர்களை அவமதிக்கும் வகையில் இருப்பதாக இந்து அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து...
சசிகுமார், சிம்ரன் நடிப்பில் அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் வெளியான படம், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரவேற்பைப் பெற்றுள்ளதை அடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடந்தது. அப்போது சிம்ரன் பேசும்போது, “இந்தப் படத்தின் கதையை இயக்குநர் சொன்ன போதே, இது சூப்பர் ஹிட் ஆகும், கண்டிப்பாக நடிக்கிறேன் என்றேன். நான் பல வருடங்களாக இந்த துறையில் இருக்கிறேன். ரசிகர்களின் ஆதரவுதான் அதற்கு...
இந்தி இயக்குநரும் நடிகருமான அனுராக் காஷ்யப், தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளிலும் நடித்து வருகிறார். ‘மகாராஜா’ படத்தில் அவர் நடிப்பு பேசப்பட்டது. அவர், 'தி இந்து' நாளிதழ் சமீபத்தில் நடத்திய கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பேசும்போது, பான் இந்தியா திரைப்படங்கள் மிகப்பெரிய மோசடி என்று விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறும்போது, “பான்-இந்தியா' என்ற சொல் ஒரே நேரத்தில் பல்வேறு இந்திய மொழிகளில் வெளியாகும் படங்களைக் குறிக்கிறது. ‘பாகுபலி' படத்தின் வெற்றிக்குப் பிறகு...
ஜீதமிழ் தொலைக்காட்சியில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பான நிகழ்ச்சி ‘சரிகமப லிட்டில் சாம்ப்ஸ்-சீசன் 4’. இந்நிகழ்ச்சியின் இறுதிக் கட்டப் போட்டியான ‘கிராண்ட் பினாலே’ நேற்று முன் தினம் சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடந்தது. அங்கிருந்து நேரலையில் ஒளிபரப்பானது. சிவகார்த்திகேயன், சந்தானம், ஆர்யா உள்ளிட்ட திரை பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். ஹேமித்ரா, ஸ்ரீமதி, யோகஸ்ரீ, தினேஷ், அபினேஷ், மகதி என ஆறு போட்டியாளர்கள் இறுதிப் போட்டியில்...
பிரபுதேவாவும் இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானும் 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணையும் படம், ‘மூன் வாக்’ . பிஹைண்ட்வுட்ஸ் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி மனோஜ் என்எஸ் இயக்கும் இந்தப் படத்தில் யோகிபாபு, மொட்ட ராஜேந்திரன், நிஷ்மா செங்கப்பா, சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்க்ஸி, மலையாள நடிகர்களான அஜ்ஜு வர்கீஸ், அர்ஜுன் அசோகன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்காக, ஒரு பாடல் காட்சியை முழுவதும் கிராபிக்ஸில் உருவாக்கியுள்ளனர்....
மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படம் ‘ட்ரெயின்’. கடந்த 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்படம் பல்வேறு காரணங்களால் தாமதாகி வருகிறது. இந்த நிலையில், சமீபத்திய நிகழ்வு ஒன்றில் பேசிய இயக்குநர் மிஷ்கின் இப்படத்தின் முழுக் கதையையும் பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியது: “நான் 300 முதல் 600 தடவை ரயிலில் சென்றுள்ளேன். அந்த ரயிலை ஒவ்வொருமுறை பார்க்கும்போது ஒரு ராட்சஷ புழு தன் வயிற்றில் குட்டிகளை ஏற்றிச் சென்று...
பா.இரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா, பசுபதி, கலையரசன், ஜான் கொக்கென், துஷாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகின படம் 'சார்பட்டா பரம்பரை'. அமேசான் ஓடிடியில் நேரடியாக வெளியாகின இந்தப் படத்தை விமர்சகர்கள் கொண்டாடினர். இப்படத்தின் இடம்பெற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. கரோனா பரவல் காரணமாக இப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியானது. ஆனால், இப்படம் திரையரங்கில் வெளியாகியிருந்தால் இன்னும் கொண்டாட்டமாக இருந்திருக்கும் என்று ரசிகர்கள் பலரும் கூறிவந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு...