இரணியல்: பஸ்ஸில் பர்ஸ் திருடிய பெண்கள் கும்பல்
கருங்கலில் இருந்து அரசு பேருந்து ஒன்று நேற்று திங்கள்சந்தை பேருந்து நிலையம் வந்தபோது, அதில் இருந்த பெண்ணின் பர்ஸ் மாயமானது. பர்ஸில் 5 ஆயிரம் ரூபாய் மற்றும் ஏடிஎம் கார்டு இருந்தன. இதற்கிடையில், 3 பெண்கள் 2 குழந்தைகளுடன் பேருந்திலிருந்து இறங்கி தப்ப முயன்றபோது, பர்ஸ் மீட்கப்பட்டது....
நித்திரவிளை: பாறாங்கற்கள் திருடிய 6 பேர் மீது வழக்கு
நித்திரவிளை அருகே மங்காடு பகுதியைச் சேர்ந்த ராணுவ வீரர் செல்வராஜின் நிலத்தில் கட்டுமானத்திற்காக குவித்து வைக்கப்பட்டிருந்த 2 லோடு பாறாங்கற்களை அஜின், புஷ்பம், சரத், சுதா, ஆஸ்டின் ரூபி, சபீனா ஆகியோர் திருடியதாக செல்வராஜின் மகன் அஸ்வின் குழித்துறை நீதிமன்றத்தில் புகார் அளித்தார். நீதிமன்ற உத்தரவின் பேரில்,...
குமரி: சென்டர் மீடியனில் லாரி மோதி போக்குவரத்து பாதிப்பு.
நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியில் நேற்று இரவு சரக்கு ஏற்றி வந்த லாரி சாலையில் அமைக்கப்பட்டிருந்த சென்டர் மீடியன் கல் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தால் லாரி சேதமடைந்ததோடு, அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்த நாகர்கோவில் போக்குவரத்து பிரிவு போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு...
குளச்சல்: ஆலயப்பணி சம்மந்தமாக மோதல்; 14 பேர் மீது வழக்கு
குளச்சல் அருகே வடக்கு கல்லுகூட்டத்தில் உள்ள புனித பாத்திமா அன்னை ஆலயம் தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், ஆலய கட்டுமானப் பணியை பன்னீர் கிங்ஸ்லி என்பவர் கடந்த 14ஆம் தேதி கேட்டபோது, ஜெரால்டு தலைமையிலான 14 பேர் கும்பல் அவரைத் தாக்கி படுகாயப்படுத்தியுள்ளது. காயமடைந்த...
திற்பரப்பு: நோய் பாதிப்பு; சிறுவன் தூக்கிட்டு தற்கொலை
திற்பரப்பு பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (17) அம்மை நோயால் பாதிக்கப்பட்டதால் மனமுடைந்து நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது பெற்றோர் அளித்த தகவலின் பேரில் குலசேகரம் போலீசார் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை...
குமரி: மத்திய நிதி அமைச்சகத்தின் மேம்பாட்டு பயிற்சி முகாம்
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன், குறுமத்தூர் புரடியூசர் கம்பெனியின் தொழில் முனைவோருக்கான இரண்டாம் கட்ட மேம்பாட்டு பயிற்சி முகாம் நேற்று குழித்துறையில் தொடங்கியது. கேடர் இந்தியா நிர்வாக இயக்குனர் மோகன் குமார் இந்த நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நாகர்கோவில் அலுவலக துணை...
நித்திரவிளை: புதிய வீட்டை சூறையாடியவர் கைது
நித்திரவிளை அருகே பாப்பான்பழஞ்சி பகுதியை சேர்ந்த டீக்கடை உரிமையாளர் ராஜன் (57) தனது மகளுக்கு வீடு கட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு, குடிபோதையில் வந்த அவரது மகன் ரதீஷ் (30) தகாத வார்த்தைகள் பேசி, வீட்டை இடித்து சூறையாடியுள்ளார். தந்தையை கம்பால் தாக்கி காயப்படுத்திய ரதீஷ்,...
கோட்டார், மீனாட்சிபுரம் பகுதிகளில் நாளை மின்தடை.
நாகர்கோவில் மீனாட்சிபுரம் உபமின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (புதன்கிழமை) நடைபெறுவதால், காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வடிவீஸ்வரம், கோட்டார், மீனாட்சிபுரம், கணேசபுரம், இடலாக்குடி, ஒழுகினசேரி, தளியபுரம், ராஜபாதை, கரியமாணிக்கபுரம், செட்டிக்குளம் சந்திப்பு, சற்குணவீதி, ராமன்புதூர், வெள்ளாளர் காலனி, சவேரியார் கோவில்...
மார்த்தாண்டம்: பிரபல பைக் திருடன் கைது
மார்த்தாண்டம் பகுதியைச் சேர்ந்த விஷ்ணு (21) என்பவர், பைக் திருடியதாக சிறையில் அடைக்கப்பட்டு கடந்த 9ஆம் தேதி வெளியே வந்தார். ஆனால், அடுத்த நாளே 10ஆம் தேதி பல்லன்விளை பகுதியில் மீண்டும் ஒரு பைக்கை திருடியது தெரியவந்தது. இது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், நேற்று பம்மம்...
பத்மநாபபுரம்: புதிய தடத்தில் பஸ் ; அமைச்சர் துவக்கினார்
அருமனை, மஞ்சாலுமூடு, மெதப்பங்கோடு பகுதிகளில் இருந்து பிலாவிளை வழியாக மார்த்தாண்டத்துக்கு அரசு பேருந்து இயக்க வேண்டும் என்ற அப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று (15-ம் தேதி) 86E என்ற புதிய பேருந்து சேவையை தொடங்கி வைத்தார். இந்த...













