Google search engine

குளச்சல்: மகளிர் போலீஸ் நிலையத்தில் விழுந்த மரங்கள்

குளச்சல் பகுதியில் இன்று சூறைக்காற்றுடன் மழை பெய்தது. இதில் குளச்சல் போலீஸ் நிலைய வளாகத்தில் நின்ற பழமையான வேப்பமரம் இரண்டாக பிளந்து முறிந்து விழுந்தது. இதில் வேப்ப மரம், சவுக்கு மரம் சாய்ந்து அருகில் உள்ள மகளிர் போலீஸ் நிலைய கட்டிடத்தின் மீது விழுந்தது. இதில் போலீஸ்...

வாணியக்குடி:  கரை ஒதுங்கிய கண்டெய்னர் மீட்பு பணி தீவிரம்

கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்திலிருந்து கொச்சி துறைமுகத்திற்கு புறப்பட்ட எல்ஸா 3 என்ற சரக்கு கப்பல் 640 கண்டைனர்களுடன் கடந்த 24 ஆம் தேதி கடலில் மூழ்கியது. இந்த நிலையில் கடந்த இரு நாட்களுக்கு முன்பு குமரி மாவட்டம் குளச்சல், வாணியக்குடியில் கண்டைனர் ஒன்று கரை ஒதுங்கியது....

மார்த்தாண்டம்: கடையில் புகையிலை விற்றவர் கைது

மார்த்தாண்டம் பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக மார்த்தாண்டம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வைகுண்டதாஸ் தலைமையிலான போலீசார் பயணம் குஞ்சுவீட்டுவிளை பகுதியில் உள்ள கடைகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அப்போது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட...

நட்டாலம்: சிவன் கோவிலில் உண்டியல் கொள்ளை

மார்த்தாண்டம் அருகே நட்டாலத்தில் பிரசித்தி பெற்ற மகாதேவர் கோயில் உள்ளது. இந்த கோவிலுக்கு நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்வது வழக்கம். குமரியில் சிவாலய ஓட்டம் நடக்கும் 12 முக்கிய சிவாலயங்களில் நட்டாலம் மகாதேவர் கோயிலும் ஒன்று ஆகும். இந்த நிலையில் சம்பவ தினம் இரவு வழக்கம்போல்...

நித்திரவிளை: வீட்டில் விழுந்த உயர் மின்னழுத்த மின்கம்பம்

நித்திரவிளை, கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் சூறைக்காற்றுடன் மழை பெய்து வருகிறது.   இதனால் பல பகுதிகளில்  மரங்கள் முறிந்து  மரக்கிளைகள் மின்கம்பிகள் மேல் விழுந்துள்ளதால் மின்தடை ஏற்பட்டது. இதில் எஸ்டி மாங்காடு, தேரிவிளைப் பகுதியில் அயனி மரம் சாய்ந்து உயர் அழுத்த மின்கம்பி மேல் விழுந்ததில், மின்கம்பம்...

குமரி: மழையினால் சேதமடைந்த வீடுகளுக்கு நிவாரணம்; ஆட்சியர்

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகுமீனா நேற்று வெளியிட்ட செய்தி குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்தில் மழையின் காரணமாக இதுவரை 47 வீடுகள் சேதமடைந்துள்ளன. இதில் 43 வீடுகளுக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. 4 வீடுகளுக்கு நிவாரணம் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. பயிர்கள் பாதிப்பு குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது என கூறியுள்ளார்.

நாகர்கோவிலில் பா. ஜனதாவினர் தேசிய ஒற்றுமை பேரணி

காஷ்மீர் மாநிலம் பகல்காமில் பயங்கரவாதிகள் தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடியாக மத்திய அரசு "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பெயரில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தியது. இதில் இந்தியா வெற்றி பெற்றதை நாடு முழுவதும் மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் கொண்டாடி வருகின்றனர்....

குமரி: கடலில் ரசாயன  பொருட்கள் ;  அமைச்சர் பேட்டி

திருவட்டாரில் 2.55 கோடி ரூபாய் செலவில் புதிய பேருந்து நிலையம் இன்று காணொளி காட்சி மூலம் தமிழக முதல்வர் திறந்து வைத்தார். திறப்பு நிகழ்ச்சியில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில்: - கேரளாவில் கண்டைனர் கப்பல் கவிழ்ந்து விபத்துக்குள்ளான விவகாரத்தில் குமரி...

திருவட்டார் பேருந்து நிலையம்; திறந்து வைத்து முதலமைச்சர்

பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட திருவட்டார் முதல்நிலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ. 2.55 கோடி மதிப்பில் திருவட்டார் பேருந்து நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெற்றது. இன்று (மே 29) தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை செயலகத்தில் இருந்து திறந்து வைத்தார்.  இப்பேருந்து நிலையமானது 48.50...

கிள்ளியூர்: உழவரைத் தேடி நலத்துறை திட்ட துவக்க விழா

கிள்ளியூர் வட்டார வேளாண்மை துறை சார்பில் உழவரைத் தேடி வேளாண்மை உழவர் நலத்திட்ட துவக்க விழா இன்று நடைபெற்றது. தமிழக முதலமைச்சரால் காணொளி மூலம் திருவாரூர் மாவட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட நிகழ்ச்சி விவசாயிகளுக்கு ஒளிபரப்பு செய்து காண்பிக்கப்பட்டது.  கிள்ளியூர் வட்டார விவசாய ஆலோசனை குழு தலைவர் கீழ்குளம் கோபால்...