பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.
இது குறித்து டொனால்டு ட்ரம்ப் தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது: “காஷ்மீரில் இருந்து வெளியாகும் செய்திகள் ஆழ்ந்த கவலையளிக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிராக இந்தியாவுடன் அமெரிக்கா உறுதியாக நிற்கிறது. உயிரிழந்தவர்களின் ஆன்மா சாந்தியடையவும், காயமடைந்தவர்கள் மீண்டு வரவும் நாங்கள் பிரார்த்திக்கிறோம். பிரதமர் மோடிக்கும், இந்திய மக்களுக்கும் எங்கள் முழு ஆதரவும்...
பிரதமர் மோடியின் விமானம் நேற்று சவுதி வான் எல்லைக்குள் நுழைந்ததும், அந்நாட்டு போர் விமானங்கள் பாதுகாப்பு அளித்து அழைத்துச் சென்றன. பிரதமர் மோடியின் வருகைக்கு அளிக்கப்பட்ட இந்த அரியவகை சிறப்பு மரியாதை அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.
பிரதமர் மோடி சவுதி, அரேபியா வரும்படி அந்நாட்டு இளவரசர் மற்றும் பிரதமர் முகமது பின் சல்மான் அழைப்பு விடுத்திருந்தார். அதை ஏற்று பிரதமர் மோடி 2 நாள் பயணமாக நேற்று சவுதி அரேபியா...
மறைந்த போப் பிரான்சிஸ் உடல், பொதுமக்கள் அஞ்சலிக்காக இன்று செயின்ட் பீட்டர்ஸ் சதுக்கத்துக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும் வாடிகன் நிர்வாகம் அறிவித்துள்ளது.
உலகம் முழுவதும் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மதத் தலைவரான போப் பிரான்சிஸ் நேற்று முன்தினம் தனது 88-வது வயதில் காலமானார். கடந்த சில ஆண்டுகளாகவே உடல்நலமின்றி இருந்த அவர், அவ்வப்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
எனினும் தேவாலயப் பணிகளை அவர் தொடர்ந்து...
சீனா மீதான வரிவிதிப்பு நடவடிக்கை முடிவுக்கு வரக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். அதற்கான காரணத்தையும் அவர் விவரித்துள்ளார்.
கடந்த ஜனவரியில் அமெரிக்க அதிபராக மீண்டும் பதவியேற்ற டொனால்ட் ட்ரம்ப், உலகின் பல்வேறு நாடுகள் அமெரிக்கப் பொருட்களுக்கு அதிக இறக்குமதி வரி விதிப்பதாகவும், இனி தங்கள் நாடும் பரஸ்பர வரியை விதிக்கும் என்றும் அறிவித்தார். இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக கடந்த 2-ம் தேதி இந்தியா, சீனா,...
ரஷ்யா - உக்ரைன் அமைதி ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்பு தெளிவாக தெரியாவிட்டால் அடுத்த சில நாட்களில், இதற்கான மத்தியஸ்த முயற்சியில் இருந்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் விலகிவிடுவார் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் ஐரோப்பிய, உக்ரேனிய தலைவர்களுடனான சந்திப்புக்குப் பிறகு பேசிய மார்கோ ரூபியோ, “இந்த முயற்சியை வாரக்கணக்கிலோ, மாதக்கணக்கிலோ தொடர நாங்கள் விரும்பவில்லை. நாம் இப்போது மிக விரைவாக...
பாகிஸ்தானில் அமெரிக்கவைச் சேர்ந்த சங்கிலித் தொடர் துரித உணவு கடைகளான கேஎஃப்சி மீது நடந்த தாக்குதல் தொடர்பாக 178 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டுப் போலீஸார் தெரிவித்தனர். அமெரிக்க எதிர்ப்புணர்வு மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேல், காசா மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கேஎஃப்சி கடைகள் மீது கும்பல் தாக்குதல் நடந்துள்ளது. இது தொடர்பாக சமீப வாரங்களாக ஏராளமானவர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர்...
கரீபியன் நாடான பெலீசுவில் பயணிகள் விமானத்தை கடத்த முயன்ற அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர் அகின்யேலா டெய்லர் (49) சுட்டுக் கொல்லப்பட்டார்.
கரீபியன் கடல் பகுதியில் பெலீசு நாடு அமைந்துள்ளது. அந்த நாட்டின் கோரசோல் நகரில் இருந்து சான் பெட்ரோ நகருக்கு சிறிய ரக பயணிகள் விமானம் நேற்று முன்தினம் புறப்பட்டது. இந்த விமானத்தில் 14 பேர் பயணம் செய்தனர்.
நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது அமெரிக்க முன்னாள் ராணுவ வீரர்...
விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ல் சீனாவை பின்னுக்கு தள்ளும் இந்தியா: சர்வதேச விமான நிலைய கவுன்சில் தகவல்
admin - 0
விமானப் பயணிகள் போக்குவரத்தில் 2026-ம் ஆண்டில் சீனாவை இந்தியா முந்திச் செல்லும் என்று சர்வதேச விமான நிலைய கவுன்சில் (ஏசிஐ) தெரிவித்துள்ளது.
உலகின் வேகமான சிவில் விமானப் போக்குவரத்து சந்தைகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இதன் விமானப் பயணிகள் போக்குவரத்தின் வளர்ச்சி விகிதம் இந்த ஆண்டு 10.1 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது, இது சீனாவுக்கான மதிப்பீடான 12 சதவீதத்தை விட குறைவாகும். இந்தியாவுடன் ஒப்பிடுகையில் சீனாவுக்கு மிகப் பெரிய...
“வரிப் பிரச்சினையில் இனி சீனா தான் பேச்சுவார்த்தைக்கு முன்வர வேண்டும். அவர்களிடம் தான் முடிவு இருக்கிறது.” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பரஸ்பர வரி பட்டியலை கடந்த 2-ம் தேதி வெளியிட்டார். இதில் சீன பொருட்களுக்கான வரி 34% ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இதற்கு பதிலடியாக அமெரிக்காவின் அனைத்து பொருட்களுக்கும் 34% வரி விதிக்கப்படும் என சீனா அறிவித்தது. இதற்குப் பதிலடி கொடுக்கும்...
சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 245% வரை வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா நேற்று முன்தினம் அறிவித்துள்ளது. பரஸ்பர வரி விதிப்புக்கு எதிராக சீனா அடுத்தடுத்து எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பதிலடியாக இந்த புதிய வரி விதிப்பு அமல்படுத்தப்பட்டுள்ளதாக அமெரிக்காவின் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
வாகனம், விண்வெளி, செமிகண்டெக்டர் மற்றும் பாதுகாப்பு போன்ற துறைகளுக்கு இன்றியமையாததாக விளங்கும் மிகவும் அரிதான உலோகங்கள் மற்றும் காந்தங்கள் உள்ளிட்ட முக்கிய உயர் தொழில்நுட்பப்...










