கத்தாரில் உள்ள தோகா நகரில் வரும் 14-ம் தேதி முதல் 23-ம் தேதி வரை வளர்ந்து வரும் வீரர்களுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெறுகிறது. இதில் இந்தியா ‘ஏ’ உள்ளிட்ட 8 அணிகள் கலந்து கொள்கின்றன. இவை 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் இந்தியா ‘ஏ’, பாகிஸ்தான் ‘ஏ’, ஐக்கிய அரபு அமீரகம் ‘ஏ’, ஓமன் ‘ஏ’ ஆகிய அணிகள் இடம் பெற்றுள்ளன.
இந்தியா ‘ஏ’ அணி...
உலகக் கோப்பை தொடரில் ஆல்ரவுண்டரான இந்தியாவின் தீப்தி சர்மா, பேட்டிங்கில் 215 ரன்களும் பந்துவீச்சில் 22 விக்கெட்களையும் வேட்டையாடி இருந்தார். இதனால் அவர், தொடர் நாயகியாக தேர்வு செய்யப்பட்டார்.
தீப்தி சர்மா கூறும்போது, ‘‘உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது இன்னும் எனக்கு ஒரு கனவு போலவே தோன்றுகிறது. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் பங்களிப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.
சவால்மிகுந்த ஆட்டங்களை எனக்குப் பிடித்தமானவை. சூழ்நிலைக்கு ஏற்ப விளையாட வேண்டும்...
ஐசிசி மகளிர் ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் 52 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்க அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளது இந்திய அணி. இந்திய வெற்றி குறித்து இந்திய அணி வீராங்கனைகள் தெரிவித்தது:
ஸ்மிருதி மந்தனா: இந்த தருணத்தை மறக்கவே முடியாது. இன்னும் 45 நாட்களுக்கு எனக்கு இந்த நினைவுகள் இருக்கும். 45 நாள் வரை ஒவ்வொரு இரவும் தூங்காமலேயே இந்த...
நடப்பு மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடரில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ஹர்மன்பிரீத் தலைமையிலான இந்திய அணி. இந்நிலையில், அவர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர் மற்றும் மிதாலி ராஜ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சச்சின் டெண்டுல்கர்: 1983 உலகக் கோப்பை ஒரு முழு தலைமுறையை பெரிய கனவுகளை காணவும், அந்த கனவுகளைத் துரத்தவும் தூண்டியது. தற்போது, நமது மகளிர் கிரிக்கெட் அணி உண்மையிலேயே சிறப்பான ஒன்றைச்...
நடப்பு மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது இந்திய கிரிக்கெட் அணி. இந்தப் போட்டியில் 58 ரன்கள் மற்றும் 5 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தி இருந்தார் இந்தியாவின் தீப்தி சர்மா.
நவி மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் 299 ரன்கள் என்ற இலக்கை தென் ஆப்பிரிக்க அணி விரட்டியது....
நவி மும்பையில் நடந்த மகளிர் உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை 52 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி உலக சாம்பியன் ஆகியிருக்கிறது இந்திய அணி. இதில் முக்கியப் பங்களிப்பாக பேட்டிங்கில் தொடக்க வீரராக இறங்கி ஷெஃபாலி வர்மா அடித்த 87 ரன்களும், பிறகு அவர் சுழற்பந்து வீச்சில் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதும் ஆட்டத்தில் திருப்புமுனையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து ‘இது ஷெஃபாலியின் நாள் என்று எனக்குத் தெரியும்’ என்று...
தென் ஆப்பிரிக்க ஏ அணியுடனான முதலாவது டெஸ்ட் போட்டியில் இந்திய ஏ அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் தென் ஆப்பிரிக்க ஏ அணி 309 ரன்களும், இந்திய ஏ அணி 234 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தன. இதைத் தொடர்ந்து 2-வது இன்னிங்ஸை விளையாடிய தென் ஆப்பிரிக்க ஏ அணி 199 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதைத் தொடர்ந்து இந்திய...
ஜெர்மனியின் சார்புரூக்கன் நகரில் நடைபெற்று வரும் ஹைலோ ஓபன் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா தோல்வி கண்டு வெளியேறினார்.
நேற்று முன்தினம் நடைபெற்ற மகளிர் பிரிவு ஒற்றையர் அரை இறுதிப் போட்டியில் இந்தோனேசியாவின் புத்ரி குஸுமா வர்தானி 21-7, 21-13 என்ற நேர் செட்களில் இந்தியாவின் உன்னதி ஹூடாவை வீழ்த்தினார்.
மேற்கு இந்தியத் தீவுகள் அணியுடனான சர்வதேச டி20 தொடரில் பங்கேற்கும் நியூஸிலாந்து கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடர் வரும் 5-ம் தேதி முதல் 13-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
நியூஸிலாந்து அணி விவரம்: மிட்செல் சாண்ட்னர் (கேப்டன்), மைக்கேல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், டெவன் கான்வே, ஜேக்கப் டஃப்பி, ஜாக் பவுல்க்ஸ், கைல் ஜேமிசன், டேரில் மிட்செல், ஜிம்மி நீஷம், ரச்சின் ரவீந்திரா, டிம் ராபின்சன், டிம்...
தமிழக அணிக்கெதிரான ரஞ்சி டிராபி கிரிக்கெட் லீக் ஆட்டத்தில் விதர்பா அணி முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட் இழப்புக்கு 211 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தப் போட்டி கோயம்புத்தூரில் நடைபெற்று வருகிறது. முதல் நாள் ஆட்டத்தில் தமிழக அணி 4 விக்கெட் இழப்புக்கு 252 ரன்கள் எடுத்திருந்தது. இந்நிலையில் நேற்று நடைபெற்ற 2-ம் நாள் ஆட்டத்தில் தமிழக வீரர்கள் ஷாருக் கான் 0, பாபா இந்திரஜித் 94 ரன்களுடன் தொடங்கினர்.
இந்திரஜித் 96...










