அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள ‘புஷ்பா 2’, வரும் 5-ம் தேதி வெளியாகிறது. படத்தை விளம்பரப் படுத்தும் நிகழ்ச்சிகளில் படக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். அல்லு அர்ஜுன் தனது ரசிகர்களை ராணுவம் என்று அழைப்பது வழக்கம். அவர்கள் தனக்காகப் போராடுகிறார்கள் என்றும் கூறுவார். சமீபத்தில் மும்பையில் நடந்த நிகழ்ச்சியிலும் அப்படிக் குறிப்பிட்டார். இந்நிலையில், ரசிகர்களை ராணுவம் என்று அழைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அல்லு அர்ஜுன் மீது ஹைதராபாத்தைச் சேர்ந்த...
அனைத்து மாநிலங்களிலும் டிக்கெட் விலை உயர்வால், ‘புஷ்பா 2’ படம் வசூல் சாதனை படைக்கும் என்று வர்த்தக நிபுணர்கள் கணித்திருக்கிறார்கள்.
இந்திய அளவில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக மாறியிருக்கிறது ‘புஷ்பா 2’. நீண்ட நாட்கள் படப்பிடிப்பு, பெரும் பொருட்செலவு, இசையமைப்பாளர் மாற்றம் என பல்வேறு சிக்கல்களை கடந்து வெளியாகிறது. அனைத்து ஏரியாவிலும் முன்னணி விநியோகஸ்தர்கள் மூலமாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனமே வெளியிடுகிறது. தயாரிப்பு நிறுவனத்தின் முடிவினால் மும்பை, கர்நாடகா,...
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தொடர்களின் மூலம் கவனம் பெற்ற கன்னட நடிகை ஷோபிதா சிவண்ணா ஹைதராபாத்தின் கச்சிபௌலி பகுதியில் உள்ள தனது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார். தற்கொலையா, கொலையா என்ற கோணத்தில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக கச்சிபௌலி காவல்துறையினர் கூறுகையில், “ஷோபிதாவின் கணவர் வீட்டிற்கு வந்து பலமுறை கதவை தட்டி பார்த்துள்ளார். ஆனால், அவர் கதவை திறக்கவில்லை. ஒரு கட்டத்தில் அவர் கதவை உடைத்து...
சீரஞ்சிவி தான் நடிக்கவுள்ள அடுத்த படங்களை கவனத்துடன் தேர்வு செய்து வருகிறார்.
‘போலா ஷங்கர்’ படத்தின் தோல்விக்குப் பிறகு தனது அடுத்த படங்களின் தேர்வில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார் சீரஞ்சிவி. தற்போது ‘விஸ்வாம்பரா’ என்னும் படத்தில் நடித்து வருகிறார். இதனை யுவி கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.
இப்படத்துக்குப் பிறகு தனது அடுத்த படம் என்ன என்பதை தேர்வு செய்யாமலேயே இருந்தார். தற்போது ‘விஸ்வாம்பரா’ படத்துக்குப் பிறகு அனில் ரவிப்புடி...
’96’ படத்தின் 2-ம் பாகத்தின் முதற்கட்டப் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. ‘மெய்யழகன்’ படத்தை விளம்பரப்படுத்தும்போது ‘96’ படத்தின் 2-ம் பாகத்துக்கான கதையை எழுதி வருவதாக இயக்குநர் பிரேம் குமார் தெரிவித்திருந்தார். அந்தச் செய்தி பெரும் வரவேற்பை பெற்றது. அதில் கதை மட்டுமே எழுதி வருவதாகவும், இன்னும் விஜய் சேதுபதி, த்ரிஷா உள்ளிட்டோரிடம் சொல்லவில்லை எனவும் பிரேம் குமார் குறிப்பிட்டு இருந்தார். தற்போது ‘96’ 2-ம் பாகத்தை தயாரிக்க டான்...
மறைந்த நடிகை சில்க் ஸ்மித்தாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாக கொண்டு புதிய படம் ஒன்று உருவாகிறது. இந்தப் படத்தின் க்ளிம்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.
