Google search engine
ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் தடுமாறி வரும் டெல்லி கேப்பிடல்ஸ் அணி, புள்ளிகள் பட்டியலில் வலுவான இடத்தில் உள்ள குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதுகிறது. அக்சர் படேல் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 4 தோல்வி, ஒரு முடிவு இல்லாத ஆட்டம் என 13 புள்ளிகளுடன் பட்டியலில்...
ஐபிஎல் 18-வது சீசன் லீக் போட்டியில் இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதவுள்ளன. லக்னோவிலுள்ள பாரத் ரத்னா ஸ்ரீ அடல்பிஹாரி வாஜ்பாய் இகானா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெறவுள்ளது. லக்னோ அணி, இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 5 வெற்றி, 6 தோல்விகளுடன் 10 புள்ளிகளைப் பெற்றுள்ளது. எனவே, எஞ்சியுள்ள 3 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே அந்த அணி...
மழையால் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து பிளே ஆப் சுற்றிலிருந்து 4-வது அணியாக கொல்கத்தா அணி வெளியேறியுள்ளது. இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போர் பதற்றம் காரணமாக கடந்த 8-ம் தேதி ஐபிஎல் போட்டி பாதியிலேயே நிறுத்தப்பட்டது. அதன்பின்னர், ஒரு வாரம் கழித்து (மே 17-ம் தேதி) போட்டிகள் மீண்டும் தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் பெங்களூரு-கொல்கத்தா அணிகளுக்கு...
ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டி​யின் லீக் ஆட்​டத்​தில் பஞ்​சாப் கிங்ஸ் அணி 10 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் ராஜஸ்​தான் ராயல்ஸ் அணியை வீழ்த்​தி​யது. பஞ்​சாபின் நேஹல் வதே​ரா, சஷாங்க் சிங், ஹர்​பிரீத் பிரார் ஆகியோர் சிறப்​பாக செயல்​பட்டு அணிக்கு வெற்றி தேடித் தந்​தனர். இந்த ஆட்​டம் ராஜஸ்​தான் மாநிலம் ஜெய்ப்​பூரிலுள்ள சவாய் மான் சிங் மைதானத்​தில் நேற்று மாலை 3.30மணிக்கு நடை​பெற்​றது. முதலில் விளை​யாடிய பஞ்​சாப் அணி 20 ஓவர்​களில் 5 விக்​கெட்...
ஐபிஎல் டி20 தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு பெங்களூருவில் உள்ள சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் இன்று 17-ம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக திருத்தி அமைக்கப்பட்ட அட்டவணை ஏற்கெனவே வெளியிடப்பட்டிருந்தது. இதன்படி லீக் ஆட்டங்கள் இன்று தொடங்கி வரும் 27-ம் தேதி...
ஐபிஎல் தொடரில் பங்கேற்பதற்காக முஸ்டாபிஸுர் ரஹ்மானுக்கு தடையில்லா சான்றிதழ் வழங்கி உள்ளது வங்கதேச கிரிக்கெட் வாரியம். இதன் மூலம் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கடைசி 3 லீக் ஆட்டங்களில் முஸ்டாபிஸுர் ரஹ்மான் பங்கேற்க முடியும். ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியில் இடம் பெற்றிருந்த தொடக்க பேட்ஸ்மேனான ஆஸ்திரேலியாவின் ஜேக் பிரேசர் மெக்கர்க் சொந்த காரணங்களுக்கு விலகியுள்ளார். இதனால் அவருக்கு பதிலாக வங்கதேசத்தை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் முஸ்டாபிஸுர் ரஹ்மானை...
தோஹாவில் நடைபெற்ற டைமண்ட் லீக்கில் 90.23 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து புதிய சாதனை படைத்துள்ளார் இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ரா. இரண்டு முறை ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற அவர், 90+ மீட்டர் தூரத்தை கடந்து ஈட்டி எறிவது இதுவே முதல் முறை. தோஹா டைமண்ட் லீக்கில் முதல் முயற்சியில் 88.40 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்தார் நீராஜ். தொடர்ந்து இரண்டாவது முயற்சி ‘நோ த்ரோ’ என கணக்கில்...
ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு வழங்கப்படும் பரிசுத் தொகை இருமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன்படி வெற்றி பெறும் அணி ரூ.30.77 கோடியை தட்டிச் செல்லும். ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி வரும் ஜூன் 11-ம் தேதி லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறுகிறது. இதில் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியாவை எதிர்த்து தென் ஆப்பிரிக்க அணி மோத உள்ளது. இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான பரிசுத்...
 குஜராத் டைட்டன்ஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேனான இங்கிலாந்தின் ஜாஸ் பட்லர், தேசிய அணிக்காக விளையாட வேண்டியது இருப்பதால் ஐபிஎல் தொடரில் லீக் சுற்றுடன் வெளியேறுகிறார். இதனால் பிளே ஆஃப் சுற்றில் அவருக்கு பதிலாக இலங்கை வீரர் குஷால் மெண்டிஸை குஜராத் அணி ஒப்பந்தம் செய்யும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் காரணமாக நிறுத்தப்பட்டிருந்த ஐபிஎல் தொடர் நாளை (17-ம் தேதி) மீண்டும் தொடங்குகிறது. இதற்காக...
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடரின் கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான அரினா சபலென்கா அதிர்ச்சி தோல்வி அடைந்தார். இத்தாலியின் ரோம் நகரில் நடைபெற்று வரும் இந்தத் தொடரில் மகளிர் ஒற்றையர் பிரிவு கால் இறுதி சுற்றில் முதல் நிலை வீராங்கனையான பெலாரஸின் அரினா சபலென்கா, 8-ம் நிலை வீராங்கனையான சீனாவின் செங் கின்வென்னுடன் மோதினார். இதில் செங் கின்வென் 6-4, 6-3 என்ற நேர் செட் கணக்கில் அரினா...