Google search engine
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதுகுறித்து 8 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரபூர்வ கடிதங்கள் எழுதியுள்ளார். இந்த நாடுகள் மீதான அனைத்து புதிய வரிகளும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி பிரேசில் நாட்டுக்கு 50 சதவீதம் வரி...
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதில் கடந்த ஜூலை 4-ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 2...
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது. பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளில் பயணத்தை முடித்துள்ள பிரதமர் மோடி தற்போது நமீபியாவுக்கு சென்றுள்ளார். முன்னதாக, பிரேசிலில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கடந்த 6, 7-ம் தேதிகளில் உலக...
இந்​தி​யாவுடன் விரை​வில் வர்த்தக ஒப்​பந்​தம் கையெழுத்​தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரி​வித்​துள்​ளார். உலகம் முழு​வதும் சுமார் 100-க்​கும் மேற்​பட்ட நாடுகளுக்​கான வரி விகிதங்​களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்​ரலில் வெளியிட்​டார். இதனால் உலகம் முழு​வதும் பொருளா​தார மந்​தநிலை ஏற்​பட்​டது. அமெரிக்கா உட்பட பல்​வேறு நாடு​களின் பங்​குச் சந்​தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்​பட்​டது. இதன்​காரண​மாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்​டம் ஜூலை 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது....
நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார். 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி நேற்று நமீபியா சென்றடைந்தார். அவருக்கு தலைநகர் விண்ட்ஹோக்கிலுள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் குவிந்திருந்தனர். ஒரு பக்கத்தில் மேளம் போன்ற பழங்கால தோல் கருவியை வாசித்தபடி கலைஞர்கள் இருந்தனர்....
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில், உலக வர்த்தக அமைப்பு ஆகியவற்றில் சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என்று பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி வலியுறுத்தினார். பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் 17-வது உச்சி மாநாடு நேற்று முன்தினம் தொடங்கியது. முதல் நாளில் உலக அமைதி, பாதுகாப்பு குறித்த சிறப்பு கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்றார். பின்னர் சர்வதேச சீர்திருத்தம், செயற்கை நுண்ணறிவு தொடர்பான சிறப்பு கூட்டங்களிலும்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பை, தொழில​திபர் எலான் மஸ்க் மீண்​டும் சீண்​டி​யுள்​ளார். கைது விவ​காரம் என்ற பெயரில் ஒரு பதிவை சமூக வலை​தளத்​தில் பதி​விட்டு பரபரப்பை ஏற்​படுத்​தி​யுள்​ளார் மஸ்க். அமெரிக்க அதிபர் ட்ரம்​பின் தீவிர ஆதர​வாள​ராக இருந்​தவர் தொழில​திபர் எலான் மஸ்க். கடந்த ஜனவரி​யில் ட்ரம்ப் அமெரிக்க அதிப​ராக பொறுப்​பேற்​றதும் எலான் மஸ்க்கை அரசின் செயல்​திறன் துறை​யின் தலை​வ​ராக நியமித்​தார். அரசின் தேவையற்ற செல​வு​களை குறைப்​பதே இத்​துறை​யின் நோக்​கம் என்​றும்...
 ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகளுக்கு 25 சதவீத விதிக்கப்படுவதாக அறிவித்த சில மணி நேரங்களில், மேலும் 12 நாடுகளுக்கு வரிகளை உயர்த்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் பட்டியலிட்டுள்ளார். மியான்மர், தென்னாப்பிரிக்கா, மலேசியா, வங்கதேசம், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு வரிகளை அவர் உயர்த்தியுள்ளார். அந்த நாடுகளுக்கு அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில், தனது ட்ரூத் சமூக வலைதளத்தில் ட்ரம்ப் வெளியிட்டுள்ள பட்டியல்: தென் கொரியா - 25% வரிஜப்பான்...
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நீரவ் மோடி பெல்ஜியம் குடியுரிமை பெற்றவர். இந்தியாவில் வைர வியாபாரம் செய்த நீரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியில், தனது பங்குதாரர்கள் மற்றும் தனது மாமா மெகுல் ஷோக்ஸி ஆகியோருடன் இணைந்து ரூ.28,000 கோடி அளவுக்கு கடன் பெற்று மோசடி செய்தார். இந்த பணத்தை போலி நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டுக்கு அனுப்ப இவரது தம்பி நெஹல் மோடி உதவினார். இருவர் மீதும் அமலாக்கத்துறை மற்றும்...
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மற்றும் தொழிலதிபர் எலான் மஸ்க் இடையே கடந்த மாதம் கருத்து முரண் ஏற்பட்டது. இந்நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை தற்போது எலான் மஸ்க் தொடங்கியுள்ளார். “அமெரிக்க மக்களுக்கு மீண்டும் சுதந்திரத்தை கொடுப்பதற்காக அமெரிக்கா கட்சியை இன்று தொடங்கி உள்ளோம். நமது தேசத்தை வீண் செலவு மற்றும் ஊழல் மூலம் திவால் செய்கின்றனர். இதை பார்க்கும்போது நாம் ஜனநாயக ஆட்சி முறையின் கீழ்...