க்ளிம்ஸ் வீடியோ எப்படி? - தொடக்கத்தில் இந்திரா காந்தி போல ஒருவர் காட்டப்படுகிறார். அவர் அன்றைய செய்தித்தாள்களை புரட்டிப் பார்த்துகொண்டிருக்கும்போது எல்லா இடத்திலும் சில்க் ஸ்மிதாவின் புகைப்படங்களே நிரம்பியிருக்கின்றன. யார் இந்த சில்க்? என்று கேட்க, அடுத்து சில்க் கதாபாத்திரத்தில் நடிக்கும் சந்திரிகா ரவி...
புராண, சரித்திர திரைப்படங்களை உருவாக்கி வந்த ஆரம்ப கால தமிழ் சினிமா, பின்னர் அதிகமான பக்திப் படங்களையும் உருவாக்கின. சுதந்திரத்துக்குப் பிறகு முழுமையாக சமூக கதைகளுக்குத் திரைப்படங்கள் மாறினாலும் சரித்திர, பக்திப் படங்களும் ஒரு பக்கம் தொடர்ந்து உருவாகி வந்தன. அப்படி உருவான படங்களில் ஒன்று, ‘சக்ரதாரி’. கோரா கும்பரின் கதையை மையப்படுத்தி உருவான படம் இது.
கோரா கும்பராக சித்தூர் நாகையா நடித்தார். அவர் மனைவி துளசி பாயாக...
‘விடாமுயற்சி’ படத்துக்கு ஏற்பட்டுள்ள திடீர் சிக்கலால், பெரும் அச்சத்தில் இருக்கிறது லைகா நிறுவனம்.
மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘விடாமுயற்சி’. இதன் இறுதிகட்டப் படப்பிடிப்பு தொடங்கவுள்ளது. பொங்கலுக்கு வெளியீடு என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதனிடையே பெரும் சிக்கல் ஒன்று படக்குழுவுக்கு ஏற்பட்டு இருக்கிறது.
என்னவென்றால், ‘விடாமுயற்சி’ திரைப்படம் ‘பிரேக்டவுன்’ என்ற ஹாலிவுட் படத்தின் ரீமேக். இதனை படக்குழு அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை என்றாலும், படத்தின் டீஸர்...
செல்போனை மையமாக வைத்து உருவாகியுள்ள படம், 'ரிங் ரிங்'. ‘போனின்றி அமையாது உலகு' என்கிற டேக் லைன் வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தை, கந்தகோட்டை, ஈகோ படங்களை இயக்கிய சக்திவேல் இயக்கி உள்ளார். இதில் விவேக் பிரசன்னா, சாக் ஷி அகர்வால், டேனியல் அன்னி போப், பிரவீன், அர்ஜுனன், ஸ்வயம், சஹானா, ஜமுனா ஆகியோர் நடித்துள்ளனர். வசந்த் இசைப்பேட்டை இசை அமைத்துள்ள இதன் பாடல்களை பா. ஹரிஹரன் எழுதியுள்ளார். தியா...
சாலையோர உணவகம் நடத்தும் பார்த்திபன் (ஆர்ஜே பாலாஜி), செய்யாத குற்றத்துக்காக சிறைக்குச் செல்கிறார். அங்கு பிரபல ரவுடியான சிகாவுக்கு (செல்வராகவன்) தனி மரியாதை. திருந்தி வாழ ஆசைப்படும் அவருக்கும் புதிதாக வரும் சிறை கண்காணிப்பாளர் சுனில் குமாருக்கும் (ஷராஃபுதீன்) ஈகோ மோதல். சிகாவை அடக்க முயற்சிக்கிறார் அனில் குமார். அந்த மோதல் என்ன விளைவை ஏற்படுத்துகிறது? சிகாவுக்கு என்ன ஆகிறது? சிறைக்குள் சிக்கிய பார்த்திபனால் வெளியே வர முடிந்ததா?...










