Google search engine
தீபாவளி பண்டிகை என்றாலே நினைவுக்கு வருவதில் பட்டாசு தவிர்த்து மற்றோரு முக்கியமான விஷயம் தீபாவளி ரிலீஸ் திரைப்படங்கள். சாதாரண நாட்களில் ரிலீஸ் செய்யப்படும் படங்களை விட தீபாவளியில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு ஆடியன்ஸ் மத்தியில் மவுசு அதிகம். காரணம் அதிகாலையில் எழுந்து குளித்து, புத்தாடை அணிந்து பட்டாசு வெடித்துவிட்டு குடும்பத்துடன் திரையரங்குக்கு சென்று புதிய படம் பார்த்தால்தான் சிலருக்கு தீபாவளியே நிறைவடையும். அதிலும் பெரிய ஸ்டார்களின் படம் என்றால்...
செல்வராகவன் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் கதையின் நாயகனாக நடிக்கும் படம், ‘மெண்டல் மனதில்’. இதில் நாயகியாக மாதுரி ஜெயின் நடிக்கிறார். அருண் ராமகிருஷ்ணன் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்தை பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் ஜி.வி.பிரகாஷ் தயாரிக்கிறார். ரொமான்ஸ் படமாக உருவாகி வரும் இதன் பாடல்கள் குறித்து, ஜி.வி.பிரகாஷ் கூறும்போது, “இந்தப் படம் என் மனதுக்கு நெருக்கமான படம். இதில் இடம்பெறும் பாடல்கள் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். ரசிகர்களுக்கும் இது புதிய...
நடிகர் சூர்யா நடித்து, கடந்த 2014-ம் ஆண்டு வெளியான படம், ‘அஞ்சான்’. லிங்குசாமி இயக்கியிருந்த இந்தப் படத்தைத் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் சமந்தா நாயகியாக நடித்திருந்தார். வித்யூத் ஜாம்வால், மனோஜ் பாஜ்பாய், சூரி, முரளி சர்மா உள்பட பலர் நடித்திருந்தனர். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்திருந்தார். யுவன் ஷங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட்டாகி இருந்தன. ஆனால், படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் இந்தப் படம் வெளியாகி...
மலையாள இயக்குநர் சத்யன் அந்திக்காடு இயக்கத்தில் 2003-ம் ஆண்டு வெளியான ‘மனசினக்கரே’ என்ற படம் மூலம் நடிகையாக அறிமுகமானார், நயன்தாரா. சரத்குமார் நடித்த ‘ஐயா’ படம் மூலம் தமிழுக்கு வந்த அவர், தெலுங்கு, மலையாளம், இந்தி மொழிகளிலும் நடித்துள்ளார். இந்நிலையில் சினிமாவில் 22 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதைத் தனது சமூக வலைதளத்தில் தெரிவித்துள்ள அவர், அதற்காகப் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார். அதில், “22 ஆண்டுக்கு முன் கேமராவுக்கு முன்னால் முதன்முதலில்...
நயன்தாரா – கவின் இணைந்து நடித்து வரும் படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். விஷ்ணு எடவன் இயக்கத்தில் கவின் – நயன்தாரா நடிக்க புதிய படமொன்று தொடங்கப்பட்டது. ஆனால், திட்டமிட்டப்படி படப்பிடிப்பு நடைபெறாமல் கருத்து வேறுபாடுகள் நிலவி வந்தன. தற்போது அனைத்து கருத்து வேறுபாடுகளும் தீர்க்கப்பட்டு, படப்பிடிப்பு தொடங்கவுள்ளார்கள். இப்படத்துக்கு ‘ஹாய்’ எனப் பெயரிடப்பட்டு ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு. செவன் ஸ்கிரீன் நிறுவனம் தயாரித்து வந்த இப்படத்தில்...
