சந்தோஷ் டிராபி கால்பந்து போட்டியின் கால் இறுதிச் சுற்றில் விளையாட தமிழ்நாடு அணி தகுதி பெற்றுள்ளது. அசாம் மாநிலம் டகுகானா மற்றும் சிலப்பதரில் சந்தோஷ் டிராபி கால்பந்து தொடரின் இறுதிக்கட்ட சுற்று நடைபெற்று வருகிறது.
இதில் ‘ஏ’ பிரிவில் இடம் பெற்றுள்ள தமிழ்நாடு அணி நேற்று உத்தராகண்ட் அணியுடன் சிலப்பதர் கால்பந்து மைதானத்தில் மோதியது. இதில் தமிழ்நாடு அணி 1-0 என்ற கோல் கணக்கில் உத்தராகண்ட் அணியை வீழ்த்தி கால்...
இந்தியா, நியூஸிலாந்து அணிகள் மோதும் 5-வது மற்றும் கடைசி சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி திருவனந்தபுரத்தில் இன்று நடைபெறவுள்ளது. திருவனந்தபுரத்திலுள்ள கிரீன்பீல்ட் சர்வதேச மைதானத்தில் இன்று இரவு 7 மணிக்கு இப்போட்டி நடைபெறவுள்ளது. 5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்திய அணி 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.
தொடர்ச்சியாக 3 போட்டிகளில் வெற்றி பெற்றிருந்த இந்திய அணி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4-வது போட்டியில் நியூஸிலாந்திடம் தோல்வி கண்டது....
இந்திய கிரிக்கெட் அணி வீரர் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம் சமூக வலைதளப் பக்கம் முடக்கப்பட்ட நிலையில், அது மீண்டும் செயல்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருப்பவர் விராட் கோலி. தற்போது அவர், சர்வதேச ஒரு நாள் போட்டியில் மட்டும் விளையாடி வருகிறார். விராட் கோலிக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 27.4 கோடி ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
இந்நிலையில் விராட் கோலியின் இன்ஸ்டாகிராம்...
ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிச் சுற்றுக்கு ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்கராஸ், செர்பிய வீரர் ஜோகோவிச் ஆகியோர் முன்னேறியுள்ளனர். அரை இறுதி ஆட்டத்தில் ஐந்தரை மணி நேர போராட்டத்துக்குப் பின்னர் அல்கராஸ் வெற்றி கண்டார்.
ஆண்டின் முதல் கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி மெல்பர்னில் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற முதலாவது அரை இறுதிப் போட்டியில் முதல் நிலை வீரரான...
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் விளையாட முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்காவும், 5-ம் நிலை வீராங்கனையான கஜகஸ்தானின் எலெனா ரைபகினாவும் தகுதி பெற்றுள்ளனர்.
ஆண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடரான ஆஸ்திரேலிய ஓபன் மெல்பர்ன் நகரில் நடைபெற்று வருகிறது. இதன் 12-வது நாளான நேற்று மகளிர் ஒற்றையர் பிரிவு அரை இறுதி ஆட்டத்தில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின்...
நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 216 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
அதிகபட்சமாக ஷிவம் துபே 23 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். ரிங்கு சிங் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39...
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் பங்கேற்பதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அணி பிப்ரவரி 2-ம் தேதி அதிகாலை இலங்கைக்கு புறப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் உலகக் கோப்பை தொடரையோ அல்லது இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தையோ பாகிஸ்தான் அணி புறக்கணிப்பதற்கு வாய்ப்பு இல்லை எனவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஐசிசி டி 20 கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் வரும் பிப்ரவரி 7-ம் தேதி...
டெல்லியில் குடும்பத்தினர் முன்னிலையில் விளையாடுவது சிறப்பான விஷயம் என்று நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்றுள்ள இந்திய வம்சாவளி வீரர் ஆர்யன் தத் கருத்து தெரிவித்துள்ளார்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் ஆர்யன் தத். இவர் தற்போது நெதர்லாந்து கிரிக்கெட் அணியில் இடம்பெற்று விளையாடி வருகிறார். வரும் பிப்ரவரி 7-ம் தேதி இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்கவுள்ளது. போட்டியில் பங்கேற்பதற்காக நெதர்லாந்து அணியினருடன்...
சென்னை மாவட்ட வில்வித்தை பயிற்சி மையத்துக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு, பிப்.8-ம் தேதி நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாg அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலம், மத்திய அரசின் ‘கேலோ இந்தியா’ திட்ட நிதியுதவியுடன் வில்வித்தை பயிற்சிக்கான மையம் சென்னையில் அமைய உள்ளது.
இந்த மையத்தில் தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் சேர்க்கப்பட்டு, அவர்களுக்கு தினசரி பயிற்சிகள் வழங்கப்பட...
தாய்லாந்து மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் தொடர் பாங்காக் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியா வின் கிரண் ஜார்ஜ் 21-15, 21-9 என்ற நேர் செட் கணக்கில் மலேசியாவின் ஷோலே ஐடிலை வீழ்த்தி 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
மற்ற இந்திய வீரர்களான மஞ்சுநாத் 21-12, 9-21, 21-17 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் மேக்னஸ் ஜோஹன்சனையும், தருண் மன்னேபள்ளி 22-20, 21-17 என்ற செட்...