அமெரிக்காவும் சீனாவும் பரஸ்பரம் 115 % வரியை குறைத்து உள்ளன. இதன்காரணமாக இரு நாடுகள் இடையிலான வர்த்தக போர் முடிவுக்கு வந்திருக்கிறது. உலகம் முழுவதும் சுமார் 180-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார். இதன்படி சீன பொருட்களுக்கு 34 சதவீத வரி விதிக்கப்பட்டது. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்களுக்கு 34 சதவீத இறக்குமதி வரி விதிக்கப்படும் என்று சீன...
பாகிஸ்தானின் தென்மேற்கில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தை தனி நாடாக அறிவிக்க கோரி பலுசிஸ்தான் விடுதலைப் படை (பிஎல்ஏ) என்ற பெயரில் கிளர்ச்சியாளர்கள் பல ஆண்டுகளாக போராடி வருகின்றனர்.
இந்நிலையல் பிஎல்ஏ செய்தித் தொடர்பாளர் ஜீயந்த் பலூச் நேற்று கூறுகையில், ‘‘இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் இருந்தபோது ஆக்கிரமிப்பு பலுசிஸ்தானில் பாகிஸ்தான் ராணுவம் மற்றும் ஐஎஸ்ஐ உளவு அமைப்புக்கு எதிராக 71 ஒருங்கிணைந்த தாக்குதல்களை பிஎல்ஏ நடத்தியது.
சமீபத்திய...
பாகிஸ்தான் ராணுவத்தின் முகமாக செயல்படும் ஷெரீப் சவுத்ரி ஐ.நா.வால் தடை விதிக்கப்பட்ட சர்வதேச தீவிரவாதியின் மகன் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
பாகிஸ்தான் ராணுவம் ஜிஹாதி மற்றும் தீவிரவாத அமைப்புகளுடன் பின்னிப் பிணைந்துள்ளது என கூறப்படுவது உண்டு. இதற்கு மிகச்சிறந்த உதாரணமாக திகழ்கிறார் 3 நட்சத்திர அந்தஸ்து பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் அகமது ஷெரீப் சவுத்ரி. இன்டர் சர்வீசஸ் பப்ளிக் ரிலேஷன்ஸ் (ஐஎஸ்பிஆர்) இயக்குநராக பதவி வகிக்கும் இவர், பாகிஸ்தான்...
இலங்கையில் பள்ளத்தாக்கில் பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 30-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இலங்கையின் மலைப்பகுதிகள் நிறைந்த ஆன்மிக நகரமான கதரகாமாவிலிருந்து நேற்று புறப்பட்ட அரசுப் பேருந்து, குருநேகலா நகரை நோக்கி சென்று கொண்டிருந்தது. அந்த பேருந்தில் 70 பேர் பயணித்துள்ளனர். மலைப்பாங்கான கோட்மலி என்ற இடத்தில் சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அந்த பேருந்து பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு...
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு போப் 14-ம் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
கத்தோலிக்க திருச்சபையின் தலைவராக இருந்த போப் பிரான்சிஸ் கடந்த ஏப்ரல் 21-ம் தேதி காலமானார். இதையடுத்து, புதிய போப் ஆக ராபர்ட் பிரான்சிஸ் பிரிவோஸ்ட் கடந்த 8-ம் தேதி தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் போப் 14-ம் லியோ என அழைக்கப்படுவார் என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், போப் ஆக...
ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தின் மீது இந்தியா ட்ரோன் தாக்குதல் நடத்தியதை அடுத்து, பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளை தொடரலாமா வேண்டாமா என்பது குறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அவசர ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி உள்ளது.
இந்தியாவின் ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளைப் போல, பாகிஸ்தானில் பிஎஸ்எல் (பாகிஸ்தான் சூப்பர் லீக்) போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ராவல்பிண்டி கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு பிஎஸ்எல் அணிகளான பெஷாவர் ஸல்மி மற்றும்...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே சமரசம் ஏற்படுத்த அமெரிக்கா முயற்சி மேற்கொண்டுள்ளது. இது தொடர்பாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மற்றும் பாகிஸ்தான் பிரதமர் ஷபாஸ் ஷெரீப் ஆகியோரை தொடர்பு கொண்டு அமெரிக்க வெளியுறவுச் செயலாளர் மார்கோ ரூபியோ பேசியுள்ளார்.
அவரிடம் எல்லை தாண்டிய தீவிரவாதத்துக்கு எதிராக பதில் தாக்குதலை இந்தியா கொடுக்கும் என அமைச்சர் ஜெய்சங்கர் திட்டவட்டமாக கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் தளத்தில் ட்வீட் செய்துள்ளார். அமெரிக்கா...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான விவகாரத்தில் அமெரிக்கா தலையிடாது. மேலும், அது எங்கள் வேலையும் அல்ல என அந்நாட்டு துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் கூறியுள்ளார். அண்மையில் அவர் இந்தியா வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை மற்றும் பாகிஸ்தான் வான்வழி தாக்குதலை அடுத்து அவர் இப்படி சொல்லியுள்ளார்.
“போர் பதற்றத்தை தவிர்க்க வேண்டும் என நம்மால் அவர்களிடம் சொல்ல மட்டுமே முடியும். இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கு...
கத்தோலிக்க கிறிஸ்தவர்களின் மத தலைவரான போப் பிரான்சிஸ் தனது 88-வது வயதில் ஏப்ரல் 21-ம் தேதி உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அடக்கம் 26-ம் தேதி நடைபெற்றது. புதிய போப்பை தேர்வு செய்வதற்கான நடைமுறைகள் தொடங்கி நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், புதிய போப் தேர்வானதை குறிக்கும் வகையில் வாடிகனின் சிஸ்டைன் தேவாலயத்தின் புகை போக்கியிலிருந்து நேற்று வெண்புகை வெளியேற்றப்பட்டது. மேலும், புனித பீட்டர் தேவாலயத்தின் பெரிய மணிகள் ஒலித்தன.
கார்டினல்கள்...
வணிக விமானங்கள் பறப்பதை தடை செய்யும் வகையில் தங்களது வான்பரப்பை மூட பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் விமான நிலைய ஆணையம் கூறுகையில், “ லாகூர் மற்றும் இஸ்லாமாபாத் விமான நிலையங்களில் உள்ள அனைத்து வணிக விமானங்களுக்கும் பாகிஸ்தான் வான்வெளியை பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கும் வகையில் வான்பரப்பு மூடப்பட்டுள்ளது. இருப்பினும் கராச்சி விமான நிலையம் மட்டும் செயல்பாட்டில் இருக்கும்" என்று தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள...










