Google search engine

புத்தளத்தில் பூ நாரைகள் வருகை குறைவு

கன்னியாகுமரி மாவட்டத்தில் புத்தளம், மணக்குடி போன்ற பகுதிகளில் பூ நாரைகள் அதிக அளவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வருகை தந்தன. அண்மைக்காலமாக பூநாரைகள் வருகை இந்த பகுதிகளில் குறைந்துள்ளது. ஆயிரக்கணக்கில் வந்த பூநாரைகள் தற்போது நூற்றுக்கணக்கில் மட்டுமே வருகின்றன. இதற்கு சூழலியல் மாற்றம் என்று பறவை...

கருங்கல்: அனுமதி இன்றி போராட்டம்; 400 பேர் மீது வழக்கு

குமரியில் ஆழ்கடல் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மேல் மிடாலம் கடற்கரை பகுதியில் மீனவர்கள் கவனயீர்ப்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்திற்கு ஏராளமான மீனவர்கள் கலந்து கொண்டனர். அரசு அனுமதி இன்றி பொதுஜன அமைதிக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், அரசு எதிராக கோஷங்களுக்கு...

திருவட்டார்: ஆதிகேசவ பெருமாள் கோயிலில் 2008 திருவிளக்கு பூஜை

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் 2008 திருவிளக்கு பூஜை, சமய மாநாடு நேற்று (ஜூலை 27) இரவு நடைபெற்றது. திருவிளக்கு பூஜையில் முதல் குத்துவிளக்கை மோகன்குமார், உமாதேவி ஆகியோர் ஏற்றினர். அகில பாரத விவேகானந்தா கேந்திர உதவி தலைவர் நிவேதா, வெள்ளிமலை இந்து தர்மவித்யா பீட தர்ம...

திற்பரப்பு: கோயில் நிலம் மீட்க இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

திற்பரப்பு மகாதேவர் கோயில் பழமையான கோவிலாகும். இந்த கோவில் சொத்துக்களை தனிநபர்கள் சிலர் ஆக்கிரமித்து வைத்திருப்பதாக எழுந்த புகாரின் பேரில் அறநிலையத்துறை அதிகாரிகள் அளவீடு செய்ய வந்தனர். அப்போது எதிர்ப்பு காரணமாக எல்லை நிர்ணயம் செய்ய முடியாமல் அதிகாரிகள் திரும்பிச் சென்றனர். இதைக் கண்டித்தும், உடனடியாக அரசு...

பத்துகாணி: மரம் முறிந்து விழுந்து வீடு சேதம்

குமரி மலைவேர கிராமங்களில் கடந்த சில நாட்களாக பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. பத்துகாணி பகுதியில் நேற்று இரவு முதல் பலத்த காற்றுடன் தொடர் மழை பெய்தது. இன்று அதிகாலை ரவீந்திரன் என்பவர் வீட்டில் ஒரு மரம் திடீரென முறிந்து வீட்டின் மீது விழுந்தது. இதில்...

கொல்லங்கோடு: பத்ரகாளியம்மன் கோயில் நிறை புத்தரிசி பூஜை

கொல்லங்கோடு ஸ்ரீ பத்ரகாளியம்மன் கோயில் மிகவும் பிரசித்தி பெற்றது. இங்கு ஒவ்வொரு மாதமும் பங்குனி மாதம் நடக்கும் பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்கத் திருவிழா மிகவும் பிரபலம். இதேபோல் இவ்வாண்டைய நிறைப்புத்தரி சடங்கானது நேற்று (ஜூலை 27) நடைபெற்றது. இதில் நெற்கதிர்கள் அடங்கிய கட்டுகளை பூஜையில் வைத்து பின்னர்...

ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு மத்திய குழு வருகை

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் ஆசாரிப்பள்ளம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இந்த மருத்துவக் கல்லூரியில் உள்ள பல்வேறு வசதிகள் பற்றி ஆய்வு செய்வதற்காக அடுத்த மாதம் மத்திய குழு வருகை தர இருக்கிறது. இந்த குழு ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பித்த...

நித்திரவிளை:   ஆற்றின் கரையில் தலைமை பொறியாளர் ஆய்வு

கிள்ளியூர் தொகுதிக்குட்பட்ட வைக்கல்லூர் ஆற்றில் பரக்காணி தடுப்பணையில் 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினால் மண் அரிப்பு ஏற்பட்டது. மண் அரிந்து சென்ற பகுதியை சீரமைக்க தமிழக அரசு 2 கோடியே 23 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்தது. இந்த பணிக்கு அரசாணை மூலம் சிற்றாறு அணை...

தக்கலை: 134 சிசிடிவி கேமராக்கள் தொடங்கி வைத்த எஸ்பி

தக்கலை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் 134 சிசிடிவி கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் செயல்பாடு மற்றும் கட்டுப்பாட்டு அறையை குமரி மாவட்ட எஸ்பி ஸ்டாலின் நேற்று மாலை தொடங்கி வைத்தார். இந்த விழாவில் தக்கலை காவல் ஆய்வாளர் கிறிஸ்டி வரவேற்றார். தக்கலை டிஎஸ்பி பார்த்திபன் முன்னிலை வகித்தார். மேலும்...

குளச்சல்: வீட்டில் கருகிய நிலையில் மூதாட்டி சடலம்

குளச்சல் அருகே பிலாங்கரைகாலனியை சேர்ந்தவர் கமலம் (72). வெள்ளியாகுளம் ஏலா பகுதியில் உள்ள தோப்பில் வேலை செய்து வந்தார். இதற்காக அங்கு தகர கொட்டகை அமைத்து தனியாக தங்கி இருந்தார். இந்த நிலையில் நேற்று வீட்டில் கமலம் தீயில் கருகிய நிலையில் இறந்து கிடந்தார். அங்கு மண்ணெண்ணெய்...