மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் ஹைதராபாத்: ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று பலப்பரீட்சை
admin - 0
ஐபிஎல் லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு மும்பை இந்தியன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.
ஹைதராபாத்திலுள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. ஹைதராபாத் அணி இதுவரை 7 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளைப் பெற்று 4 புள்ளிகளை மட்டுமே பெற்று பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள 7 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி பிளே...
குஜராத் டைடன்ஸ் அணிக்கெதிரான ஐபிஎல் லீக் போட்டியில் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடாததால் தோல்வி கண்டோம் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டன் அஜிங்கிய ரஹானே தெரிவித்தார்.
கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணியைத் தோற்கடித்தது.
முதலில் விளையாடிய குஜராத் அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 198 ரன்கள் குவித்தது. சாய் சுதர்ஷன்...
சென்னையில் நடைபெற்ற விழாவில் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை வழங்கப்பட்டது. இதில் ரூ.7 லட்சத்தை சென்னை சூப்பர்கிங்ஸ் (சிஎஸ்கே) அணி வீரர் ஷிவம் துபே வழங்கினார்.
தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் (டிஎன்சிஏ) மற்றும் சிஎஸ்கே சார்பில் வளர்ந்து வரும் இளம் வீரர், வீராங்கனைகளுக்கு ஊக்கத் தொகை வழங்கும் விழா சென்னையில் நேற்று நடைபெற்றது.
இதில் தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் பத்திரிக்கையாளர்கள் சங்கம், தமிழ்நாடு கிரிக்கெட்...
கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்துப் போட்டியில் இன்று புவனேஸ்வரில் சென்னையின் எப்சி, மும்பை சிட்டி எப்சி அணிகள் மோதவுள்ளன. இதற்கான சென்னையின் எப்சி அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
அணி விவரம்: கோல்கீப்பர்கள்: முகமது நவாஸ், சமிக் மித்ரா, மல்ஹர் உமேஷ் மோஹல்.டிபன்டர்கள்: ரியான் எட்வர்ட்ஸ், பிசி லால்தின்புயா, விக்னேஷ் தட்சிணாமூர்த்தி, அங்கித் முகமர்ஜி, மந்தர்ராவ் தேசா, பிரீத்தம் கோடல், எட்வின் சிட்னி வன்ஸ்பால்.
மிட்ஃபீல்டர்கள்: ஜிதேந்திர சிங், லால்ரின்லியானா நாம்டே, ஜிதேஸ்வர் சிங்,...
நடப்பு ஐபிஎல் தொடரின் நேற்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை வீழ்த்தியது பஞ்சாப் கிங்ஸ் அணி.
பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த போட்டி மழை காரணமாக இரவு 9.45க்கு தொடங்கியது. டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. 14 ஓவர்கள் என்ற அடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆர்சிபி அணியின் ஃபில் சால்ட், விராட் கோலி இருவரும் இன்னிங்க்ஸை தொடங்கினர். இதில் ஃபில் சால்ட்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதல் இரு இடங்களில் உள்ள டெல்லி கேப்பிடல்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்த ஆட்டம் இறுதிக்கட்ட ஓவர்களில் அசத்தி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் வேகம் மிட்செல் ஸ்டார்க்கிற்கும், தொடக்க ஓவர்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் குஜராத் டைட்டன்ஸ் அணியின் முகமது...
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுடன் இன்று மோதல்: தொடர்ச்சியான தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைக்குமா ராஜஸ்தான்?
admin - 0
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.
சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் 8-வது இடத்தில் உள்ளது. ரிஷப் பந்த் தலைமயிலான லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 7 ஆட்டங்களில் விளையாடி 4 வெற்றி,...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே 7 ஆட்டங்களில் விளையாடி 2 வெற்றி, 5 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. இந்நிலையில் அந்த அணியில் இடம் பெற்றிருந்த மிதவேகப்பந்து வீச்சாளரான குர்ஜப்னீத் சிங் காயம் காரணமாக தொடரில் இருந்து விலகி உள்ளார்.
இதனால் அவருக்கு பதிலாக தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த ஆல்ரவுண்டரான டெவால்ட் பிரெவிஸை ஒப்பந்தம் செய்துள்ளது சிஎஸ்கே. கடந்த...
ஸ்குவாஷ் உலக சாம்பியன்ஷிப் தொடருக்கான ஆசிய அளவிலான தகுதி சுற்று கோலாலம்பூரில் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் இந்தியாவின் அனஹத் சிங், ஜப்பானின் அகாரி மிடோகி காவாவுடன் மோதினார். இந்த ஆட்டத்தில் முழுமையாக ஆதிக்கம் செலுத்திய அனஹத் சிங் 11-1, 11-7, 11-5 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு கால் இறுதியில் ஹாங்காங்கின் ஹெலன்...
ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது மும்பை இந்தியன்ஸ் அணி. அதிரடி பட்டாளங்கள் நிறைந்த ஹைதராபாத் அணியை 162 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது மும்பை அணியின் பந்து வீச்சு துறை. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 28 பந்துகளில், 40 ரன்கள் சேர்த்தார்.
டிராவிஸ் ஹெட் 28, இஷான் கிஷன் 2, நித்திஷ் குமார்...










