இலவுவிளை: மார் எப்ரேம் கல்லூரியில தேசியக் கருத்தரங்கம்
மணவாளக்குறிச்சியில் இயங்கி வரும் ஐஆர்இஎல் நிறுவனம் குமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு சென்று ஆலையின் செயல்பாடுகள், அதனால் ஏற்படும் பல்வேறு பயன்கள் குறித்து கருத்தரங்கள் மற்றும் கலந்துரையாடல்களை நடத்துகிறது.
இதன் ஒரு பகுதியாக கிள்ளியூர் பகுதியில் செயல்படும் இலவுவிளை, மார் எப்ரேம் பொறியியல் கல்லூரியில்...
குளச்சல்: இந்திய ராணுவத்துக்கு வீரவணக்கம் செலுத்திய பாஜக
காஷ்மீரில் பஹல்காம் பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதலில் அப்பாவி மக்கள் பலியாகினர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதிகளில் நுழைந்து அதிரடி தாக்குதல்களை நடத்தி ஏராளமான தீவிரவாதிகளை வேட்டையாடியது. இந்த தீர செயலில் ஈடுபட்ட இந்திய ராணுவத்தினருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி பாரதிய ஜனதா சார்பில்...
நித்திரவிளை: மின்கம்பிகள் சேதம் நள்ளிரவில் சீரமைப்பு பணிகள்
திரவிளை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் மீனவர் கிராமங்களில் நேற்று முன்தினம் முதல் இன்று வரை தொடர்ந்து சூறாவளியுடன் மழை பெய்து வருகிறது. இதில் நேற்று இரவு பல இடங்களில் மரக்கிளைகள் முறிந்து மின்கம்பிகள் மேல் விழுந்ததால் மின்தடை ஏற்பட்டது. இதில் பல பகுதிகளில் சுமார் ஒரு...
நித்திரவிளை: வீட்டில் குட்கா பதுக்கியவர் கைது
நித்திரவிளை அருகே காணவிளை பகுதியில் ஒரு கடையில் குட்கா விற்பனை செய்வதாக நித்திரவிளை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அந்தோணியம்மாள் மற்றும் போலீசார் சம்பந்தப்பட்ட கடையில் சோதனை செய்தபோது, கடையை ஒட்டியுள்ள வீட்டில் குட்கா புகையிலை பதுக்கி வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
அந்த வீட்டில் புகையிலை பொருட்களை...
கிள்ளியூர்: மின்வாரிய அலுவலகத்தை முற்றுகையிட்ட திமுகவினர்
கிள்ளியூர் பேரூராட்சியில் உள்ள 18 வார்டுகளிலும் மின்விளக்குகள் இல்லாத பகுதிகளில் புதிய மின் விளக்குகள் அமைப்பதற்காக ஆன்லைன் மூலம் பேரூராட்சி சார்பில் கிள்ளியூர் மின்வாரிய அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து ஆறு வார்டுகளுக்கு எஸ்டிமேட் எடுக்கப்பட்டு பணம் கட்டப்பட்டுள்ளது.
பணம் கட்டி சுமார் 6 மாதங்களாகவும் புதிய...
கொல்லங்கோடு: வீட்டில் விழுந்த மரக்கிளையை அகற்ற எதிர்ப்பு
கொல்லங்கோடு நகராட்சி 6-ம் வார்டிற்குட்பட்ட முதியவர் வீட்டின் மேல் விழுந்த மரக்கிளையை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொல்லங்கோடு நகராட்சி காங். கவுன்சிலர் கவிதா மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அனுப்பியுள்ளார்.
மனுவில் கூறியிருப்பதாவது: - கொல்லங்கோடு நகராட்சி ஆறாவது வார்டில் நெல்லியப்பட்டுவிளை என்னுமிடத்தில் வசித்து வருபவர்...
நீரோடி: மாமியாரை தாக்கிய மருமகன் கைது
கிள்ளியூர், நீரோடி மிக்கேல் காலனியை சேர்ந்தவர் லிசி (49). இவரது மகளை கொல்லங்கோடு அருகே கேரள பகுதியான பொழியூர் என்ற இடத்தை சேர்ந்த அனில் குமார் (39) என்பவர் திருமணம் செய்து உள்ளார். கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டு லிசியின் மகள் கடந்த சில ஆண்டுகளாக...
குமரி அணைகளை திறக்க அரசுக்கு கருத்துரு -ஆட்சியர் தகவல்
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அழகு மீனா நேற்று நாகர்கோவிலில் நடைபெற்ற விவசாயிகள் கோரிக்கை தின கூட்டத்தில் பேசும்போது மாவட்டத்தில் கால்வாய் தூர்வாரும் பணிகள் இம்மாதம் இறுதிக்குள் முடிக்கப்படும். ஜூன் 1ம் தேதி அணைகளை திறப்பது தொடர்பாக அரசுக்கு கருத்துரை அனுப்பப்பட்டுள்ளது. கண்டிப்பாக ஜூன் 1ம் தேதி அணைகள்...
அருமனை: 20 இடங்களில் சிசிடிவி கேமரா; தொடங்கி வைத்த எஸ் பி
குமரி மாவட்ட காவல்துறையின் ஊர் காவல் கண்காணிப்பு திட்டம் சார்பில் தற்போது அருமனை காவல் துறை எல்லைக்குட்பட்ட 20 பகுதிகளில் 42 சிசி டிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. உத்திரங்கோடு சந்திப்பில் இன்று நடந்த நிகழ்ச்சிக்கு மார்த்தாண்டம்
உட்கோட்ட காவல் துணை காவல் கண்காணிப்பாளர் நல்ல சிவன்...
மார்த்தாண்டம்: இரவில் சூறைக்காற்றுடன் பலத்த மழை
குமரி மாவட்டத்தில் இன்று சனிக்கிழமை முதல் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் நேற்று எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த எச்சரிக்கை தொடர்ந்து நேற்று மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. குறிப்பாக மலைப்பகுதிகளான கடையாலுமூடு, களியல், திற்பரப்பு, குலசேகரம், சுருளோடு போன்ற...













