தென்னிந்திய இயக்குநர்கள் பாலிவுட்டில் படம் இயக்குவது பற்றி இன்று பெருமையாகப் பேசுகிறோம். ஆனால், 1940-களில் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் என 4 மொழிகளில் படங்கள் இயக்கிய முதல் இயக்குநர், ஒய்.வி.ராவ் என்றழைக்கப்படும் எறகுடிப்பட்டி வரத ராவ். அவர் காலத்தில் இது பெரிய சாதனை. அவர் தமிழில் இயக்கிய படங்களில் ஒன்று, ‘சாவித்திரி’. மகாபாரதத்தில் வரும் ‘சத்யவான் சாவித்திரி’ கதைதான்.
துயுமத்சேனன் என்னும் சால்வ நாட்டு மன்னன் போரில் தோல்வியடைந்து,...
முதன்முதலில் இப்படத்தின் டீசர் வெளியான போதே இப்படம் குறித்த சர்ச்சைகளும் சமூக வலைதளங்களில் தீயாய் எரியத் தொடங்கிவிட்டது. குறிப்பிட்ட சமூக உணர்வுகளை புண்படுத்துவதாகவும், பதின்பருவ பிள்ளைகள் மனதில் நஞ்சை விதைக்கும் முயற்சி எனவும் இப்படத்துக்கு எதிராக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. நீதிமன்றம் வரை சென்று சென்சாரில் பல ‘கட்’களை பெற்று ஒருவழியாக திரையரங்குகளில் வெளியாகியுள்ளது ‘பேட் கேர்ள்’.
கதை நாயகியான ரம்யா (அஞ்சலி சிவராமன்) என்ற பெண்ணின் வாழ்க்கையின் மூன்று பருவங்களை,...
பிரபல பாடலாசிரியர் பூவைச் செங்குட்டுவன் (90) சென்னையில் காலமானார்.
சிவகங்கை மாவட்டம் கீழப்பூங்குடியைச் சேர்ந்த, பூவை செங்குட்டுவன், 1967-ம் ஆண்டு முதல், திரைப்பாடல்கள் எழுதி வந்தார். ஆயிரத்துக்கு அதிகமான திரைப் பாடல்களை எழுதியுள்ள இவர், பக்தி பாடல்கள் உள்பட 4 ஆயிரத்துக்கும் அதிகமான தனிப் பாடல்களையும் எழுதி உள்ளார்.
எம்.ஜி.ஆரின் ‘புதிய பூமி’ படத்தில் இடம்பெறும், ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’, அகத்தியர் படத்தில் ‘தாயிற் சிறந்த கோயிலுமில்லை’, ராஜராஜ சோழன்...
‘அங்காடித் தெரு’ மகேஷ், குணா பாபு, கே.எம்.பாரி வள்ளல், திருவாரூர் கணேஷ், மஹாதீர் முகமது ஆகியோர் கதையின் நாயகர்களாக நடித்துள்ள படம், ‘தடை அதை உடை’.
நாகராஜ், டெல்டா சரவணன், ஆம்பல் சதீஷ், எம்.கே.ராதாகிருஷ்ணன், வேல்முருகன் உள்ளிட்டோரும் நடித்துள்ளனர். சாய் சுந்தர் இசையமைத்துள்ளார். தங்கப்பாண்டியன், சோட்டா மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளனர். காந்திமதி பிக்சர்ஸ் என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.
படத்தை எழுதி இயக்கியுள்ள அறிவழகன் முருகேசன் கூறும்போது, “1990-க்கு முன் பட்டுக்கோட்டையில் கொத்தடிமையாக...
தமிழகத்தில் துப்பாக்கிக் கலாச்சாரத்தைக் கொண்டு வர, வட மாநிலத்தைச் சேர்ந்த விராட் (வித்யுத் ஜம்வால்), சிராக் (சபீர் கல்லரக்கல்) தலைமையில் ஒரு கூட்டம் திட்டமிடுகிறது. தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) பிரேம் (பிஜூ மேனன்), தலைமையில் ஒரு குழு, அதைத் தடுக்க முயற்சிக்கிறது. இதில் காதல் பிரச்சினையால் தற்கொலைக்கு முயலும் ரகு (சிவகார்த்திகேயன்) என்ஐஏ வட்டத்துக்குள் வருகிறார். அவருடைய உயிரை பணயம் வைத்து துப்பாக்கிக் கடத்தல் கும்பலை அழிக்க,...
