குமரி: ராணுவ வீரருக்கு தேசிய வாள்வீச்சில் தங்கப்பதக்கம்
திருவட்டார் அருகே ஆற்றூர் பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் ஜிஷோ நிதி (31), டெல்லியில் 14ஆம் தேதி முதல் நடைபெற்ற வாள்வீச்சுப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இவர் புனேயில் ராணுவ வீரராகப் பணியாற்றி வருகிறார். வாள்வீச்சுப் போட்டியில் பல தேசியப் பதக்கங்களை வென்றுள்ள இவர், 2009 முதல்...
குமரி: அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு வரவேற்பு
சாமிதோப்பு அன்புவனத்திலிருந்து திருவனந்தபுரத்துக்கு செல்லும் அய்யா வைகுண்டர் நினைவு யாத்திரைக்கு குமரி மாவட்ட சிறுபான்மை கூட்டமைப்பின் சார்பில் நேற்று களியக்காவிளையில் வரவேற்பு அளிக்கப்பட்டது. விளவங்கோடு வட்டார தலைவர் எஸ். மாகீன் அபுபக்கர் தலைமையில் நடைபெற்ற இந்த வரவேற்பு நிகழ்ச்சியில், தமிழ்நாடு ஜனநாயக கிறிஸ்தவ பேரவை நிர்வாகி ஜாண்ரோஸ்...
குழித்துறை: காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம்
மத்திய அரசையும், தேர்தல் ஆணையத்தையும் கண்டித்து மேல்புறம் வட்டார ராஜிவ் காந்தி பஞ்சாயத்து ராஜ் சங்கேதன் சார்பாக குழித்துறையை அடுத்த கழுவன் திட்டையில் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. வட்டார சங்கேதன் தலைவர் பிபின் தங்ககுமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தை விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினர் தாரகை...
களியக்காவிளை: ஐயப்ப பக்தர் மண்டல முகாம் துவக்கம்
களியக்காவிளை அருகே உள்ள சிவ பார்வதி கோயிலில், உலகிலேயே மிகப்பெரிய சிவலிங்கம், வைகுண்டம், தேவலோகம் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு ஆண்டும் சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்கள் ஓய்வு எடுக்க வசதியாக முகாம் அமைக்கப்படுகிறது. இந்த வருட முகாம் துவக்க விழா இன்று 18-ம் தேதி சுவாமி மகேஸ்வரானந்த...
களியக்காவிளை: ஐயப்ப பக்தர்களுக்காக சிறப்பு தகவல் மையம்
தமிழக இந்து அறநிலையத்துறை சார்பில், களியக்காவிளையில் ஐயப்ப பக்தர்களுக்கு உதவும் வகையில் சிறப்பு தகவல் மையம் நேற்று திறக்கப்பட்டது. குழித்துறை தேவசம் கண்காணிப்பாளர் சிவகுமார் இந்த மையத்தை திறந்து வைத்தார். சபரிமலை செல்லும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் மற்றும் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய, அறநிலையத்துறையினர் 4 பேர்...
குளச்சல்: சீட்டு மோசடி செய்தவரின் வீட்டை பூட்டிய பொதுமக்கள்
கொட்டில்பாடு மீன கிராமத்தைச் சேர்ந்த டென்னிஸ் (50) என்பவர் பதிவு செய்யப்படாத சீட்டு கம்பெனி நடத்தி, கோடிக்கணக்கான பணத்துடன் தலைமறைவானார். இதனால் பாதிக்கப்பட்ட 50க்கும் மேற்பட்ட பெண்கள் நேற்று டென்னிஸ் வீட்டு முன்பு குவிந்து, வீட்டின் கேட்டை சங்கிலியால் பூட்டி, யாரும் வாங்கக்கூடாது என நோட்டீஸ் ஒட்டினர்....
குளச்சல்: தந்தைக்கு போக்சோ மிரட்டல் விடுத்த மகள்
குளச்சல் பகுதியில், 17 வயது மகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த தந்தைக்கு, மனைவியுடன் ஏற்பட்ட பிரச்சனையால் பிரிந்து வாழ்கிறார். அடிதடி வழக்கில் ஜாமீன் கிடைக்காததால் தலைமறைவாக இருந்த தந்தை, திரும்பி வந்ததும் வீட்டில் தனியாக இருந்த மகளையும் ஒரு வாலிபரையும் பிடித்து போலீசில் ஒப்படைத்தார். அப்போது, பெற்ற...
நாகர்கோவிலில் பைனான்ஸ் அதிபர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை
நாகர்கோவிலில் குடும்பப் பிரச்சினையால் பிரிந்து வடக்கன்குளம் பகுதியில் பைனான்ஸ் கம்பெனி நடத்தி வந்த இசக்கிமுத்து (50), காவல்கிணறு ரயில்வே தண்டவாளத்தில் நேற்று மாலை ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த நாகர்கோவில் இருப்புப் பாதை காவல் நிலைய போலீசார் சடலத்தை...
பத்மநாபபுரம்: குத்தகைக்காரர் தூக்கிட்டு தற்கொலை
பத்மநாபபுரம் அரண்மனையில் செருப்பு பாதுகாக்கும் குத்தகை எடுத்து இருந்த ராமச்சந்திரன் (59), மனநலம் பாதிக்கப்பட்டதால் வீட்டில் இருந்து வந்தார். நேற்று வெகுநேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால், அவரது மகன் மாடியில் சென்று பார்த்தபோது ராமச்சந்திரன் தூக்கில் பிணமாக தொங்குவதைக் கண்டார். இது குறித்து தக்கலை போலீசாருக்கு...
குன்னத்தூர்: அனுமதியின்றி பாறை உடைப்பு – வழக்கு
தும்பாலி பகுதியைச் சேர்ந்த ஜான் கிறிஸ்டோபர் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் உரிய அனுமதி இன்றி பாறைகள் உடைக்கப்படுவதாக குன்னத்தூர் கிராம நிர்வாக அலுவலருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்குச் சென்றபோது, பாறை உடைக்கும் இயந்திரத்தை விட்டுவிட்டு பணியாளர்கள் தப்பிச் சென்றனர். இது குறித்து கிராம நிர்வாக அலுவலர்...













