Google search engine
‘பிச்சைக்காரன் 3’ திரைப்படம் எப்போது தொடங்கும் என்பதற்கு விஜய் ஆண்டனி பதிலளித்துள்ளார். லியோ ஜான் பால் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மார்கன்’. இதனை தமிழகம் முழுக்க பேருந்தில் சுற்றுப் பயணம் செய்து விளம்பரப்படுத்தி வருகிறார் விஜய் ஆண்டனி. இப்படம் ஜூன் 27-ம் தேதி வெளியாகவுள்ளது. ‘மார்கன்’ விளம்பரப்படுத்தும் பேட்டியில், ‘பிச்சைக்காரன் 3’ குறித்து விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு “‘பிச்சைக்காரன் 3’ கதையினை இப்போது கூட...
இந்திய திரையுலகின் உச்சத்தை விஜய் தொட்டுவிட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால், ‘ஜனநாயகன்’ படத்துக்காக அவருக்கு ரூ.250 கோடியை சம்பளமாக கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விஜய் நடிப்பில் கடைசியாக உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. கே.வி.என் நிறுவனம் தயாரித்து வரும் இப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 9-ம் தேதி வெளியாகவுள்ளது. இதன் படப்பிடிப்பு இன்னும் ஓரிரு நாட்கள் மட்டுமே பாக்கி இருக்கிறது. இதன் உரிமைகளைக் கைப்பற்ற கடும் போட்டி நிலவி வருகிறது. இதனிடையே,...
நெல்சன் வெங்கடேசன் இயக்கத்தில், அதர்வா, நிமிஷா சஜயன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம், ‘டிஎன்ஏ’. ஒலிம்பியா மூவிஸ் தயாரித்துள்ள இந்தப் படம் கடந்த 20-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது. இதையடுத்து இதன் வெற்றிவிழா சென்னையில் நடந்தது. படக்குழுவினர் கலந்துகொண்டனர். நடிகை நிமிஷா சஜயன் பேசும்போது, “ஒரு திரைப்படம் வெளியாகும் போது, ஹிட் ஆகுமா, ஆகாதா? என்ற பதற்றம் இருந்து கொண்டிருக்கும். ஆனால் இந்தப் படத்துக்குக் கிடைத்த விமர்சனத்தால்...
பிரபலங்களின் சமூக வலைதளப் பக்கங்கள், அவ்வப்போது ஹேக் செய்யப்படுவது வாடிக்கையாக இருக்கிறது. இந்நிலையில் நடிகை ஸ்ருதிஹாசனின் எக்ஸ் தளப் பக்கத்தை மர்மநபர்கள் முடக்கியுள்ளனர். இதுகுறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் தெரிவித்துள்ள ஸ்ருதிஹாசன், “என்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தை சிலர் முடக்கியுள்ளனர். அதில் தற்போது வரும் தகவல்களை நான் பதிவிடவில்லை. என் கணக்கை மீண்டும் பெறும் வரை, அந்த பக்கங்களில் இருந்து வரும் பதிவுகளுக்குப் பதிலளிக்க வேண்டாம்” எனக் கூறியுள்ளார். முன்னதாக அவர்...
மகாவிஷ்ணுவின் 10 அவதாரங்களை விளக்கும் வகையில், மகாவதார் சினிமாடிக் யுனிவர்ஸ் மூலம் 7 அனிமேஷன் படங்கள் உருவாகின்றன. ஹோம்பாளே பிலிம்ஸ் வழங்கும் இந்தப் படங்களை க்ளீம் புரொடக் ஷன்ஸ்தயாரிக்கிறது. இந்த யுனிவர்ஸின் முதல் படைப்பான 'மகாவதார் நரசிம்மா' ஜூலை 25ல் வெளியாகிறது. இதையடுத்து, மகாவதார் பரசுராம் (2027), மகாவதார் ரகுநந்தன் (2029), மகாவதார் துவாரகாதீஷ் (2031), மகாவதார் கோகுல நந்தா (2033), மகாவதார் கல்கி பார்ட் ஒன் (2035),...
தமிழில், திருப்பாச்சி, சச்சின், மன்மதன் அன்பு, சிங்கம், வீரம் உள்பட பல படங்களுக்கு இசை அமைத்துள்ள தேவிஸ்ரீ பிரசாத் , தெலுங்கிலும் முன்னணி இசை அமைப்பாளராக இருக்கிறார். அவர் இசை அமைப்பில் தொடர்ந்து வெளியான அல்லு அர்ஜுனின் ‘புஷ்பா 2’, நாக சைதன்யாவின் ‘தண்டேல்’, தனுஷின் ‘குபேரா’ ஆகிய படங்கள் தெலுங்கில் வெற்றி பெற்றுள்ளன. ஹாட்ரிக் வெற்றி பெற்றுள்ள நிலையில் தொடர்ந்து சில படங்களுக்கு இசை அமைத்து வருகிறார்...
தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு நடித்துள்ள புராண படம், ‘கண்ணப்பா’. இந்திப் பட இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். இதில், சரத்குமார், பிரீத்திமுகுந்தன், மோகன்பாபு, மது,கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக் ஷய்குமார் எனபலர் நடித்துள்ளனர். பான்இந்தியா முறையில் உருவாகியுள்ள இந்தப் படம் நாளை வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கை அதிகாரிகள், அதிகமான வன்முறை...
மகாபாரதம் தொடரை இயக்கிய இந்தி இயக்குநர் முகேஷ் குமார் சிங், இயக்கியுள்ள படம், ‘கண்ணப்பா’. தெலுங்கு நடிகர் விஷ்ணு மன்சு, கண்ணப்பராக நடித்துள்ளார். சரத்குமார், பிரீத்தி முகுந்தன், மோகன்பாபு, மது, கருணாஸ், பிரம்மாஜி, பிரம்மானந்தம் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் மோகன்லால், பிரபாஸ், காஜல் அகர்வால், அக்‌ஷய்குமார் என பலர் நடித்துள்ளனர். பான் இந்தியா முறையில் வெளியாகியுள்ள இந்தப் படத்தைத் தமிழில் சக்தி பிலிம் பேக்டரி நிறுவனம் ஜூன்...
நாகராஜ சோழன் எம்.ஏ, எம்.எல்.ஏ, மாநாடு, வணங்கான் உள்ளிட்ட படங்களைத் தனது வி ஹவுஸ் புரொடக்‌ஷன்ஸ் மூலம் தயாரித்தவர் சுரேஷ் காமாட்சி. இப்போது ‘ஏழு கடல் ஏழு மலை’ என்ற படத்தை தயாரித்துள்ளார். இவர் நிறுவனத்தின் பெயரைப் பயன்படுத்தி சிலர் மோசடியில் ஈடுபட்டு வருவதாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுபற்றி சுரேஷ் காமாட்சி வெளியிட்டுள்ள பதிவில், “எமது நிறுவனத் தயாரிப்பில் எந்த படத்துக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு...
நடிகர் கார்த்தி, ‘சர்தார் 2’ படத்தில் நடித்து முடித்திருக்கிறார். பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இதில் ஆஷிகா ரங்கநாத், மாளவிகா மோகனன் என பலர் நடித்துள்ளனர். இதையடுத்து அவர் நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடையவில்லை. இன்னும் 10 நாட்கள் பாக்கி இருக்கிறது. இதற்கிடையே நடிகரும் இயக்குநருமான ‘டாணாக்காரன்’ தமிழ் இயக்கத்தில் கார்த்தி நடிக்க இருக்கும் படத்தின் அறிவிப்பு கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியானது. கார்த்தியின் 29-வது படமான இதன் படப்பிடிப்பு...