வங்கதேச அணிக்கெதிரான 2-வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி தனது முதல் இன்னிங்ஸில் 232 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. பாகிஸ்தான் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்டில் வங்கதேசம் வெற்றி பெற்றது. இந்நிலையில் நேற்று முன்தினம் 2-வது டெஸ்ட் போட்டி சில்ஹெட் நகரில் தொடங்கியது.
முதலில் விளையாடிய வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதையடுத்து விளையாடிய...
டி20 கிரிக்கெட் போட்டிகளில் 3 ஆயிரம் ரன்களை எட்டி குஜராத் டைட்டன்ஸ் அணி வீரர் சாய் சுதர்ஷன் சாதனை படைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்தவரான சாய் சுதர்ஷன் கடந்த சில ஆண்டுகளாக குஜராத் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் நடைபெற்ற 60-வது லீக் போட்டியின்போது கொல்கத்தா அணிக்கெதிராக சாய் சுதர்ஷன் 53 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்தப் போட்டியின்போது டி20 கிரிக்கெட்டில் மிகக் குறைந்த...
நடப்பு ஐபிஎல் சீசனில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடனான ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) விளையாடுகிறது. சேப்பாக்கத்தில் நடைபெறும் இந்த ஆட்டம் நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி விளையாடும் கடைசி ஆட்டமாக அமைந்துள்ளது. இதில் தோனி களம் காண்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு சீசனில் சிஎஸ்கே அணி இதுவரை 12 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றியுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. எஞ்சியுள்ள இரண்டு லீக் ஆட்டத்திலும்...
அகமதாபாத்தின் காந்திநகரில் ஆசிய சீனியர் பளுதூகுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் ஆடவருக்கான 71 கிலோ எடைப் பிரிவில் இந்தியாவின் அஜித் நாராயணா ஒட்டுமொத்தமாக 314 கிலோ எடையை தூக்கி வெண்கலப் பதக்கம் வென்றார். கொரிய வீரர் வான் ஜு ரி 315 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் கைப்பற்றினார். சீனாவின் ஜியான் சென் 355 கிலோ எடையை தூக்கி வெள்ளிப் பதக்கம் பெற்றார்.
தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது.
இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு 2-வது சுற்றில் போட்டித் தரவரிசையில் 7-வது இடத்தில் உள்ள இந்தியாவின் லக்ஷயா சென் 21-12, 21-13 என்ற நேர் செட் கணக்கில் சீனாவின் ஜூ சுவான் செனை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் கிடாம்பி ஸ்ரீகாந்த் 16-21, 21-11, 18-21 என்ற செட் கணக்கில் போராடி, 47-ம்...
சர்வதேச வூஷு கூட்டமைப்பு மற்றும் மக்காவ் வூஷு சங்கம் இணைந்து 11-வது சான்டா உலகக் கோப்பை தொடரை மக்காவ் நாட்டில் நடத்தி வருகிறது. கடந்த 11-ம் தேதி முதல் இந்த உலக் கோப்பை தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிருக்கான 52 கிலோ எடைப் பிரிவு இறுதிப் போட்டியின் இந்தியாவின் அபர்ணா, உலக சாம்பியனான வியட்நாமின் தி புவோங்கை வீழ்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.
3-வது ஹெச்சிஎல் தேசிய இரட்டையர் ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் சென்னையில் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் பிரிவில் நேற்று நடைபெற்ற கால் இறுதி சுற்றில் அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஜோடி 11-4, 11-2 என்ற நேர் செட் கணக்கில் ஷுபம், வேதாந்த் படேல் ஜோடியை வீழ்த்தி அரை இறுதிக்கு முன்னேறியது.
கலப்பு இரட்டையர் பிரிவு கால் இறுதியில் வேலவன் செந்தில் குமார், ஜோஷ்னா சின்னப்பா ஜோடி 11-4, 11-5...
ஐபிஎல் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள ஏகானா மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான சிஎஸ்கே அணி, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சிஎஸ்கே அணி 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 5 தோல்விகளுடன் 12 புள்ளிகள் பெற்று பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேற வேண்டுமானால் இன்றைய ஆட்டம் உட்பட எஞ்சியுள்ள...
நடப்பு ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை 6 விக்கெட்டுகளில் வீழ்த்தியது ஆர்சிபி. இந்த ஆட்டத்தில் சதம் விளாசி இருந்தார் விராட் கோலி.
இந்த சீசனின் 57-வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடி. ராய்ப்பூரில் நடைபெற்ற இந்த ஆட்டம் மழை காரணமாக தாமதமாக தொடங்கப்பட்டது. இருப்பினும் ஓவர்கள் குறைக்கப்படாமல் இரவு 8.45 மணி அளவில் சற்று தாமதமாக தொடங்கியது....
தாய்லாந்தின் பாங்காக் நகரில் தாய்லாந்து ஓபன் பாட்மிண்டன் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரரான கிடாம்பி ஸ்ரீகாந்த், போட்டித் தரவரிசையில் 8-வது இடத்தில் உள்ள சிங்கப்பூரின் லோகீன் இயூவை எதிர்த்து விளையாடினார்.
30 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஸ்ரீகாந்த் 21-14, 21-15 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறினார். 2-வது சுற்றில் ஸ்ரீகாந்த், சீன...