‘தி காஷ்மீர் ஃபைல்ஸ்’ படத்தை இயக்கிய விவேக் அக்னிகோத்ரி, இப்போது ‘த பெங்கால் ஃபைல்ஸ்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் மிதுன் சக்கரவர்த்தி, அனுபம் கெர், தர்ஷன் குமார், பல்லவி ஜோஷி என பலர் நடித்துள்ளனர். செப்.5-ல் வெளியாக இருக்கும் இந்தப் படம், 1946-ம் ஆண்டு மேற்கு வங்கத்தில், நவகாளி மாவட்டத்தில் நடந்த மதக் கலவரத்தை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதனால் இந்தப் படத்துக்கு அம்மாநிலத்தில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. படத்தை...
ரஜினியின் ‘கூலி’ படம் மூலம் தமிழிலும் அறிமுகமானவர் மலையாள நடிகர், சவுபின் சாஹிர். இவர், 'மஞ்சும்மள் பாய்ஸ்' மூலம் மற்ற மொழிகளிலும் பிரபலமானார். இந்தப் படத்தை ஷான் ஆண்டனியுடன் இணைந்து சவுபின் சாஹிர் தயாரித்தார். இந்நிலையில் இந்தப் படத்துக்கு, ரூ.7 கோடி முதலீடு செய்ததாகவும் படத்தின் லாபத்தில் 40% பங்கு தருவதாகக் கூறி, தயாரிப்பாளர்கள் ஏமாற்றி விட்டதாகவும் கேரள மாநிலம் அரூர் பகுதியைச் சேர்ந்த சிராஜ் என்பவர் வழக்குத்...
சமுத்திரக்கனி, கவுதம் வாசுதேவ் மேனன் முதன்மை வேடங்களில் நடிக்கும் படத்துக்கு 'கார்மேனி செல்வம்' என்று தலைப்பு வைத்துள்ளனர். இதில் சமுத்திரக்கனி ஜோடியாக லட்சுமி பிரியாவும் கவுதம் வாசுதேவ் மேனன் ஜோடியாக அபிநயாவும் நடிக்கின்றனர். நகைச்சுவை, சென்டிமென்ட் கலந்த குடும்பப் படமாக உருவாகும் இதை, பாத்வே புரொடக் ஷன்ஸ் சார்பில் அருண் ரங்கராஜூலு தயாரிக்கிறார். யுவராஜ் தக் ஷன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தை இயக்கியுள்ள ராம் சக்ரி கூறும்போது, “ அமைதியான,...
ஜீ தமிழ் சேனலில் ‘பாரிஜாதம்’ என்ற புதிய சீரியல் செப்.8-ம் தேதி முதல் ஒளிபரப்பாக உள்ளது. இதில் ‘ராஜா ராணி’ சீரியல் மூலம் பிரபலமான ஆல்யா மானசா, இசை என்ற முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ராஷிக் உர்ஸ் கோபால், சுவாதி என பலர் நடிக்கின்றனர்.
ஒரு விபத்தில், கேட்கும் தன்மையை இழக்கும் இசை, ஒரே ஒரு பொய்யால் பிரபல பாடகர் ஒருவரைத் திருமணம் செய்து கொள்கிறார். ஜாதகத்தைப் பெரிதாக நம்பும்...
ஆர்த்தி ரவியின் இன்ஸ்டாகிராம் பதிவு ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் “கடவுளை ஏமாற்ற முடியாது. மற்றவர்களை ஏமாற்றலாம். உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளலாம். ஆனால் கடவுளை ஏமாற்ற முடியாது” என்று ஆர்த்தி ரவி பதிவிட்டிருந்தார். ரவிமோகன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நேரத்தில் அவர் வைத்திருந்த இந்த ஸ்டோரி சமூக வலைதளங்களில் வைரலானது.
நடிகர் ரவி மோகன், ‘ரவி மோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில்...










