Google search engine

கருங்கல்: போதையில் 3 டயரில் காரை ஓட்டிய போலீஸ் மகன்

மாங்கரை பகுதியில் நேற்று, அதிவேகமாகச் சென்ற சொகுசு கார், எதிரே பைக்கில் வந்த சிவகுமார் (39), ரேஸ்மா (29), சஜினி (25) ஆகியோர் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் மூவரும் படுகாயமடைந்து குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். நிற்காமல் சென்ற காரை பொதுமக்கள் துரத்திச்...

தக்கலை: குடும்பத்தகராறு – கொத்தனார் தூக்கிட்டு தற்கொலை

தக்கலை, மயிலோடு பகுதியைச் சேர்ந்த கொத்தனார் மரிய ராஜேந்திரன் (59) குடும்பத் தகராறு காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி தாய் வீட்டிற்கு சென்ற நிலையில், வெளியூரில் இருந்த மகன் ஜெர்மின் ஜோசப் வந்து தந்தையுடன் சமாதானம் பேசியும்...

முஞ்சிறை: 1000 கிலோ ரேஷன் அரிசி, கார் பறிமுதல்

விளவங்கோடு வட்ட வழங்கல் அலுவலர் அனிதா குமாரி மற்றும் வருவாய் ஆய்வாளர் மைக்கேல் சுந்தர்ராஜன் ஆகியோர் நேற்று முஞ்சிறை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இனயம் கடற்கரை பகுதியில் இருந்து வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரின் ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார். காரில்...

புதுக்கடை: வாலிபரிடம் பணம், நகை மோசடி செய்த பெண் – வழக்கு

ராமன்துறை பகுதியைச் சேர்ந்த வாலிபர் ஒருவர், குழித்துறை கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், முள்ளுர்துறையைச் சேர்ந்த 28 வயது பெண் தனக்கு கடந்த 28-12-2023 அன்று கிறிஸ்தவ ஆலயத்தில் திருமணம் செய்து கொண்டதாகவும், அவரிடமிருந்து ரூ.12 லட்சம் மற்றும் தங்க நகைகளை வாங்கி ஏமாற்றிவிட்டு தப்பிச் சென்றதாகவும்...

ஆற்றூர்: ராமநல்லூர் காவு கோவில் சீரமைக்க கோரிக்கை

திருவட்டார், ஆற்றூரில் உள்ள ராமநல்லூர் காவு கோவில் இந்து அறநிலைய துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கோவில் வளாகத்தை சிலர் ஆக்கிரமித்ததால் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியவில்லை. மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டும் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாததால் வழக்கு நடந்து வருகிறது. பழமை வாய்ந்த இந்த கோவிலை புனரமைக்க பக்தர்கள் கோரிக்கை...

தக்கலை: மரத்தில் பைக் மோதி வாலிபர் உயிரிழப்பு

நேற்று காலை பள்ளியாடி பகுதியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலைக்குச் சென்றுகொண்டிருந்த தக்கலை பகுதியைச் சேர்ந்த அகில் ராஜ் (23) என்பவர், தனது பைக்கில் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்ற மரத்தில் மோதி படுகாயமடைந்தார். குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட அவரை பரிசோதித்த...

நாகர்கோவிலில் தொழிலாளியை மிரட்டிய ரவுடி கைது.

நாகர்கோவில் கோட்டார் வடலிவிளையை சேர்ந்த தொழிலாளி வில்சனிடம், மேலராமன்புதூரை சேர்ந்த வீரமணி என்பவர் கத்தியை காட்டி பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தார். இதுகுறித்து வில்சன் கோட்டார் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட...

குளச்சல்: அதிவேகமாக ஓட்டிய 42 பைக்குகள் பறிமுதல்

கன்னியாகுமரியில் கிறிஸ்துமஸ் விழா நிகழ்ச்சிகள் டிசம்பர் 1ம் தேதி வரை நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், போலீஸ் எச்சரிக்கையை மீறி குளச்சல் காந்தி சந்திப்பு மற்றும் அண்ணா சிலை சந்திப்பு பகுதிகளில் இளைஞர்கள் அதிவேகமாகவும், சைலன்சர் குழாய்களை மாற்றி அதிக ஒலி எழுப்பியும் பைக் ஓட்டியுள்ளனர். இதனால்,...

ஆலஞ்சி: போலீசுக்கு கொலை மிரட்டல் ; வாலிபர்கள் மீது வழக்கு

குமரி மாவட்ட அதிரடிப் படையில் டிரைவராகவும், ஆயுதப்படை முதல் நிலை காவலராகவும் பணியாற்றி வரும் அருள்ராஜ் (36), கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஆலஞ்சி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, பைக்கில் வந்த வாலிபர்கள் அவரை கீழே தள்ளி காயப்படுத்தி, அரசு பணி செய்யவிடாமல் கெட்ட வார்த்தை பேசி கொலை...

கோட்டார் பகுதியில் 27 மது பாட்டில்கள் பறிமுதல்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், கோட்டார் சப்-இன்ஸ்பெக்டர் சண்முக கார்த்திகேயன் நேற்று முன்தினம் வடலிவிளை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, 76 வயதான ஏசுதாஸ் என்பவர் 27 மதுபாட்டில்களுடன் பிடிபட்டார். சப்-இன்ஸ்பெக்டர் மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, ஏசுதாஸ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.