‘அரசன்’ படத்தில் சிம்புவுக்கு வில்லன் யார் என்பது குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள ‘அரசன்’ படத்தின் முதற்கட்டப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. முதற்கட்ட படப்பிடிப்பு வடசென்னையிலேயே நடத்த படக்குழு முடிவு செய்திருக்கிறது. அதனைத் தொடர்ந்து அரங்குகளில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதற்காக வடசென்னையை அரங்குகளாக உருவாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. ‘அரசன்’ படத்தில் சிம்புவுடன் ஆண்டரியா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். ஆனால்,...
பண்பாடு, கலாச்சாரம், அகிம்சையை போதிக்கும் அற்புத படைப்பான ‘இட்லி கடை’ திரைப்படத்தை மாணவர்களுக்கு இலவசமாக திரையிட்டு காண்பிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழக பாஜக வலியுறுத்தி உள்ளது. இதுகுறித்து பாஜக மாநில செய்தி தொடர்பாளர் ஏ.என்.எஸ்.பிரசாத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தனுஷ் இயக்கி நடித்து வெளிவந்துள்ள ‘இட்லி கடை' தமிழ் திரைப்படம் நம்முடைய சமூக, பண்பாடு, கலாச்சாரத்தின் ஆணி வேராக, நேர்மறை எண்ணங்களை விதைத்து, கலைத்திறன் மிக்க படைப்பாக,...
இயக்​குனர் ரிஷப் ஷெட்​டி​யின் இயக்​கிய காந்​தா​ரா: சாப்​டர் 1 திரைப்​படம் உலகம் முழு​வதும் வெளி​யாகி வசூலில் முதல் இடத்​தில் உள்​ளது. இந்​தி​யா​வில் ஒரே வாரத்​தில் இதன் வசூல் ரூ.379 கோடியை எட்​டியது. இந்தி படத்​தின் வசூல் கடந்த புதன்கிழமை ரூ100 கோடியை கடந்​தது. தெலுங்கு பதிப்பின் வசூல் இது வரை ரூ.60 கோடிக்கு மேல் உள்​ளது. மலை​யாளம் மற்​றும் தமிழ் மொழி​யில் டப்​பிங் செய்​யப்​பட்ட படங்​களும் ரூ.20 கோடிக்கு மேல்...
பத்​திரிகையாளர் லட்சுமிகாந்தன், 1944-ம் ஆண்டு கத்தியால் குத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட வழக்கில், சிறையில் அடைக்கப்பட்டார்கள், எம்.கே.தியாகராஜ பாகவதரும் என்.எஸ்.கிருஷ்ணனும். முப்பது மாத சிறைவாசத்துக்குப் பிறகு வெளியே வந்த தியாகராஜ பாகவதர், தனது நெருங்கிய நண்பர்களையும் விருப்பமாகச் செல்லும் இடங்களையும் தவிர்த்துவிட்டு, கோயில்களுக்குச் செல்லத் தொடங்கினார். ஆன்மிக நாட்டம் அதிகமானது அவருக்கு. தென்னிந்திய சினிமாவின் முதல் சூப்பர் ஸ்டாரான அவர், இந்த வழக்கு விவகாரத்தால் மங்கிய தனது புகழை, அடுத்த படம்...
அறிமுக இயக்குநர் த.ஜெயவேல் இயக்கும் படம், ‘ராம் அப்துல்லா ஆண்டனி’. மூன்று மாணவர்களின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களை மையமாக வைத்து உருவாகும் இந்தப் படத்தில் ‘சூப்பர் சிங்கர்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற பூவையார் ஹீரோவாக நடிக்கிறார். அஜய் அர்னால்ட், அர்ஜுன் ஆகியோர் மற்ற மாணவர்களாக நடிக்கின்றனர். வேல ராமமூர்த்தி, தலைவாசல் விஜய், சாய் தீனா, கிச்சா ரவி, சாம்ஸ், வினோதினி வைத்தியநாதன் உள்பட பலர் நடித்துள்ளனர். சிறப்புத் தோற்றத்தில் வனிதா விஜயகுமார்...