அருவிக்கரை: ஆற்றில் எச்சரிக்கை பலகை வைக்க கோரிக்கை
குமரி மாவட்டத்தில் திருவட்டாறு அருகே அருவிக்கரை என்ற பகுதி உள்ளது. இந்த பெயரைப் போலவே இவ்வூரும் மிகவும் அழகு. இந்த ஊரில் பாய்ந்து வரும் பரளியாறு பார்ப்போர் மனதை கொள்ளை கொள்வதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் இங்கு சங்கமிக்கின்றனர். இப்பகுதி பல இடங்களில் பாறைகள்...
கருங்கல்: கவிஞர் குமரி ஆதவன் மொழி பெயர்ப்பு நூல்கள் வெளியீடு
கவிஞர் குமரி ஆதவன் எழுதிய கேட்கச் செவியுள்ளவர் கேட்கட்டும், எரிதழல் கொண்டு வா ஆகிய இரு நூல்களின் ஆங்கிலம் (Let them hear who have Ear) மற்றும் மலையாள மொழிபெயர்ப்பு (കനല്കട്ടകള്) நூல்களின் வெளியீட்டு விழா கருங்கல் புனித அல்போன்சா கலை அறிவியல் கல்லூரியில் நேற்று...
ஆற்றூர்: 87 இளம் விஞ்ஞானிகளுக்கு விருது
ஜூன் மாதம் தொடங்கி ஒருங்கிணைந்த வளர்ச்சி என்ற தலைப்பின்கீழ் சமூக அமைப்புகளை மேம்படுத்துதல், பொருளாதார உள்ளடக்கம், சுற்றுச்சூழல் சமநிலை, ஆரோக்கிய வாழ்வை உறுதி செய்தல், வளரும் தொழில்நுட்பங்கள் என்ற துணை தலைப்புகளில் திருவனந்தபுரம் என்.ஐ.ஐ.எஸ்.டி மத்திய ஆய்வு நிறுவனத்தில் ஆய்வுகளை சமர்ப்பித்தனர்.
அவர்களுக்கு விருது வழங்கும் நிகழ்ச்சி ஆற்றூர்...
முளகுமூடு: கிறிஸ்தவ தொழிலாளர் இயக்க விழிப்புணர்வு பேரணி
குழித்துறை மறை மாவட்ட கிறிஸ்தவ தொழிலாளர் இயக்க விவசாயம் மற்றும் கட்டிட தொழிலாளர்கள் சார்பில் விழிப்புணர்வு பேரணி நேற்று கோடியூர் சிஎஸ்ஐ ஆலயத்திலிருந்து துவங்கி முளகுமூடு தூய மரியன்னை பசிலிக்காவில் நிறைவடைந்தது.
பேரணியை முளகுமூடு வட்டார தொழிலாளர் இயக்க இயக்குனர் அருட்பணியாளர் ராபர்ட் ஜான் கென்னடி, கோடியூர் சிஎஸ்ஐ...
குளச்சல்: மீன்பிடித் தொழிலாளியின் பைக் திருட்டு
குளச்சல் அருகே உள்ள பிள்ளைத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் அமல்ராஜ் (49). மீன்பிடித் தொழிலாளி. இவர் நேற்று இரவு வீட்டின் முன்பு தனது பைக்கை நிறுத்தியிருந்தார். பின்னர் இன்று காலை பார்த்தபோது அவரது பைக் நிறுத்தியிருந்த இடத்தில் காணவில்லை. மர்ம நபர்கள் யாரோ பைக்கைத் திருடிச் சென்றதுத் தெரியவந்தது....
நாகர்கோவிலில் ரூ. 17½ லட்சத்தில் வளர்ச்சி பணிகள்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி 22-வது வார்டுக்குட்பட்ட ஸ்காட் குறுக்குத் தெருவில் ரூ. 5 லட்சத்தில் தார் சாலை அமைக்கும் பணியை நேற்று மேயர் மகேஷ் தொடங்கி வைத்தார்.
இதையடுத்து 27-வது வார்டுக்குட்பட்ட நடராஜபுரம் பிள்ளையார் கோவில் அருகே ரூ. 2½ லட்சத்தில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி,...
குமரியில் கடந்த 15 நாட்களில் கஞ்சா விற்றதாக 19 பேர் கைது
குமரி மாவட்டத்தில் கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு கட்டமாக ஒவ்வொரு கிராமப் பகுதியிலும் ஊர்காவல் கண்காணிப்புத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக கஞ்சா, போதைப் பொருட்கள் விற்பனை தடுக்கப்பட்டு பலரும்...
குமரி: மது போதையில் வாகனம் ஓட்டிய டெம்போ டிரைவருக்கு அபராதம்
நாகர்கோவில் மாநகரில் நேற்று வடசேரி பகுதியில் போக்குவரத்து ஒழுங்குப்பிரிவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த டெம்போவை தடுத்து நிறுத்தி சோதனையிட்டனர். சோதனையில் டிரைவர் மது போதையில் வாகனம் ஓட்டியது தெரியவந்தது. இதனை தொடர்ந்து வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்து ரூ. 10...
விலவூர்: சாலை பணியை தொடக்கி வைத்த அமைச்சர்
தக்கலை அருகே விலவூர் பேரூராட்சிக்குட்பட்ட மணலி பாலம் முதல் பாண்டி விளை வரை கால்வாய் கரை சாலை சீரமைக்க நபார்டு நிதி ரூபாய் 2 கோடியே 35 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் நேற்று துவக்கி வைத்தார். விலவூர் பேரூராட்சி...
களியல்: கழிவுகளை வீட்டிற்கு அனுப்பிய போலீசார்
களியல் அருகே கட்டச்சல் என்ற பகுதியில் நேற்று சாலையோரத்தில் மூட்டைகளில் கட்டப்பட்ட கழிவுகளை மர்ம நபர்கள் வீசி சென்றனர். தகவல் அறிந்த பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்தில் சென்று பார்வையிட்டு, செயல் அலுவலருக்கு தகவல் தெரிவித்தனர். நடவடிக்கை எடுக்க செயல் தலைவர் கடையாலுமூடு போலீசில் புகார் கொடுத்தார்.
போலீசாரின்...













