குமரி: கடை வீதிகளில் போலீஸ் கண்காணிப்பு.
தீபாவளி பண்டிகையையொட்டி பொதுமக்கள் ஜவுளிக்கடைகள், பட்டாசு கடைகள், மிட்டாய் கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்படுவதால், திருட்டு மற்றும் அசம்பாவித சம்பவங்களைத் தடுக்க, பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட குமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு பண்டிகை காலங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை...
நாகர்கோவிலில் மூதாட்டி தூக்குப்போட்டு தற்கொலை.
நாகர்கோவிலில், உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட மனைவி சீதாலட்சுமி (70) தற்கொலை செய்து கொண்டதால் மனமுடைந்த கணவர் சாலமன் செல்வராஜ் (80) தூக்குப்போட்டு தற்கொலைக்கு முயன்றார். கோட்டார் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு...
குமரியில் இன்று உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள்
குமரி மாவட்டத்தில் இன்று 15ஆம் தேதி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பங்கேற்கும் முகாம்கள் நடைபெறும் இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி வார்டு 41, 42க்கு இருளப்பபுரம் அக்ஷயா மஹால், கொல்லங்கோடு நகராட்சி வார்டு 21, 28, 29க்கு ஸ்ரீ பத்ரா ஆடிட்டோரியம், திங்கள்நகர் பேரூராட்சி வார்டு 9...
தக்கலை: 32 கிலோ வெடி மருந்துகள் பறிமுதல் 3 பேர் கைது
தக்கலை அருகே திருவிதாங்கோட்டில் அனுமதி இன்றி ஓலை பட்டாசுகள் தயாரித்து விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், போலீசார் நடத்திய சோதனையில் 32 கிலோ 650 கிராம் வெடிமருந்துகள் மற்றும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டன. இது தொடர்பாக முருகன் (48), குமரேசன் (70), கோலப்ப பிள்ளை...
குமரி: நீரில் கலக்கும் மீன் கழிவுகள்.. மக்களே உஷார்
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறையில் மழைநீருடன் சேர்ந்து கழிவுநீரும் தாமிரபரணி ஆற்றில் கலப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்படும் அவலம் ஏற்பட்டுள்ளது. குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெய்த மழையால், குழித்துறை அரசு மருத்துவமனையின் கழிவு நீர், மீன் மார்க்கெட்டில் உள்ள கழிவுகள் ஆகியவை தாமிரபரணி ஆற்றில் கலந்து வருகிறது....
கொல்லங்கோடு: திருமண ஏக்கத்தில் வாலிபர் தற்கொலை
நடைக்காவு பகுதியைச் சேர்ந்த 31 வயது கூலித் தொழிலாளி ரதிஷ், திருமணம் ஆகாததால் மன வருத்தத்தில் இருந்த நிலையில், நேற்று தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது தாய் நிர்மலா இது குறித்து அளித்த புகாரின் பேரில், கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு...
நாகர்கோவிலில் உலக மனநல தின தியான நிகழ்ச்சி.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஒரு தனியார் கல்லூரி மற்றும் ஈஷா யோகா மையம் இணைந்து உலக மனநல தினத்தை முன்னிட்டு நேற்று ஒரு தியான நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தன. இந்த நிகழ்ச்சியில் கல்லூரி தலைவர் நாகராஜன் வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் ஐயப்பன் வாழ்த்துரை வழங்கினார்....
இரணியல்: தந்தையுடன் பைக்கில் சென்ற சிறுவன் நீரில் மூழ்கி பலி
கீழகல்குறிச்சியைச் சேர்ந்த ரமேஷ் (42), நேற்று முன்தினம் இரவு சுமார் 9 மணியளவில் தனது மகன் ஆல்ட்ரிக் ப்ரைசன் (7) உடன் டியூஷன் முடித்துக்கொண்டு வீடு திரும்பியுள்ளார். கால்வாய் கரை சாலை வழியாக பைக்கில் சென்றபோது, ரமேஷ் கண்ணில் பூச்சி விழுந்ததால் பைக் நிலைதடுமாறி கால்வாயில் விழுந்தது....
தக்கலை: கியூ ஆர் ஸ்டிக்கர் ஆட்டோக்களில் ஒட்டும் நிகழ்ச்சி
தக்கலை உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் பார்த்திபன், தக்கலை காவல்துறை ஆய்வாளர் கிறிஸ்டி மற்றும் பத்மநாபபுரம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அசோக் தலைமையில் நேற்று, ஆட்டோக்களின் முன்பக்க கண்ணாடியிலும், மக்கள் பார்க்கும் வகையிலும் 'அவசர உதவி எண்கள் கொண்ட QR குறியீடு ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டது. இந்த...
குழித்துறை: ஜல் ஜீவன் திட்ட பைப்புகள் எரிந்து சாம்பல்
குழித்துறை நகராட்சி, கழுவன்திட்டை பகுதியில் மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டப் பணிகளுக்குப் பிறகு மீதமிருந்த ஏராளமான பிவிசி பைப்புகள் நேற்று திடீரென தீப்பிடித்து எரிந்து சாம்பலாகின. குழித்துறை தீயணைப்பு நிலைய அதிகாரி சந்திரன் தலைமையிலான வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.













