Google search engine

குமரி: காதல் திருமணம் செய்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை.

நாகர்கோவில் ஒழுகினசேரி கலைவாணர் தெருவைச் சேர்ந்த சதீஷ் ராஜன் (23) என்பவர், கடன் பிரச்சினை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது மனைவி பிரியா (22) கண்விழித்துப் பார்த்தபோது கணவர் தூக்கில் தொங்கியதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். உறவினர்கள் உதவியுடன் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்குக்...

இரணியல்: பேருந்தில் மூதாட்டியிடம் நகை திருடிய பெண்கள் கைது

ஆட்சியர் அலுவலகம் சென்றுவிட்டு அரசு பேருந்தில் வீடு திரும்பிய கொல்லங்கோடு பகுதியை சேர்ந்த சேசம்மாள்(75) என்பவரின் கழுத்தில் இருந்த சுமார் 3 பவுன் தங்க செயின் மாயமானது. பேருந்து வில்லுக்குறி பாலம் அருகே வந்தபோது, மூதாட்டி சத்தம் போட, பேருந்தில் இருந்து இறங்கிய 2 பெண்களை பிடித்து...

தக்கல: நாற்காலியில் சிக்கிய குழந்தை; மீட்ட தீயணைப்பு வீரர்கள்

தக்கலை அருகே குழித்தோடு பகுதியில் நேற்று (அக்.28) ஒரு குழந்தையின் கால் பிளாஸ்டிக் நாற்காலியின் குழாய் வடிவிலான காலின் துவாரத்தில் சிக்கியது. சமையல் செய்து கொண்டிருந்த தாய் மீட்க முயன்றும் முடியவில்லை. தகவலின் பேரில், தக்கலை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜீவன்ஸ் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு...

கோதையாறு: மீண்டும் காட்டு யானை; பொதுமக்கள் அச்சம்

குமரி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப் பகுதியான கோதையாறில் யானைகளால் வீடுகள் சேதமடைந்து தொழிலாளர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது பருவமழை பெய்து வரும்போது ஒற்றை யானை ஒன்று ரப்பர் தோட்டங்களில் சுற்றித் திரிந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. வனத்துறையினர்...

குமரி: பள்ளி மாணவர்களுக்கு ரூ.1000 உதவித்தொகை

கன்னியாகுமரி அரசுப் பள்ளி 9ஆம் வகுப்பு மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த ஊரகத் திறனாய்வுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வில் தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.1000 வீதம் 4 ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படும். இந்த கல்வி உதவி தொகை  மாவட்டத்தின் ஊரக பகுதிகளில் உள்ள அரசு...

ஊரம்பு:   சாலையில் இறந்து கிடந்த வாலிபர் – போலீஸ் விசாரணை

ஊரம்பு பகுதியை சேர்ந்த 28 வயதான அஜித்குமார் என்ற மரம் வெட்டும் தொழிலாளி, நேற்று ஊரம்பு பகுதியில் உள்ள ஒரு முடி திருத்தும் கடையின் முன்பக்கம் சாலை ஓரம் முகங்குப்புற படுத்த நிலையில் கிடந்துள்ளார். பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில் கொல்லங்கோடு போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து...

குமரி: 6 இன்ஸ்பெக்டர்கள், 8 எஸ். ஐ. அதிரடி இடமாற்றம்

நேசமணி நகர் இன்ஸ்பெக்டர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டார். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, குமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 இன்ஸ்பெக்டர்கள் வெளி மாவட்டங்களுக்கும், 3 இன்ஸ்பெக்டர்கள் குமரி மாவட்டத்திற்குள்ளேயே வேறு காவல் நிலையங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த 3 உதவி ஆய்வாளர்கள்...

குமரி: மனநலம் பாதித்த பெண்ணை இல்லத்தில் சேர்த்த போலீசார்

வில்லுக்குறி பகுதியைச் சேர்ந்த, மனநலம் பாதிக்கப்பட்ட மற்றும் கண் பார்வையற்ற செல்வகுமாரியை கவனிக்க யாரும் இல்லாததால், காவல்துறையின் உதவியை நாடினர். கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் அறிவித்த நிமிர் திட்ட குழுவினர் உடனடியாகச் செயல்பட்டு, அவரை மீட்டு முதியோர் இல்லத்தில் ஒப்படைத்தனர். குமரி மாவட்ட காவல்துறையின்...

குமரி: காதலி பேசாததால் வாலிபர் தூக்கிட்டு தற்கொலை

மீனச்சல் பகுதியைச் சேர்ந்த அபிஷேக் (23) என்ற இளைஞர், காதலி பேசியதை நிறுத்தியதால் மனமுடைந்து நேற்று மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். உறவினர்கள் கதவை உடைத்து பார்த்தபோது அவர் சடலமாக கண்டெடுக்கப்பட்டார். களியக்காவிளை போலீசார் அவரது உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து,...

குமரி: மாத்தூர் தொட்டி பாலத்தில் உடைந்த கைப்பிடி சுவர்

குமரி மாவட்டத்தில் உள்ள ஆசியாவிலேயே நீளம் மற்றும் உயரமான மாத்தூர் தொட்டி பாலம், 1240 அடி நீளம் மற்றும் 103 அடி உயரம் கொண்டது, தற்போது பல இடங்களில் பழமையான கைப்பிடி சுவர்கள் உடைந்து சேதமடைந்துள்ளது. நடந்து செல்லும் பகுதியிலும் கீறல்கள் காணப்படுகின்றன. இதனால் சுற்றுலா பயணிகளின்...