உலகளவில் ‘டாக்சிக்’ படத்தை வெளியிட, ஹாலிவுட் நிறுவனத்துடன் அப்படக்குழு பேச்சுவார்த்தையில் இருக்கிறது.
‘கே.ஜி.எஃப் 2’ படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பைத் தொடர்ந்து யஷ் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘டாக்சிக்’. இதன் படப்பிடிப்பு மும்பையில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனை கே.வி.என் நிறுவனம் தயாரித்து வருகிறது. இதனை டிசம்பர் மாதம் வெளியிடலாம் என படக்குழு திட்டமிட்டு இருக்கிறது.
இதனிடையே, இப்படத்தை உலகளவில் வெளியிட யஷ் திட்டமிட்டு இருக்கிறார். இதற்காக பிரபல ஹாலிவுட்...
‘காதலிக்க நேரமில்லை’ படம் பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ம் தேதி ரிலீஸ் ஆவதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அஜித்தின் ‘விடாமுயற்சி’ படக்குழுவினர் பொங்கல் வெளியீடு சாத்தியமில்லை என்று அறிவித்துவிட்டார்கள். இதனால் பல்வேறு படங்கள் பொங்கல் வெளியீட்டை உறுதிச் செய்து வருகின்றன. இதில் ‘காதலிக்க நேரமில்லை’ படமும் ஒன்று.
கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் ஜெயம் ரவி, நித்யா மேனன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள படம் ‘காதலிக்க நேரமில்லை’. ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ள இப்படத்திலிருந்து 2 பாடல்கள்...
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘கேம் சேஞ்சர்’. இதில், கியாரா அத்வானி, எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, ஜெயராம் உட்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசையமைத்துள்ள இந்தப் படம், ஜன. 10 -ம் தேதி வெளியாகிறது.
இந்தப் படத்துக்கான புரமோஷன் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. இந்நிலையில், ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் ராம் சரணுக்கு 256 அடி உயர கட்-அவுட் வைக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் நடிகர்களுக்காக வைக்கப்பட்ட கட்-அவுட்களிலேயே இது...
மாட் ரீவ்ஸ் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு வெளியான ஹாலிவுட் திரைப்படம், ‘த பேட்மேன்’. ராபர்ட் பேட்டின்சன், ஜுயி கிராவிட்ஸ், பால் டனோ, ஜெஃப்ரி ரைட் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தை வார்னர் பிரதர்ஸ் தயாரித்தது. காவல்துறை மற்றும் பேட்மேனுக்கு கடும் சவாலாக இருக்கிறான், ஒரு சீரியல் கில்லர். தனது சாகசத்தோடு, துப்பறியும் திறனையும் கொண்டு குற்றவாளியை பேட்மேன் பிடிப்பதுதான் படம்.
இது உலகம் முழுவதும் வரவேற்பைப் பெற்றதை...
மலையாள நடிகர் திலீப் சங்கர் சடலமாக ஓட்டல் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளார். மலையாள திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்து வந்தவர், திலீப் சங்கர்.
‘சப்பா குரிஷு’, ‘ நார்த் 24 காதம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ள அவர், அம்மா அறியாதே, சுந்தரி, பஞ்சாக்னி உட்பட பல சின்னத்திரை தொடர்களில் நடித்துள்ளார். இவர் கடந்த 19-ம் தேதி திருவனந்தபுரத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் அறை எடுத்துத் தங்கியிருந்தார். சில நாட்களாக அவர்...
கை வைத்த தொழில்களில் எல்லாம் வெற்றிக்கொடி நாட்டுபவர் முருகப்பா சென்ராயர் (தம்பி ராமையா). மனைவி இருக்கும்போதே, தனது ஊழியரான வள்ளிமலரை இரண்டாம் திருமணம் செய்துகொள்கிறார். இவரது பலவீனத்தைப் பயன்படுத்தி பணம் பார்க்கும் மற்றொரு பெண்ணான விசாகா, தனது காதல் கணவன் ஆல்பர்ட்டின் (பாடகர் கிருஷ்) குடும்ப வன்முறையிலிருந்து தன்னைக் காக்கும்படி மன்றாடுகிறார். முருகப்பாவின் அறிவுரைக்கு அடங்க மறுத்து பிளாக்மெயில் செய்யும் ஆல்பர்ட்டை, கொலைசெய்யும்படி தன் ஆட்களை அனுப்புகிறார். பிறகு...
போலீஸ் அதிகாரி அர்ஜுன் என்ற மேக்ஸ் (கிச்சா சுதீப்), இடைநீக்கம் முடிந்து புதிதாகப் பொறுப்பேற்க வருகிறார் புதிய ஸ்டேஷனுக்கு. வரும் வழியில் பெண் போலீஸிடம் தகராறில் ஈடுபடும் இரண்டு பேரை, அடித்து லாக்கப்பில் தள்ளுகிறார். அவர்கள் அமைச்சரின் மகன்கள் என்று தெரிந்ததும் மற்ற போலீஸ்காரர்கள், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தயங்குகிறார்கள். இந்நிலையில் லாக்கப்பில் இருந்தவர்கள் திடீரென்று இறந்து கிடக்கிறார்கள். அவர்களின் செல்போனில் முக்கிய ஆதாரங்கள் இருப்பதால்...
பிரபல இந்தி நடிகை சுஷ்மிதா சென், தமிழில் ‘ரட்சகன்’ படத்தில் நடித்துள்ளார். ‘முதல்வன்’ படத்தில் ஒரு பாடலுக்கு ஆடியுள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், தனது இளம் பருவத்தில் சல்மான் கான் மீது காதல் கொண்டதாகத் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் கூறும்போது, “சல்மான் கானின் முதல் படம் வெளியான போதே அவர் மீது எனக்கு காதல் வந்துவிட்டது. வீட்டில் என் செலவுக்குத் தரும் பணத்தை அவருடைய போஸ்டர் வாங்குவதற்காகச் செலவிட்டேன்....
ஒரு விபத்துக்குப் பிறகு மறதி நோயின் தாக்கத்தால் அவதிப்படுகிறார் சிதம்பரம் (சரத்குமார்). சிறப்புப் புலனாய்வுத் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்ற காவல் அதிகாரியான அவருடைய நினைவுகள் அனைத்தும் வெகு விரைவில் மறந்து போய்விடும் என்கிறார் மருத்துவர். இப்படிப்பட்டச் சிக்கலான நிலையில், ஒரு ‘சீரியல் கில்லர்’ வழக்கைக் கையிலெடுக்க வேண்டிய கட்டாயம் காரணமாக மீண்டும் பணியில் இணைகிறார். அவராலும் அவருடைய குழுவினராலும் அந்த வழக்கை முடிவுக்குக் கொண்டுவர முடிந்ததா என்பது கதை.
முதன்மைக்...
நெல்சன் இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆரை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது.
‘ஜெயிலர்’ வெற்றிக்குப் பிறகு ‘ஜெயிலர் 2’ படத்தை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறார் நெல்சன். இதன் படப்பிடிப்பு மார்ச் மாதத்தில் தொடங்கவுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. ரஜினியுடன் நடிக்க இருப்பவர்கள் தேர்வு மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இதனிடையே, ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்க நெல்சனிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளது. இது தொடர்பான ஜூனியர் என்.டி.ஆர் - நெல்சன் சந்திப்பும்...










