பேட்டிங்கில் நாங்கள் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வி அடைந்ததற்கான காரணத்தை சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனின் மூன்றாவது லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 8 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த சிஎஸ்கே 19.4 ஓவர்களில் 127 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. 128 ரன்கள் இலக்கை...
ஐபிஎல் கிரிக்​கெட் போட்​டிகளில் குறைந்த பந்​துகளில் 3 ஆயிரம் ரன்​கள் குவித்து இஷான் கிஷன் சாதனை புரிந்​தார். 2026-ம் ஆண்டு ஐபிஎல் சீசன் நேற்று தொடங்​கியது. பெங்​களூரு சின்​ன​சாமி கிரிக்​கெட் மைதானத்​தில் நேற்று நடை​பெற்ற முதல் ஆட்​டத்​தில் நடப்பு சாம்​பியன் ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்​களூரு (ஆர்​சிபி) அணி​யும், 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசரிஸ் ஹைத​ரா​பாத் அணி​யும் மோதின. முதலில் விளை​யாடிய ஹைத​ரா​பாத் அணி 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 201...
ஐபிஎல் 2026 தொடரின் இரண்டாவது லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. 2012-ஆம் ஆண்டிற்குப் பிறகு தனது முதல் லீக் ஆட்டத்திலேயே வெற்றி பெற்றுள்ள மும்பை அணி, 14 ஆண்டுகால நீண்ட கால காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. டாஸ் வென்ற மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக...
ஐபிஎல் லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணியுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று மோதவுள்ளது. எம்.எஸ்.தோனி இல்லாமல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடவுள்ளது. குவாஹாட்டியிலுள்ள பர்சாபரா கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி நடைபெறவுள்ளது. இந்த சீசனில் சிஎஸ்கே அணிக்கு இது முதல் ஆட்டமாக அமையவுள்ளது. கடந்த சீசனில் போதுமான செயல்திறனை வெளிப்படுத்தாத நிலையில் இந்த ஆண்டில் புதிய வீரர்களுடன் மிகுந்த...
எனது கடின உழைப்​பு, தீவிர பயிற்​சியே வெற்​றிக்​குக் காரணம் என்று ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு அணி​யின் நட்​சத்​திர வீரர் விராட் கோலி தெரிவித்தார். ஐபிஎல் சீசனின் தொடக்க ஆட்​டம் நேற்று முன்​தினம் இரவு பெங்​களூரு​வில் நடை​பெற்​றது. இதில் 6 விக்​கெட் வித்​தி​யாசத்​தில் பெங்​களூரு அணி வெற்றி கண்​டது.​ முதலில் விளை​யாடிய ஹைத​ரா​பாத் அணி, 20 ஓவர்​களில் 9 விக்​கெட் இழப்​புக்கு 201 ரன்​கள் எடுத்​தது. இதைத் தொடர்ந்து விளை​யாடிய பெங்​களூரு...
நடப்பு ஐபிஎல் சீசனில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இன்று (மார்ச் 30) முதல் லீக் ஆட்டத்தில் விளையாட உள்ளது. இந்நிலையில், தங்கள் அணியை கேப்டனாக வழிநடத்த ரியான் பராக் சரியான தேர்வு என ராஜஸ்தான் ராயல்ஸ் பயிற்சியாளர் குமார் சங்கக்காரா தெரிவித்துள்ளார். அந்த அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த சஞ்சு சாம்சன், இந்த சீசனுக்கு முன்னதாக டிரேடிங் முறையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சென்றார். இந்த சூழலில் அணியின்...
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி இம்முறை அனுபவம் இல்லாத ரியான் பராக் தலைமையில் களமிறங்குகிறது. கடந்த சீசனிலும் பெரும்பாலான போட்டிகளுக்கு ரியான் பராக் கேப்டனாக இருந்தார். அந்த சீசனில் ராஜஸ்தான் அணி 4 ஆட்டங்களில் இறுதி ஓவர்களில் தோல்வியை சந்தித்து இருந்தது. இது பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை வெகுவாக பாதித்தது. இதில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு சிறப்பாக செயல்பட ரியான் பராக் முயற்சி செய்யக்கூடும். ரவீந்திர ஜடேஜா, டொனோவன் பெரைரா...
மார்ச் 27, 2016, டி20 உலகக் கோப்பைத் தொடரில் மொஹாலியில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் விராட் கோலியின் கிளாசிக் இன்னிங்ஸ் ஆஸ்திரேலியாவை வீட்டுக்கு அனுப்ப இந்திய அணி அரையிறுதியில் நுழைந்தது. இன்றைய தினத்தில் அந்த கோலி கிளாசிக் பற்றி நினைக்காமல் இருக்க முடியாது. இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி, ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித். ஆஸ்திரேலிய அணியில் உஸ்மான் கவாஜா, ஏரோன் ஃபின்ச், டேவிட் வார்னர், ஸ்டீவ்...
பாகிஸ்தான் சூப்பர் லீக் என்றாலே சர்ச்சைகளின் லீக் என்றாகிவிட்டது. நேற்று முதல் போட்டியிலேயே வெள்ளைப்பந்து பிங்க் நிறப் பந்தாக மாறிய விவகாரம் இப்போது சர்ச்சையாகியுள்ளது. லாகூர் குவாலாண்டர்ஸ் மற்றும் ஹைதராபாத் கிங்ஸ்மேன் அணிகள் மோதிய போட்டியில், சாதாரணமாக வெள்ளையாக இருக்கும் கிரிக்கெட் பந்து, ஆட்டம் நடந்து கொண்டிருக்கும்போதே பிங்க் நிறமாக மாறிய சம்பவம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்ததோடு ஆஸ்திரேலிய பேட்டர் மார்னஸ் லபுஷேனுக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் அணிக்காக விளையாடிய...
ஐபிஎல் டி20 கிரிக்​கெட் தொடர் பெங்​களூரு சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது. தொடக்க நாளில் இரவு 7.30 மணிக்கு நடை​பெறும் ஆட்டத்தில் நடப்பு சாம்​பிய​னான ராயல் சாலஞ்​சர்ஸ் பெங்களூரு (ஆர்​சிபி) அணி, 2016-ம் ஆண்டு சாம்​பிய​னான சன்​ரைசர்ஸ் ஹைதர​பாத் அணி​யுடன் பலப்​பரீட்சை நடத்துகிறது. ஐபிஎல் டி 20 கிரிக்​கெட் திரு​விழா​வின் 19-வது சீசன் பெங்களூரு​வில் உள்ள எம்​.சின்​ன​சாமி மைதானத்​தில் இன்று தொடங்​கு​கிறது. இந்​தத் தொடரில் நடப்பு சாம்பியனான ஆர்​சிபி, தலா...