லாகூர்: பாகிஸ்தான் - தென் ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி லாகூரில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் இன்னிங்ஸில் பாகிஸ்தான் அணி 378 ரன்கள் குவித்தது.
இதையடுத்து விளையாடிய தென் ஆப்பிரிக்க அணி 2-வது நாள் ஆட்டத்தின் முடிவில் 67 ஓவர்களில் 6 விக்கெட்கள் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்தது. டோனி டி ஸோர்ஸி 81 ரன்களும், செனுரன் முத்துசாமி 6 ரன்களும் சேர்த்து களத்தில்...
வேல்ஸ் - பெல்ஜியம் அணிகளுக்கு இடையிலான உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று போட்டியின் போது மைதானத்துக்குள் எலி நுழைந்ததால் ஆட்டம் சிறிது நேரம் தாமதமானது.
வேல்ஸ் நாட்டின் கார்டிப் நகரில் நேற்று பிபா உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதி சுற்று ஆட்டத்தில் வேல்ஸ் - பெல்ஜியம் அணிகள் மோதின. பெல்ஜியம் 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்த போது திடீரென கோல் கீப்பர் திபோ கோர்டோயிஸ்...
ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 13 முதல் 15-ம் தேதிக்குள் நடைபெறக்கூடும் என தகவல்கள் வெளியாகி உள்ளன. வீரர்கள் ஏலம் தொடர்பாக அணிகளின் உரிமையாளர்கள் பிசிசிஐ நிர்வாகிகளிடம் பேசி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் ஐபிஎல் ஆட்சிமன்றக்குழு இதுதொடர்பாக இதுவரை எந்தவித அறிவிப்பையும் வெளியிடவில்லை.
மேலும் இம்முறை ஏலம் வெளிநாட்டில் நடைபெறுமா? என்பதும் தெரியவில்லை. கடந்த இரு ஆண்டுகளாக ஐபிஎல் வீரர்கள் ஏலம் வெளிநாடுகளில்தான் நடத்தப்பட்டு வருகிறது....
யஷஸ்வி ஜெய்ஸ்வால் 173*, சாய் சுதர்சன் 87 ரன் விளாசல்: முதல் நாளில் இந்திய அணி 318 ரன் குவிப்பு
admin - 0
மேற்கு இந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 2-வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 2 விக்கெட்கள் இழப்புக்கு 318 ரன்கள் குவித்தது. யஷஸ்வி ஜெய்ஸ்வால் சதம் விளாசி அசத்தினார். அவருக்கு துணையாக விளையாடிய சாய் சுதர்சன் அரை சதம் அடித்தார்.
டெல்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நேற்று தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டனான ஷுப்மன் கில் பேட்டிங்கை தேர்வு...
கிரிக்கெட்டில் சில சமயம் எல்பிடபிள்யூ விஷயத்தில் களத்தில் இருந்த நடுவர் ஏற்கெனவே முடிவு எடுத்திருப்பார். ஆனால் டிஆர்எஸ் முறையில் வேறு மாதிரியான முடிவு வருவது போன்று தெரிந்தாலும் போதுமான ஆதாரங்களுடன் நடுவர் எடுத்த முடிவு தவறு என நிரூபிக்க முடியாத சூழ்நிலை வந்தால் அது அம்பர்யர்ஸ் கால் என்ற முடிவுக்கு வருவார்கள்.
களத்தில் உள்ள நடுவர் எடுத்த முடிவை டிஆர்எஸ் முறையில் மாற்ற வேண்டுமென்றால் சில நிபந்தனைகளை பூர்த்தி செய்ய...
உலக ஜூனியர் பாட்மிண்டன் போட்டி குவாஹாட்டியில் நடைபெற்று வருகிறது.
இதில் கலப்பு அணிகள் பிரிவு அரை இறுதியில் இந்திய அணி நேற்று நடப்பு சாம்பியனான இந்தோனேஷியாவுடன் மோதியது. இதில் இந்திய அணி 35-45, 21-45 என்ற செட் கணக்கில் தோல்வி அடைந்து வெண்கலப் பதக்கம் பெற்றது.
புரோ கபடி லீக் 12-வது சீசனின் பிளே ஆஃப் சுற்று ஆட்டங்கள் மற்றும் இறுதி போட்டி டெல்லியில் நடைபெறும் என போட்டி அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
புரோ கபடி லீக் தொடரின் 3-வது கட்ட போட்டிகள் சென்னையில் நேற்றுடன் நிறைவடைந்தன. இதைத் தொடர்ந்து கடைசிகட்ட லீக் போட்டிகள் இன்று (11-ம் தேதி) முதல் வரும் 23-ம் தேதி வரை டெல்லியில் உள்ள தியாகராஜ் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்நிலையில் இந்தத் தொடரின் பிளே...
இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் அணிகள் இடையிலான 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானத்தில் இன்று காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது.
மேற்கு இந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 140...
பென் ஸ்டோக்ஸ் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி அடுத்த மாதம் ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பாரம்பரியமான ஆஷஸ் டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடரின் முதல் போட்டி வரும் நவம்பர் 21-ம் தேதி பெர்த் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் விளையாடுவது சந்தேகம் என தகவல்கள் வெளியாகி உள்ளன. முதுகு வலி காயத்தில் இருந்து அவர், இன்னும் முழுமையாக குணமடையாததே...
மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் லீக் ஆட்டத்தில் இன்று இந்தியா, தென் ஆப்பிரிக்க அணிகள் மோதவுள்ளன. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்திலுள்ள மைதானத்தில் இந்த ஆட்டம் பிற்பகல் 3 மணிக்கு தொடங்கவுள்ளது.
ஏற்கெனவே நடைபெற்ற 2 லீக் ஆட்டங்களிலும் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று 4 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது. இதுவரை நடைபெற்ற ஆட்டங்களில் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர், அதிரடி வீராங்கனை ஸ்மிருதி மந்தனா ஆகியோரிடமிருந்து...










