உக்ரைன் மீதான போரை 50 நாட்களுக்குள் நிறுத்தவில்லை என்றால்…” – ரஷ்யாவுக்கு ட்ரம்ப் கடும் எச்சரிக்கை
admin - 0
அடுத்த 50 நாட்களுக்குள் உக்ரைனுடன் போர் நிறுத்தத்திற்கு விளாடிமிர் புதின் ஒப்புக் கொள்ளாவிட்டால், ரஷ்யா மீது கடுமையான வரிகள் விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நிருபர்களிடம் பேசிய அவர், “நாங்கள் இரண்டாம் நிலை வரிகளை அமல்படுத்த இருக்கிறோம். 50 நாட்களில் ரஷ்யா - உக்ரைன் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்படவில்லை என்றால், ரஷ்யா மீது 100 சதவீத வரிகள்...
பூமிக்கு புறப்பட்டார் இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா: இன்று பிற்பகல் பசிபிக் கடலில் விண்கலம் இறங்கும்
admin - 0
சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கியிருந்து ஆய்வு செய்த இந்திய வீரர் ஷுபன்ஷு சுக்லா நேற்று விண்கலத்தில் பூமிக்கு புறப்பட்டார். அவரது விண்கலம் இன்று பிற்பகல் அமெரிக்காவின் கலிபோர்னியா பசிபிக் கடலில் இறங்குகிறது.
அமெரிக்காவின் அக்ஸியம் ஸ்பேஸ், நாசா, இஸ்ரோ, ஐரோப்பிய விண்வெளி முகமை ஆகியவை இணைந்து கடந்த 25-ம் தேதி சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு பால்கன் ராக்கெட் மூலம் டிராகன் விண்கலத்தை அனுப்பின. இந்த விண்கலத்தில் இந்திய வீரர் ஷுபன்ஷு...
திபெத்தில் சீனா நடத்தும் உறைவிடப் பள்ளிகளில் 10 லட்சம் குழந்தைகள் கட்டாயமாக சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சீனாவில் 1911-ல் ஏற்பட்ட ஜின்ஹை புரட்சிக்குப் பிறகு திபெத் தனி நாடாக பிரிந்தது. எனினும், 1950-ல் திபெத்தை சீனா மீண்டும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்தது. இதையடுத்து, திபெத்திலிருந்து வெளியேறிய 14-வது தலாய் லாமா இந்தியாவில் வசித்து வருகிறார். இதனிடையே அடுத்த தலாய் லாமாவை நாங்கள் தேர்வு செய்வோம் என சீனா கூறியது....
இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.
பஹல்காம் தீவிரவாத தாக்குதலை அடுத்து இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கை மூலம் பாகிஸ்தானில் இருந்த தீவிரவாத முகாம்களை தாக்கி அழித்தது. தொடர்ந்து பாகிஸ்தான் தரப்பில் இருந்து எல்லையோர இந்திய மாநிலங்கள் குறிவைக்கப்பட்டன. அந்த தாக்குதலை இந்திய ராணுவம் இடைமறித்து அழித்தது. பாகிஸ்தானுக்கு தகுந்த பதிலடி...
இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை கைது செய்தது அமெரிக்கா
admin - 0
இந்தியாவால் தேடப்படும் முக்கிய நபர் உட்பட 8 காலிஸ்தான் தீவிரவாதிகளை அமெரிக்க புலனாய்வுத்துறை (எப்பிஐ) கைது செய்தது.
இந்தியாவில் குற்றச் செயல்களில் ஈடுபட்ட காலிஸ்தான் தீவிரவாதிகள், ரவுடிகள் பலர் அமெரிக்கா மற்றும் கனடாவுக்குள் சட்டவிரோதமாக செல்லும் சம்பவங்கள் கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இவர்கள் அங்கும் ஆயுதங்களை காட்டி மிரட்டுதல், ஆள்கடத்தல், சித்ரவதை போன்ற குற்றங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களில் முக்கியமான நபர் பவித்தர் சிங் பதாலா. இவர் பாபர்...
பிரேசில் நாட்டுக்கு 50% வரி விதிப்பதாகவும், இலங்கை, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 7 நாடுகளுக்கு 30 சதவீதம் வரை வரி விதிக்கப்படுவதாகவும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து 8 நாடுகளின் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிகாரபூர்வ கடிதங்கள் எழுதியுள்ளார். இந்த நாடுகள் மீதான அனைத்து புதிய வரிகளும் ஆகஸ்ட் 1 முதல் அமலுக்கு வரும் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். இதன்படி பிரேசில் நாட்டுக்கு 50 சதவீதம் வரி...
அமெரிக்காவின் டெக்சாஸில் கடந்த ஜூலை 4-ம் தேதி ஏற்பட்ட பெருவெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120 ஆக உயர்ந்துள்ளது. காணாமல் போன 170 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதில் கடந்த ஜூலை 4-ம் தேதி சில மணி நேரத்தில் 280 மிமீ மழை பெய்தது. இதன் காரணமாக குவாடலூப் நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, சுமார் 2...
பிரேசில் நாட்டின் உயரிய விருது பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்கி கவுரவிக்கப்பட்டது.
பிரதமர் நரேந்திர மோடி 5 நாள் சுற்றுப்பயணமாக கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில், நமீபியா ஆகிய நாடுகளுக்குச் சென்றுள்ளார். கானா, டிரினிடாட் அண்டு டுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் நாடுகளில் பயணத்தை முடித்துள்ள பிரதமர் மோடி தற்போது நமீபியாவுக்கு சென்றுள்ளார்.
முன்னதாக, பிரேசிலில் நடைபெற்ற 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் கடந்த 6, 7-ம் தேதிகளில் உலக...
இந்தியாவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் சுமார் 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான வரி விகிதங்களை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கடந்த ஏப்ரலில் வெளியிட்டார்.
இதனால் உலகம் முழுவதும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டது. அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகளின் பங்குச் சந்தைகளில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. இதன்காரணமாக அமெரிக்க அரசின் வரி விதிப்பு திட்டம் ஜூலை 9-ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டது....
நமீபியா நாட்டுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தன்னை வரவேற்க வந்திருந்த கலைஞர்களுடன் இணைந்து பழங்கால இசைக்கருவியை வாசித்து மகிழ்ந்தார்.
5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ள பிரதமர் மோடி நேற்று நமீபியா சென்றடைந்தார். அவருக்கு தலைநகர் விண்ட்ஹோக்கிலுள்ள விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அப்போது அவரை வரவேற்க விமான நிலையத்தில் ஏராளமான இசைக் கலைஞர்கள் குவிந்திருந்தனர். ஒரு பக்கத்தில் மேளம் போன்ற பழங்கால தோல் கருவியை வாசித்தபடி கலைஞர்கள் இருந்தனர்....









