குளச்சல்: மீனவர் குடும்பத்திற்கு ரூ. 2 லட்சம் காசோலை
குமரி மாவட்டம் கோடிமுனை மீனவ கிராமத்தை சேர்ந்த மீனவர் ஜீடின் என்பவர் 13.11.2024 அன்று மாலை கடலில் மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் மின்னல் தாக்கி மாயமானார். 14.11.2024 அன்று அவரது படகு மட்டும் தனியாக கடலில் மிதந்துள்ளது.
அவரது மனைவி மரியாசாந்தி என்பவரால் குளச்சல் கடலோர காவல்...
குமரி: தேசிய நெடுஞ்சாலைக்கு 14 கோடி டென்டர் – எம்பி தகவல்
குமரி மாவட்டம் பள்ளிவிளை பகுதியில் காமராஜர் படிப்பகத்தில் குமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் சொந்த செலவில் 12 லட்சம் ரூபாய் கொடுத்து காமராஜர் வெங்கல சிலை அமைக்கப்பட்டது, அதன் திறப்பு விழா நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக விஜய்வசந்த் கலந்து கொண்டு, செய்தியாளர்களிடம் கூறும்போது, குமரி மாவட்டத்...
தக்கலை: வைகுண்டசாமி பாதயாத்திரை – குமரி எம்பி பங்கேற்பு
சாமித்தோப்பு அய்யாவை குண்டசாமி பாதயாத்திரை ஆண்டுதோறும் சாமிதோப்பில் இருந்து திருவனந்தபுரம் வரை நடைபெறுவது வழக்கம்.
அதன்படி இந்த ஆண்டு பாதயாத்திரை சனிக்கிழமை சாமிதோப்பு அன்புவனம் முத்திரிக் கிணற்றில் இருந்து பாலபிரஜாபதி அடிகளார் தலைமையில் யாத்திரை தொடங்கியது. நேற்று (17-ம் தேதி) தக்கலை பரைகோடு பகுதியில் உள்ள அய்யா பதியில்...
மார்த்தாண்டம்: கார்-பைக் மோதல்.. ஒருவர் உயிரிழப்பு
ஆறுகாணி பகுதியை சேர்ந்த உண்ணி, பத்துகாணி பகுதியை சேர்ந்த சஜி, பேணு பகுதியை சேர்ந்த விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் இருசக்கர வாகனத்தில் இன்று (17-ம் தேதி) மதியம் குழித்துறை நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வட்டவிளை பகுதியில் சென்றபோது எதிரே இரண்டு லாரிகள் வந்து கொண்டிருந்தன....
அருமனை: வீட்டை உடைத்து நகை பணம் திருட்டு
அருமனை அருகே இடைக்கோடு பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (65) கேரளாவில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் (நவ.,16) இரவு ராஜேந்திரன் வீட்டில் இல்லாத நேரத்தில் மனைவி சியாமளா மகள் உள்ளிட்டோர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
அப்போது பின்புறஜன்னலை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் வீட்டில் இருந்த...
குழித்துறை: ரயில்வே கேட் கீப்பரை தாக்கியவர் கைது
குழித்துறை அருகே நாகர்கோவில் - திருவனந்தபுரம் ரயில் பாதையில் குருமத்தூர் என்னும் இடத்தில் ரயில்வே கேட்டுள்ளது. கடந்த வாரம் திருவனந்தபுரத்தை சேர்ந்த பிளட்சன் (36) என்பவர் கேட் கீப்பராக பணியில் இருந்தார். அப்போது அந்த வழியாக காரில் வந்த மூன்று பேர் பிளட்சனை சரமாரியாக தாக்கி, பொருட்களை...
தேங்காபட்டணம்: மீன் பிடி துறைமுகம் – கலெக்டர் பார்வை
தேங்காய்பட்டணம் மீன்பிடித்துறைமுகத்தில் கடந்த வாரம் ஏற்பட்ட கடல் சீற்றத்தில் துறைமுகம் சேதமடைந்தது.
இதையடுத்து குமரி மாவட்ட கலெக்டர் அழகு மீனா சேதப் பகுதிகளை ஆய்வு செய்ததோடு, புதிய ஜெட்டிக்குச் செல்லும் பகுதியில் பாலம் கட்டுமான பணி நீதிமன்ற வழக்கில் உள்ளதால் புகார் கொடுத்த நபரை அழைத்துப் பேசவும், புதிய...
வெள்ளிச்சந்தை: வாழை தோட்டத்தில் பிணமாக கிடந்த விவசாயி
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை பகுதியை சேர்ந்தவர் ராஜரத்தினம் (69). தோட்டத்தில் வாழை பயிரிட்டு விவசாயம் செய்து வந்தார். இவர் கடந்த 14ஆம் தேதி தோட்டத்திற்கு செல்வதாக கூறிவிட்டு வீட்டில் இருந்து சென்றார்.
பின்னர் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் மகன் சிவராஜன் (38) என்பவர் தந்தையை பல்வேறு இடங்களில்...
புதுக்கடை: கூலித் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை
புதுக்கடை அருகே மேலங்கலம் பகுதி வட்டவிளையை சேர்ந்தவர் நாடான்கண்ணு மகன் கோபி ராஜன் (54). கூலித் தொழிலாளியான இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. தனியாக வசித்து வந்தார். உடல் நிலை பாதிப்பு காரணமாக மன வருத்தத்தில் இருந்தார்.நேற்று முன்தினம் இரவு இவர் வீட்டிற்கு செல்லவில்லை. நேற்று (16-ம் தேதி)...
நித்திரவிளை: டெம்போவில் கடத்திய மண்ணெண்ணெய் பறிமுதல்
குமரியில் பைபர் படகுகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் மண்ணெண்ணெய் கேரளாவிற்கு கொண்டு செல்லப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக புகார் உள்ளது.
இந்த நிலையில் நேற்று (15-ம் தேதி) இரவு சுமார் 10 மணி அளவில் இனயம் பகுதியில் இருந்து கேரளா நோக்கி மினி டெம்போவில் மண்ணெண்ணெய் கடத்தப்பட்டு வருவதாக தகவல்...













