Google search engine
தமிழில், மார்கெட் ராஜா எம்.பி.பி.எஸ், பிச்சைக்காரன் 2 படங்களில் நடித்தவர் காவ்யா தாபர். இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள இவர், சினிமாவுக்கு வரும் முன் பாலியல் துன்புறுத்தலை எதிர்கொண்டதாக புகார் தெரிவித்துள்ளார். இதுகுறித்து காவ்யா தாபர் கூறும்போது, “சினிமாவுக்கு வரும் முன் விளம்பர படங்களில் நடித்து வந்தேன். அப்போது இயக்குநர் ஒருவர், ஆடிஷனுக்காக அவர் அலுவலகத்துக்கு அழைத்திருந்தார். சென்றேன். அவர் என்னிடம் பாலியல் சலுகையை எதிர்பார்த்தார். 4 வாய்ப்புகள் கிடைக்கும்...
‘ஒரு கிடாயின் கருணை மனு’, ‘சத்திய சோதனை’ உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களை இயக்கிய இயக்குநர் சுரேஷ் சங்கையா காலமானார். அவருக்கு வயது 41. அவரது மறைவு திரையுலகை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடந்த 2017-ல் வெளியான ‘ஒரு கிடாயின் கருணை மனு’ திரைப்படம் தான் சுரேஷ் சங்கையா இயக்கிய முதல் படம். புதுமண தம்பதியர்கள் கோயிலுக்கு நேர்த்திக்கடன் செலுத்த ஆடு ஒன்றை பலி கொடுக்க சென்று இருப்பார்கள். அங்கு என்ன நடந்தது...
அஜித் படங்களுக்கு ‘அப்டேட்’ கேட்டு அலப்பறையைக் கொடுப்பதில் அவரது ரசிகர்களை அடிச்சுக்க முடியாது. அந்த வகையில் தற்போது ‘விடாமுயற்சி’ படத்துக்காக புது ஸ்டைலை அவர்கள் பின்பற்றத் தொடங்கியிருக்கிறார்கள். தியேட்டர்களிலும் பொது நிகழ்ச்சிகளிலும் சம்பந்தமே இல்லாமல் ‘கடவுளே அஜித்தே…’ எனக் கும்பலாகக் கூச்சலிட்டு பார்வையாளர்களை ‘ஜர்க்’ ஆக்கி வருவதுதான் அந்த புது பாணி. இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் பலரும் புலம்புகிறார்கள். ‘விடாமுயற்சி’ படத்தின் ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர் மட்டுமே வெளியாகியுள்ளதால்...
படப்பிடிப்புக்காக வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்களை வெட்டிய புகாரில் ‘டாக்சிக்’ பட தயாரிப்பாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பிரசாந்த் நீல் இயக்கத்தில் வெளியான ‘கேஜிஎஃப்’ சீரிஸ் படங்களின் பிரமாண்ட வெற்றிக்குப் பிறகு யஷ் நடிக்கும் புதிய படத்தை மலையாள இயக்குநர் கீது மோகன்தாஸ் இயக்குகிறார். இந்தப் படத்துக்கு ‘டாக்சிக்’ (TOXIC) என்று தலைப்பிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் நயன்தாரா, தாரா சுட்டேரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள். கே.வி.என் நிறுவனம் இந்தப்...
இந்தி நடிகையான மிருணாள் தாக்குர், ‘சீதாராமம்’ படம் மூல தென்னிந்திய சினிமாவில் அறிமுகமானார். அடுத்து தெலுங்கில் சில படங்களில் நடித்துள்ள அவர், விரைவில் தமிழில் அறிமுகமாக இருக்கிறார். இந்நிலையில் அவர் அளித்துள்ள பேட்டியில், சமீபகாலமாக தனக்காகக் கதைகள் எழுதப்படுவது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: சீதாராமம், ஹாய் நன்னா படங்களுக்குப் பிறகு எனக்கு அதிக வாய்ப்புகள் வருகின்றன. இந்தப் படங்கள் என் மீதான எதிர்பார்ப்பை அதிகரிக்க...
ரஜினி நடித்து வரும் ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 2025-ம் ஆண்டு வெளியாகவுள்ள படங்களின் வெளியீட்டு தேதிகள் முடிவு செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தங்களது ‘கூலி’ படத்தை மே 1-ம் தேதி வெளியிட முடிவு செய்திருக்கிறது. இதற்கான அறிவிப்பை தங்களது விநியோகஸ்தர்களுக்கு தெரிவித்திருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி, சத்யராஜ், உபேந்திரா, நாகார்ஜுனா, ஸ்ருதிஹாசன்...
நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘வா வாத்தியார்’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. டீசர் எப்படி? - இந்தப் படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்துள்ளார் கார்த்தி. மொத்த டீசரும், இசையிலேயே நகர்கிறது. ஆனந்த் ராஜுக்கான ‘எம்ஜிஆர்’ கெட்டப், சத்யராஜின் வித்தியாசமான தோற்றம், எம்ஜிஆர் ரசிகராக ராஜ்கிரண் என கதாபாத்திரங்கள் கவர்கின்றன. இடையில் நம்பியார் ரெஃபரன்ஸ் வந்து செல்கிறது. கீர்த்தி ஷெட்டி தலையை காட்டி...
விமல், கருணாஸ் நடித்து கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியான படம், ‘போகுமிடம் வெகு தூரமில்லை’. மைக்கேல் கே ராஜா இயக்கிய இந்தப் படம் விமர்சன ரீதியாகப் பாராட்டப்பட்டது. ஓடிடி-யில் சிறப்பான வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தை அடுத்து, புதிய படத்துக்கான கதை விவாதத்தில் இருக்கிறார், இயக்குநர் மைக்கேல் கே ராஜா. அவர் கூறும்போது, “ஒரு நல்ல படம் மக்களைக் கண்டிப்பாகப் போய்ச் சேரும் என்பதற்கு இந்தப் படம் சிறந்த உதாரணம்....
97-வது ஆஸ்கர் விருது விழா, அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடக்கிறது. இந்த விருதின் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவுக்கு இந்தியா சார்பில் ஒவ்வொரு வருடமும் அதிகாரப்பூர்வமாக ஒரு படம் பரிந்துரைக்கப்படுவது வழக்கம். இந்த வருடம், ஆமிர்கான் தயாரிப்பில் அவரின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கிய ‘லாபதா லேடீஸ்’ என்ற இந்திப் படத்தை அனுப்புவதாக இந்திய திரைப்பட கூட்டமைப்பு, சில மாதங்களுக்கு முன் அறிவித்தது. இந்நிலையில் சர்வதேச பார்வையாளர்களைச்...
நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா’ படத்தை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரி்த்துள்ளது. நாளை (நவ.14) வெளியாகும் இந்தப் படத்துக்கு தடை கோரி ஏற்கெனவே ரிலையன்ஸ் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. அதில், ரூ.99 கோடி கடனாக கொடுத்த நிலையில் ரூ.54 கோடி பாக்கியுள்ளதாக தெரிவித்திருந்தது. உயர் நீதி்மன்ற உத்தரவுப்படி அந்நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய ரூ.54 கோடியை ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் செலுத்தியது. இந்நிலையில் சென்னையைச் சேர்ந்த அர்ஜூன்லால் சுந்தர்தாஸ் என்பவர் இறந்து...