ஆஸ்திரேலியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடர் வரும் 21-ம்தேதி பெர்த் நகரில் தொடங்குகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் முதல் போட்டிக்கான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இதில் முன்னணி பேட்ஸ்மேனான மார்னஷ் லபுஷேன் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.
மோசமான பார்ம் காரணமாக கடந்த ஜூலை மாதம் மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான டெஸ்ட்...
நியூஸிலாந்து - மேற்கு இந்தியத் தீவுகள் இடையிலான முதல் டி20 கிரிக்கெட் போட்டி நேற்று ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் நடைபெற்றது. முதலில் பேட் செய்த மேற்கு இந்தியத் தீவுகள் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.
அதிகபட்சமாக கேப்டன் ஷாய் ஹோப் 39 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 53 ரன்கள் விளாசினார். ரோவ்மன் பவல் 33, ராஸ்டன் சேஸ்...
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டி கோல்ட் கோஸ்ட் நகரில் உள்ள கர்ராரா ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி 20 தொடரில் முதல் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டது. 2-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்கள்...
கர்நாடக மாநிலம் மங்களூருவில் மங்களூரு சேலஞ்ச் பாட்மிண்டன் தொடர் நடைபெற்றது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 60-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ரித்விக் சஞ்ஜீவி, சகநாட்டைச் சேர்ந்த ரூனக் சவுகானுடன் மோதினார். இதில் ரித்விக் 14-21, 21-19, 21-19 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கம் வென்றார். தமிழகத்தைச் சேர்ந்த ரித்விக் சஞ்ஜீவி ஹட்சன் பாட்மிண்டன் அகாடமியில் பயிற்சி பெற்று...
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி மகுடம் சூடியது.
இந்நிலையில் இந்த தொடரின் சிறந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது. இதில் இந்திய அணியின் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ்,...
மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்துள்ள நிலையில் பேட்டிங் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, தென் ஆப்பிரிக்காவின் லாரா வோல்வார்ட்டிடம் முதலிடத்தை இழந்துள்ளார்.
அரை இறுதி மற்றும் இறுதிப் போட்டியில் சதம் விளாசியிருந்த லாரா வோல்வார்ட், உலகக் கோப்பை தொடரில் 571 ரன்களை வேட்டையாடி இருந்தார். இதன் மூலம் அவர், தரவரிசையில் 814 புள்ளிகளுடன் 2 இடங்கள் முன்னேறி முதலிடத்தை பிடித்துள்ளார்.
ஆஸ்திரேலிய...
ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு - விதர்பா அணிகள் இடையிலான ஆட்டம் கோவையில் நடைபெற்றது. இதன் முதல் இன்னிங்ஸில் தமிழ்நாடு அணி 291 ரன்களும், விதர்பா 501 ரன்களும் குவித்தன. 210 ரன்கள் பின்தங்கிய நிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய தமிழ்நாடு அணி நேற்றைய கடைசி நாள் ஆட்டத்தில் 89 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 233 ரன்கள் எடுத்திருந்த போது...
கத்தாரில் உள்ள தோகா நகரில் வரும் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா ‘ஏ’ உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா ‘ஏ’, பாகிஸ்தான் ‘ஏ’, ஐக்கிய அரபு அமீரகம் ‘ஏ’, ஓமன் ‘ஏ’ ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தியா ‘ஏ’ அணி...
உலகக் கோப்பை தொடரில் ஆல்ரவுண்டரான இந்தியாவின் தீப்தி சர்மா, பேட்டிங்கில் 215 ரன்களும் பந்துவீச்சில் 22 விக்கெட்களையும் வேட்டையாடி இருந்தார். இதனால் அவர், தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
தீப்தி சர்மா கூறும்போது, ‘‘உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது இன்னும் எனக்கு ஒரு கனவு போலவே தோன்றுகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்களிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சவால்மிகுந்த ஆட்டங்களை எனக்குப் பிடித்தமானவை. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும்...
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இந்திய வெற்றி குறித்து இந்திய அணி வீராங்கனைகள் தெரிவித்தது:
ஸ்மிருதி மந்தனா: இந்த தருணத்தை மறக்கவே முடியாது. இன்னும் 45 நாட்களுக்கு எனக்கு இந்த நினைவுகள் இருக்கும். 45 நாள் வரை ஒவ்வொரு இரவும் தூங்காமலேயே இந்த...









