பிரிட்ஜ்டவுனில் நடைபெறும் ஆஸ்திரேலியா-மே.இ.தீவுகள் இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் 14 விக்கெட்டுகள் சரிந்தன. ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்து 180 ரன்களுக்குச் சுருண்டது. ஷமார் ஜோசப் 4 விக்கேட்டுகலையும் ஜேய்டன் சீல்ஸ் 5 விக்கெட்டுகளையும் சாய்த்தனர். தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் தன் முதல் இன்னிங்சில் ஆட்ட முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 57 ரன்கள் எடுத்துள்ளது.
180 ரன்களுக்கு முதல் இன்னிங்ஸில் சுருண்டது,...
இளம் கால்பந்து வீரர்களை உருவாக்கும் குறிக்கோளுடன், இந்தியாவில் பல்வேறு மண்டலங்களில் அகாடமிகளை அமைக்க அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் ஃபிபாவும் இணைந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அகாடமிக்கான வீரர், வீராங்கனைகள் தேர்வு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அருகில் உள்ள எஸ்டிஏடி மைதானத்தில் வரும் ஜூன் 29 மற்றும் 30-ம் தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதில் கலந்து கொள்ளும் வீரர்கள் 2012-ம் ஆண்டு பிறந்தவர்களாகவும் வீராங்கனைகள் 2010...
இந்தியா - இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் 3-வது நளில் இங்கிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் பேட்டிங் செய்து கொண்டிருந்த நிலையில் 61-வது ஓவரின் போது பந்தின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் இதனால் பந்தை மாற்றுமாறு இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனும் துணை கேப்டனுமான ரிஷப் பந்த் களநடுவரிடம் கூறினார்.
பந்தை சோதித்து...
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின.
முதலில் பேட் செய்த சேப்பாக் அணி 5 விக்கெட்கள் இழப்புக்கு 178 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் பாபா இந்திரஜித் 40 பந்துகளில், 7 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 63 ரன்களும் விஜய் சங்கர் 46 பந்துகளில், ஒரு சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 59...
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் இடது கை சுழற்பந்து வீச்சாளாரான திலீப் தோஷி, மாரடைப்பு காரணமாக நேற்று லண்டனில் காலமானார். 77 வயதான அவர், தனது மனைவி கலிந்தி மகன் நயன், மகள் விசாகா ஆகியோருடன் வசித்து வந்தார்.
பிஷன் சிங் பேடியின் ஓய்வுக்கு பின்னர் 1979-ம் ஆண்டு இந்திய டெஸ்ட் அணியில் திலீப் தோஷி அறிமுகமானார். 1983-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் அவர், 33 டெஸ்ட் போட்டிகளில் இந்திய...
371 ரன்கள் வெற்றி இலக்கை 5-ம் நாளில் இங்கிலாந்து சேஸ் செய்து அபார வெற்றி பெற்று ஆண்டர்சன் சச்சின் டிராபி டெஸ்ட் தொடரில் 1-0 முன்னிலை பெற்றது. இதில் இந்திய பவுலிங்கின் போதாமை முழுக்க முழுக்க இங்கிலாந்தினால் அம்பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் தலைமை பயிற்சியாளரான கவுதம் கம்பீர் பொறுமை காக்கவும் என்று கேட்டுக் கொண்டுள்ளார் .
அதுவும் இந்தியா நம்பியிருக்கும் ஜஸ்பிரித் பும்ரா 2-வது இன்னிங்ஸில் விக்கெட் இல்லாமல்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் 2-வது இன்னிங்ஸில் இந்திய அணி நிதானமாக விளையாடி 364 ரன்கள் சேர்த்தது. கே.எல்.ராகுல், ரிஷப் பந்த் சதம் விளாசினர்.
லீட்ஸில் உள்ள ஹெட்டிங்லி மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 471 ரன்களும், இங்கிலாந்து அணி 465 ரன்களும் குவித்தன. 6 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்ஸை விளையாடிய இந்திய அணி 3-வது நாள்...
டிஎன்பிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் நேற்று முன்தினம் இரவு திருநெல்வேலியில் நடைபெற்ற ஆட்டத்தில் மதுரை பாந்தர்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. முதலில் பேட் செய்த மதுரை பாந்தர்ஸ் 20 ஓவர்களில் 120 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக சரத் குமார் 31, ராஜலிங்கம் 22, குர்ஜப்னீத் சிங் 13, முருகன் அஸ்வின் 13 ரன்கள் சேர்த்தனர்.
திருப்பூர் தமிழன்ஸ் அணி தரப்பில் ரகுபதி சிலம்பரசன், சாய் கிஷோர் ஆகியோர்...
இந்தியா உடனான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் 371 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணி விரட்டி வருகிறது. இந்நிலையில், இங்கிலாந்தில் இதுவரையில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட அதிகபட்ச ரன்கள் குறித்து பார்ப்போம்.
லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய வீரர்கள் கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பந்த் சதம் விளாசினர். இதன் மூலம் 364 ரன்களை இந்தியா எட்டியது. முதல்...
2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்புவதாக இலங்கை கிரிக்கெட் வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ் தெரிவித்தார்.
இலங்கை, வங்கதேச அணிகளுக்கு இடையே காலேவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் டிராவில் முடிவடைந்தது. இந்தப் போட்டியுடன் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேத்யூஸ் அறிவித்திருந்தார்.
இதுதொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், டி20 போட்டிகளில் விளையாடுவேன். 2026-ம்...










